Category Archive: முன்னுரை

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

1998 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத பின்மதியத்தில் நடந்த நீண்ட உரையாடல் ஒன்றின் முடிவில் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியின் முதுநிலை தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் திரு.சிவராஜன் அவர்கள் என்னிடம் சொன்னார் – “நீ ஒரு சிறந்த பயிற்றுனராக வர முடியும் என நம்புகிறேன்”. முதுநிலை மாணவனாக அதற்கு முந்தைய நொடி வரை நான் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறேன் என்பது குறித்த எண்ணம் ஏதும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த நொடியிலிருந்து இருபது ஆண்டுகளைத் தாண்டிய இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129136/

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

2006ஆம் ஆண்டு முதல் இணையத்தில் எழுதி வருகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் முன் கைப்பிரதியாக எழுதி வைத்திருந்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் தட்டச்சு செய்து என் வலைப்பக்கத்தில் பதிந்தேன். அடுத்தடுத்து, வலசை, வார்த்தை, சொல்வனம், பண்புடன், திண்ணை, பதாகை, தமிழினி, அரூ போன்ற இதழ்களில் சிறியதும் பெரியதுமாகபுனைவுகள் எழுதினேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகுஅச்சில் வெளியாகும் முதல் புத்தகம் இது. வளர்ப்பு நாயைப் போல நாளின் கடமைகள் விலகியதும் வாசல் வந்து வரவேற்று, சோம்பித் திரிந்த நேரத்தில் என் மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129152/

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

என்னை ஆளாக்கிய விசைகளில் தலையாயது மதுரை என்ற நகரம். பதினான்கு வயது முதல் இருபத்தோரு வயது வரை இந்த நகருக்குள் ஒரு பெண் குழந்தைக்கு எந்தளவுக்கு சாத்தியமாகுமோ அந்தளவுக்கு அலைந்து திரிந்திருக்கிறேன். தெய்வச்சிலைக்கெதிராக பொறிக்கப்பட்டு தினம்தினம் அதன் முகத்தை ஏந்தும் கண்ணாடியில் நம்முடைய முகத்தைக் காணும்போது ஏற்படும் துணுக்குரலை இந்த நகரத்தினுள் அமிழும் தோறும் என் தன்னிலையாக உணர்ந்திருக்கிறேன். மதுரை வரலாற்றாழமும் பண்பாட்டாழமும் உடைய தொன்மையான ஊர். காலாதீதத்தின் ஆழத்தை, அழுத்தத்தை உணராமல் இந்நகருக்குள் சற்றேனும் உணர்வுண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129141/

’அகதி’ ராம்குமார் முன்னுரை

கோவையில் நடந்த ஒரு சிறிய புத்தக விழாவில் ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதை நிச்சயம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது நான் பள்ளி முடித்த நேரம். கையில் பணம் இல்லை. அம்மாவின் வங்கி அட்டை மட்டும் இருந்தது. அம்மாவை தொலைபேசியில் அழைத்து அதை வாங்கிக்கொள்ளவா என்று கேட்டேன். ‘அதுக்கென்னடா….எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்’ என்றார். அன்று நான் கேட்டது ஐநூறு ரூபாய். ஒரு நடுத்தர குடும்பமான எங்களுக்கு அதுவே அதிகம்தான். இருந்தாலும் தயங்காமல் வாங்கச் சொன்னதற்கு அன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129073/

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

தற்கால ஆங்கில இலக்கியத்தில் சிறுகதைகளின் இடம் அநேகமாக இல்லாமல் ஆகியிருக்கும் ஒரு சூழலில் 2000க்குப் பிறகு ஒரு சிறு அலையைப் போல புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் மேலெழத் தொடங்கியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் சிறந்த ஆங்கிலச் சிறுகதைகளின் பட்டியலை நோக்குங்கால் பெருவாரியான சிறந்த கதைகள், விருது பெற்றவைகள் புலம் பெயர்ந்தவர்களின் கதைகளாகவே இருக்கின்றன. இவர்கள் அகதிகளாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ 80-களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தவர்களின் முதல் தலைமுறை மக்கள். இவர்கள் மேற்கத்திய குடிமகன்களாகவே வளர்ந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129070/

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

பால்யகாலச் சித்திரங்கள் தொடர்ந்து ஆழ்மனதில் வண்ணம் உலராமல் தங்கி நிற்பவை. வயதேறும் தோறும் ஆழம் கொள்பவை. பிற்கால உலக அனுபவங்களை ஆழ்மனச் சித்திரங்களைக் கொண்டுதான் உரசிப் பார்த்துக் கொள்கிறோம். நல்லவை அல்லவை எனப் பிரித்துப் பார்ப்பதும் ஏற்பதும் மறுப்பதுமான உளத் தீர்மானங்களை இவையே உருவாக்கித் தருகின்றன. மனிதனின் அகத்தில் இவை நிகழ்த்தும் மாற்றங்களே அவனது குணாம்சங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன. சமூகத்தின் மீதான பார்வையும் அதனுடனான சமருக்கும் சமரசத்துக்குமான கருவிகளையும் காப்புகளையும் உருவாக்கித் தருவதும் இவையே. பசி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129045/

‘தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

. உலகின் பல்வேறுபட்ட படைப்பாளிகளின் படைப்புகளை படிக்கும்போது வாழ்வின் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வு, நிலைகுலைவுகள் ஆகியவற்றை அவர்கள் காண்பிக்கும் காட்சிபடிமங்களும் பல்வேறு கோணங்களும், அவர்களுடைய கலாச்சாரம் வாழ்நிலை சூழல் மதம் மற்றும் அரசியல் சார்ந்து பிரதிபலிப்பதை பார்த்து மொழிபெயர்க்க ஆவல் கொண்டேன். இத்தொகுப்பில், புனைவுகதைகளில் உள்ள உணர்வு வித்தியாசங்களுக்காகவும், படைப்பாளிகளின் படைப்புப் பார்வையில் பெண் எனும் பிரகிருதியை அவர்கள் அணுகும் விதங்களுக்காகவும் என் ரசிப்பின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளேன். கட்டற்ற வேட்கையையும், உடலை கொண்டாடும் போக்கையும், மாயா யதார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129012/

கூண்டுகள் விடுதலைகள்

    ஆர்வமூட்டும் வாசிப்புத்தன்மையும் சமூக ஆவணத்தன்மையும் எந்த முயற்சியும் இன்றி அவற்றைக் கடந்துசெல்லும் வாழ்க்கைத்தரிசனமும் கொண்ட ஒரு நாவலை அதன் முகப்பில் அமர்ந்துகொண்டு வரையறுக்கவோ விளக்கவோ முயல்வது என்பது வாசகர்களுக்கு நலம் பயப்பதாகாது. ஆனாலும் சோ.தர்மனின் இந்நூலைப்பற்றிய சில மதிப்பீடுகளை முன்வைக்க விரும்புகிறேன்.   ஏனென்றால் நாம் பாலில் வெண்ணை மிதந்து கிடக்கவேண்டும் என விரும்பும் வாசகர்கள். பாலில் கலந்திருக்கும் வெண்ணையை எடுக்கும் கடைசலில் பயிற்சி இல்லாதவர்கள். யதார்த்தவாத அழகியல் கொண்டது இந்நாவல். ஆகவே ‘நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127734/

பிரதமன் சிறுகதைத்தொகுப்பு

பிரதமன் வாங்க சிறு தருணங்கள்  [நற்றிணை வெளியிடாக வந்திருக்கும் பிரதமன் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை] வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது அந்தப் பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக்கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர்செய்துகொண்டவை. அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர்வினைகளும்கூட. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117004/

கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்  

[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என  அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116317/

Older posts «