Category Archive: முன்னுரை

பிரதமன் சிறுகதைத்தொகுப்பு

பிரதமன் வாங்க சிறு தருணங்கள்  [நற்றிணை வெளியிடாக வந்திருக்கும் பிரதமன் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை] வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது அந்தப் பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக்கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர்செய்துகொண்டவை. அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர்வினைகளும்கூட. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117004

கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்  

[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என  அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116317

அகச்சான்றின் காட்சிவடிவங்கள்

ரிஷான் ஷெரீப் எழுதிய சினிமாக்கட்டுரைகள் – நேர்காணல்களின் தொகுதியான ‘ஆழங்களினூடு…’ என்னும் நூலுக்கான முன்னுரை. வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை வெளியீடு பார்வதிபுரத்தைச் சேர்ந்த பழைய தோழி ஒருத்தி லண்டனில் பணிபுரிகிறார். கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கே கல்லூரி ஆசிரியை. இங்கே இருந்தபோது இலக்கிய ஆர்வம்கொண்டிருந்தார். தமிழிலிருந்து சில கதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல குண்டான அழகி. நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் பார்த்தபோது அதே உற்சாகத்துடன் அவர் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்ட இலக்கியத்தைப் பற்றிப் பேசினார். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116315

தன்மீட்சி 

வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் எதிலாவது மீண்டு மீண்டு அடுத்ததை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மீட்சியின் தொடரே வாழ்க்கை. ஒவ்வொருநாளும் காலையில் போர்வையை காலால் விலக்கி தூங்கி எழுவது ஒருவகை பிறப்பு என நான் நினைப்பதுண்டு. காலால் உதைத்து எம்பி எழுந்து முகம் வெளிக்காட்டி கருவறைநீங்குதல்.  இருண்ட சிறையிலிருந்து கருப்பாதை வழியாக ஒரு பயணம். ஓர் அதிர்ச்சி, கண்கூச்சம், மூச்சுத்திணறல். சூழ்ந்துகொள்ளும் புதிய உலகம். வாழ்க்கையின் ஒவ்வொரு கண்டடைதலும் ஒரு வகை மீட்சி. அரிதாக நாம் ஆழமாக சிக்கிக்கொள்கிறோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116673

யானைவந்தால் என்ன செய்யும்?

இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் மிகுந்த ஆசைப்பட்டுத்தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், முயற்சிசெய்துகூட பார்த்திருப்பார். பெரியமனிதர். ஆனால் இடுக்கண் வந்து கொஞ்சநாள் கழித்து நகைப்பது சாத்தியம்தான் என்று எனக்கும் தோன்றுகிறது. சொல்லப்போனால் பழைய இடுக்கண்களைப்போல சிரிப்பு வரவழைப்பது ஏதுமில்லை. முதல்விஷயம் நாம் அவற்றைக் கடந்து வந்திருக்கிறோம். உயிரோடு நலமாக இருக்கிறோம். ஊழையும் உப்பக்கம் கண்டுவிட்டால் அதன்பிறகு ஊழாவது கூழாவது. கேரளத்தில் யானை அதிகம். மிகப்பெரிய துன்பத்தை யானைக்கு உவமிப்பதை அங்கே நாட்டார் சொலவடையாகப் பார்க்கலாம். மலையாளிகளுக்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68601

சாக்கியார் முதல் சக்கரியா வரை

 [ 1 ] மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/462

காட்டின் சொல்

வெண்முரசு ஒரே வரலாற்றுநிகழ்வை நோக்கி வெவ்வேறு பெருக்குகளாகச் சென்றுகொண்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உரிமைப்போரும் விளைவான ஆணவச்சிக்கல்களும் ஒரு கதை. அன்றைய பாரதத்தில் இருந்த தொன்மையான அரசகுடிகளுக்கும் பொருளியல் மலர்ச்சியின் விளைவாக எழுந்துவந்த புதிய அரசகுடிகளுக்கும் இடையேயான அரசியல்போர் இன்னொரு கதை. அதேசமயம் அது மாபெரும் தத்துவப்போர் ஒன்று நேரடிப்போராக முனைகொண்டதும்கூட. அந்தத்தத்துவ முரண்பாட்டின் தொன்மை நோக்கிச் செல்கிறது கிராதம். சொல்வளர்காடு வேதம் மருவியகாலகட்டத்தின் தத்துவப்பூசல்களின் விரிவான சித்திரத்தை அளித்தது. கிராதம் மேலும் முன்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/98484

காட்டிருளின் சொல்

இளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பிடித்து காதுகுடைந்து மயங்கும் காட்டாளனைப் பார்த்து சிரித்துத் துவண்டிருக்கிறேன் பின்னர் காட்டாளன் அர்ஜுனனுக்கு வழங்கிய பாசுபதம் என்பது ஒரு தத்துவம், ஒரு வழிபாட்டு முறை எனத் தெரிந்துகொண்டபோது அந்த கதகளி என்னுள் பலவாறாகத் திறந்துகொள்ளத் தொடங்கியது. நம் மரபின் அடித்தட்டில் இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96609

சொல்தளிர்க்கும் பாதை

மகாபாரதத்தின் வனபர்வம் அனேகமாக முழுமையாகவே பிற்சேர்க்கை என்பது ஆய்வாளர் கூற்று. அதில் பாரதத்தின் கதைச்சரடு இல்லை. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றார்கள் என்னும் கதையை ஒரு களமாகக் கொண்டு இந்தியமரபில் புழங்கிய அத்தனை கதைகளையும் அதில் தொகுக்க முயன்றிருக்கிறார்கள். யக்ஷனின் கேள்விபதில் போல பல்வேறு நெறிநூல்களை உள்ளே பொருத்தியிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பகுதி வெறும் தகவல்கள். தீர்த்தங்கள் மற்றும் முனிவர்களின் புகழ்கள். அவற்றை எவ்வகையில் வெண்முரசுக்குள் கொண்டுவருவது என்னும் எண்ணம் என்னை சிலநாள் அலைக்கழித்தது. அப்போது தோன்றியது அச்செய்திகளை பயன்படுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96580

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/204

Older posts «