Category Archive: மருத்துவம்

இவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு

இவான் இல்யிச் எழுதிய ‘மருத்துவ இயலின் எல்லைகள்’ [Medical Nemesis] ன்ற நூல் 1975 ல் வெளிவந்தது. இந்நூலை நான் அது வந்து பத்தாண்டுகளுக்குப் பின் படித்தேன். அந்த இளம்வயதில் என் அடிப்படை ஐயங்களுக்கு அழுத்தமான விடையளிக்கக் கூடியதாகவும் மருத்துவம், உடல்நலம் பற்றிய ஓர் நிலைபாட்டை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தது அந்நூல். பலமுறை விரிவான குறிப்புகள் எடுத்துக் கொண்டு அதை கிட்டத்தட்ட கற்றிருக்கிறேன். இன்று இருபதுவருடங்கள் கழித்து இக்கட்டுரைக்காக அந்நூலை மீண்டும் புரட்டிப் பார்த்தபோது அவர் சொன்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3402

அரதி

அன்புள்ள அண்ணணுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது? அன்புடன் நடராஜன்   அன்புள்ள நடராஜன் எதிராஜ், நீங்கள் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1245

கைதோநி

தலையில் தேய்க்கும் எண்ணை விஷயத்தில் மலையாளிகளுக்கு உள்ள அதீதமான கவனம் ஒரு முக்கியமான பண்பாட்டுக் கருப்பொருள். தினமும் தலையில் எண்ணை தேய்த்துக் குளிப்பது அவர்களின் வழக்கம். பழைய கால ஆவணங்களில் ஒரு நபருக்கான குறைந்தபட்சச் செலவைக் குறிப்பிடும்போது இரண்டுநேர உணவு, தலைக்கு எண்ணை, வருடத்திற்கு இரு துணி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. பொதுவாக இது தேங்காய் எண்ணைதான். பச்சை எண்ணை தேய்க்கும் வழக்கம் அனேகமாக கேரளத்தில்  கிடையாது. தினமும் எண்ணைதேய்த்துக்குளிக்காத பிற மானுட விரிவை முழுக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1847

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

நான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு. நித்யாவின் முதன்மை மாணவர்களில் ஒருவரும் இப்போது ஊட்டி நித்யாகுருகுலத்தின் பொறுப்பில் இருப்பவருமான ஸ்வாமி தன்மயா பூர்வாசிரமத்தில் ஓர் அலோபதி மருத்துவர் [டாக்டர் தம்பான்]. சென்ற இருபது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/382

ஹோமியோ அறிமுகம்

ஹோமியோபதி பற்றி இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் வாசித்த ஒரு கட்டுரை அதன் மீது எனக்கிருந்த எல்லா நம்பிக்கையையும் அழித்தது. அது ஒரு placebo முறை மட்டுமே என எண்ண ஆரம்பித்தேன். ஏனென்றால் எனக்கு அதற்குமுன் அம்மருத்துவமுறை அளித்த அனுபவங்களும் மிக எதிர்மறையானவை. அது எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்றே அறிந்திருக்கிறேன் ஹோமியோபதியின் அடிப்படை நூல்கள் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை ஆம்னிபஸ் இணையதளத்தில் வாசித்தேன். நல்ல கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/36073

ஆட்டிசம் – கடிதங்கள்

அன்பின் ஜெமோ, வணக்கம். பிரகாஷ் எழுதிய கடிதத்தை தங்களின் தளத்தில் வெளியிடவில்லை எனில் சுகேஷ் குட்டனைப் பற்றி, இன்னும் தாமதமாகவே அறிந்திருப்பேன். பகிர்தலுக்கு நன்றி! இங்கே தமிழகத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட ஆட்டிசத்தின் ஒரு வகையான பிடிடி (PDD)யினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் காட்டினார்கள். அந்தக் குழந்தையின் தாய் குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து அது பிடிடியாக இருக்கலாம் என்று நான் கணிக்கிறேனே தவிர அவர்கள் இப்பெயரை உபயோகிக்கவில்லை. ஒருவேளை அவர்களே அதை சரியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27974

நம் அறிவியல்- கடிதம்

அன்புள்ள ஜெ, நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது. வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு  உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது,  ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத்  தெரிய வந்தது. சூடுபட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20555

இந்திய அறிவியல் எங்கே?

அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர்  கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக   அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19636

அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6

அயோத்திதாச பண்டிதரின் உரைகள் இந்தியமரபில் பொதுவாக ஓர் அறிஞனின் செயல்பாடு என்பது இரண்டு வகைப்பட்டதாக இருப்பதைக் காணலாம். ஒன்று உரை எழுதுதல்.  இன்னொன்று புராணம் எழுதுதல். நீண்ட மரபுள்ள ஒரு பண்பாட்டின் இரு இயல்பான அம்சங்கள் இவை.  உரை,செவ்வியல் மரபைக் கையாள்வது, புராணம்,நாட்டார் மரபைச் செவ்வியலாக்குவது. இரண்டுமே ஒன்றையொன்று நிரப்பும் செயல்பாடுகள். அயோத்திதாச பண்டிதருக்கு முந்தைய அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இவ்விரண்டையும்தான் செய்திருக்கிறார்கள். ஏன் என்பது முக்கியமான வினா. இங்கே மரபு பிரம்மாண்டமாகப் பின்னால் எழுந்து நிற்கிறது. நீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18504

இயற்கை உணவு, கடிதம்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே நான் தங்களின் இயற்கை உணவு : என் அனுபவம் கட்டூரையை படித்தேன், நான் கடந்த 40 வருடகாலமாக இயற்கை உணவை பயன்படுத்துகின்றேன், மேலும் யோகாவில் முனைவர் பட்டம் பெற்று முழு நேர யோக பயிற்யாளராகவும், இயற்கை உணவு ஆராய்ச்சியாளராகவும் இருக்கின்றேன்.இயற்கை உணவு மற்றும் யோகா சார்ந்து சில புத்தகங்களும் எழுதியுள்ளேன். அந்த கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட சிவ சைலம் இராமகிருஷ்ணன் அவர்கள் தான் என் குரு. நான் அவருடன் கிட்டத்தட்ட 6 வருடங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17074

Older posts «