Category Archive: பொது

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி! [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   யாதேவி பல்வேறு கதைகளுடன் என்னை தொடர்புகொள்ளச் செய்தது. வாசிப்பில் இது முக்கியமான விஷயம். நிறையக் கதைகளுடன் தொட்டுத்தொட்டு மாலையாகத் தொடுத்துக்கொள்வது. உடனடியாக ஞாபகம் வரும் கதை, வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்னும் கதைத்தொகுதியில் கி.ராஜநாராயணன் எழுதியது. அதில் ஒரு விபச்சாரியைப்பற்றிச் சொல்லும்போது பசிக்குச் சாப்பாடு போடுபவள்போலத்தான் காமத்திற்கு இரைபோடுபவளும். அவளும் ஒரு பசியைத்தான் தணிக்கிறாள். அதுவும் பெரிய கொடைதான் என்று எழுதியிருப்பார்.   ஜி.நாகராஜன் ஒரு கதையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129828

குறளின் மதம் – கடிதங்கள்

  சமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர் அன்புள்ள ஜெ..   குறள் அதன் ‘பக்தர்களால்’ இன்று ஒரு நவீன மதநூலாக ஆக்கப்படுகிறது.   என்ற உங்கள்,வரி யோசிக்க வைத்தது   குறளை மத நூலாக்க முயல்பவர்கள் அதன் பக்தர்கள் அல்லர்கள்.  உண்மையில் குறள் அவர்களுக்கு பிடிக்கவில்லை.   குறள் ஒரு பிற்போக்கான நூல்தான்.  ஆனால் கீதை போன்ற அப்பட்டமான பிற்போக்கான நூலை விட ஓரளவு மட்டுமே பிற்போக்குத்தன்மை கொண்ட குறள் தேவலாம் என போனால் போகிறது என்ற அளவில்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128335

ஈரோடு சந்திப்பு பற்றி

  ஈரோடு சந்திப்பு பற்றி சில ஐயங்கள் வந்தன. இது தொடர்ந்து நிகழ்வதனால் எல்லாருக்கும் இது எப்படி நிகழும் என தெரியும் என்று நினைத்தேன். அது பிழை என தெரிகிறது   1. நான் இரண்டுநாட்களும் புதிய வாசகர்களுடன் இருப்பேன், அவர்களுடன் தங்குவேன், உரையாடுவேன்   2. பெண்களுக்கு தனியாக தங்க இடம் ஒதுக்கப்படும்   மார்ச் 7,8 [சனி ஞாயிறு] இரண்டு நாட்கள் சந்திப்பு நிகழ்கிறது.   முன்னர் புதியவாசகர்களாக வந்தவர்கள் பலர் இன்று எழுத்தாளர்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129823

இளங்கனிவும் முதிர்கனிவும்

  தேவதேவனுக்கு ஓர் இணையதளம்   பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கலாம். அற்புதமான இயற்கை அழகுகொண்ட நிலம் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பசுங்காடுகள், புல்வெளிகள், ஊழ்கமரங்கள், நீரோடைகள். நீலப்பச்சை, தளிர்ப்பச்சை, மலர்வண்ணங்கள், பூச்சிகளின் வண்ணங்கள், பறவைக்குரல்கள் என விரிந்த வெளி. நடுவே ஒரு வயலில் ஒருவர் ஏரோட்டிக்கொண்டிருப்பார். மண்வெட்டியால் கிளறிக்கொண்டிருப்பார். ஒரு வகை ஒவ்வாமை வந்து உடலை உலுக்கச் செய்யும்.   அதன் நியாயங்கள் வேறு. அக்கணம் ஒரு தூய விலங்காய் நாம் அச்செயலை மறுப்போம். ஒருமுறை என்னுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129899

இலக்கியவிமர்சனத்தில் வன்மம்

கவிதையில் அசடுவழிதல் கவிதை, ஆளுமை, பாவனைகள் அன்புள்ள ஜெ..   மனுஷ்யபுத்திரனின் அடாவடிகள் குறித்து நான் அனுப்பும் எந்த அஞ்சல்களையும் நீங்கள் பிரசுரிப்பதும் இல்லை. எதிர்வினையாற்றுவதும் இல்லை.அது உங்கள் விருப்பம்.  எனக்கு அதில் ஏமாற்றம் இல்லை   நான் என் நியாயமான கவலையைத்தான் பகிர்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.தனக்கு சேர வேண்டிய நியாயமான ராயல்ட்டியை கேட்கும் எழுத்தாளர்களை கவிதை எழுதி அவமானப்படுத்துவதோதனக்கு அடையாளம் அளித்த சுந்தர ராமசாமியையும் சுஜாதாவையும் மறந்துவிட்டு தன்னை உருவாக்கியவர் கலைஞர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129898

பாவம் மேரி

  ஆலிவர் வெண்டல் ஹோம்ஸின் [சீனியர்]  ‘மேரி ஜோக்ஸ்’ பிரபலம். அமெரிக்க நகைச்சுவைத் துணுக்கு நூல்களில் அவ்வப்போது காணப்படும்   மேரி கள்ளம் கபடமற்ற , அப்பழுக்கற்ற தேவதை. மாதிரிக்கு இரண்டு   மேரி அழுதபடி ஓடிவந்தாள்   “என் ஏஞ்சல், ஏன்டி அழறே?” என்றாள் அம்மா   “ஹாரி என் பொம்மையை உடைச்சிட்டான்”   “அடப்பாவி… என் செல்லத்தின் பொம்மையை ஏண்டா உடைச்சே?”   அடிவிழுகிறது   அழுதபடி ஹாரி பேசமுற்பட அம்மா கூவினாள்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129903

யா தேவி – கடிதங்கள்-5

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   யா தேவி, எளிய கதையைப்போல் இருக்கும், ஆனால் சத்தியத்தில் அப்படியல்லாத இக்கதை வாசித்து இரண்டு நாட்களாகியும் உள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நோயாளி பாலியல் படங்களில் நடித்த பெண், ஆயுர்வேத சிகிச்சை அளிப்பவரோ சக்தி உபாசகர்,  இருவருக்குள்ளான உரையாடலிலேயே கதை நகர்கின்றது.   பாலியல் தொழிலாளியான அவள் உடலில் நோயை உண்டாக்கிய ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு பிறகு, உழிச்சல் சிகிச்சையில், ஆன்மாவை மீட்டெடுக்கும் ஆண் ஒருவர், உடலைத்தொட்டு செய்யும் சிகிச்சைக்கு அவள் காட்டும் எதிர்வினையும், உரையாடல்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129847

அஞ்சலி

  சென்னை இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் சந்திரன் தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். இவர்கள் எவரையுமே நான் சந்தித்ததில்லை.   இந்தியன் படத்துடன் தொடர்புடையவன் என்றவகையில் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்த செய்தி   மறைந்தவர்களுக்கு அஞ்சலி

Permanent link to this article: https://www.jeyamohan.in/129911

நிலம், பெண், குருதி

1981 வாக்கில் பூலான்தேவியின் ஒரு புகைப்படம் வெளியாகி நாளிதழ்களில் பிரபலமாகியது. அதுதான் அவருடைய முதல் புகைப்படம். அப்போது குமுதம் அரசு பதில்களில் பூலான்தேவி பற்றி ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த அரசு ‘அவருடைய புகைப்படம் வெளியாகும் வரை கொள்ளைராணி பூலான் தேவி என்று சொன்னபோது ஒரு கிளுகிளுப்பு இருந்தது. அழகான இளம்பெண் என நினைத்திருந்தேன். புகைப்படத்தில் களைத்த அவலட்சணமான பெண்ணை பார்த்ததும் ஆர்வம் போய்விட்டது’ என எழுதியிருந்தார்.   இன்று யோசிக்கையில் இந்தப்பதிலில் உள்ள சாதிமேட்டிமை, இனவெறிநோக்கு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129815

அழகியல்களின் மோதல்- கடிதங்கள்

அழகியல்களின் மோதல் அன்புள்ள திரு.ஜெயமோகன்,     விரிவான விளக்கத்துக்கு நன்றி.     குறிப்பாக கம்பனைக் சுட்டியது பல விஷயங்களைத் துலங்கச் செய்தது.     டால்ஸ்டாய் நிராகரிப்பது ஷேக்ஸ்பியரையா அக்காலகட்டத்தின் அழகியலையா, என்ற நோக்கில் அக்கட்டுரையை மீண்டும் படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.     தன் காலத்தவரைவிட ஷேக்ஸ்பியர் அத்தனை உயர்வில்லை, என்று கருதப்பட்டதாக சொல்லிச்செல்கிறார் டால்ஸ்டாய். யாரெல்லாம் அப்படி சொன்னார்கள், ஏன்? அதில் இவருக்கு உடன்பாடு உண்டா என்றெல்லாம் அந்த புள்ளியில் நின்று விரிக்கவிலை.ஷேக்ஸ்பியரின் சமகால …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129840

Older posts «

» Newer posts