Category Archive: பொது

கங்கைக்கான போர் -கடிதங்கள்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் அன்புள்ள ஜெ   சோர்வடைய வைத்த பதிவு – இரண்டு பேரின் உயிரிழப்பு, மூன்றாவது ஒருவரின் உயிரும் பணயம் வைக்கப்பட்டுள்ளது… என்னதான் செய்ய முடியும்..   நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2014 தேர்தல் ஒரு வித நம்பிக்கையை, அரசியல்-லட்சியவாத அலையை எழுப்பி இருந்தது – ஆம் ஆத்மி, மோடி ஆகியோரின் மூலம்.. ஆனால், மீண்டும் மீண்டும் வரலாறு உரைப்பது ஒன்று தான் – அரசியல் வேறு லட்சியம் வேறு.. ஆகவே, “எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121047

எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள்- கருத்தரங்கு

  எம் கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு. ஏப்ரல் 20, 2019  கோவை இந்துஸ்தான் கலைக்கல்லூரி அரங்கு

Permanent link to this article: https://www.jeyamohan.in/119930

செல்வது மீளாது

  பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம் கணியாகுளம்,பாறையடி… கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி காலைநடையில்… பார்வதிபுரம் பாலம் செவ்வல்லியின் நாள் முதல் மழை வரம்பெற்றாள் குன்றுகள்,பாதைகள் இடவப்பாதி குருகு   இன்று காலை நடை வந்தபோது திடீரென்று ஓர் எண்ணம், நாம் பார்க்கும் காட்சிகள் எப்போதும் இங்கிருக்கும் என நினைத்துக்கொள்கிறோம். ஒவ்வொருநாளும் ஒரே காட்சியைக் காண்பதாக எண்ணி மயங்குகிறோம். நடக்க வந்து மரங்களை, கட்டிடங்களை, சாலைகளை பார்த்து இருக்கிறாயா என உளமுசாவிக்கொள்கிறோம். உண்மையில் இந்தக்காட்சி மிகமிக விரைவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121033

அரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2

  அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  உமா ரமணன்   அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்தொடர்ச்சி   அவன்   தன்ராஜ் மணியின் இந்த கதை இயந்திரங்களுக்கு மனிதர்களின் உள்ளுணர்வை ஊட்டுவதையும், கூட்டு நனவிலி அமைப்பை உருவாக்குவதை பற்றியும் பேசுகிறது. 2080ல் நடப்பதாக சொல்லப்படுகிறது கதை – அதில் உள்ள மனிதர்களையும் அவர்களின் மொழியையும் கொஞ்சம் அந்த காலத்தை ஒட்டி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121075

யக்ஷிப்பாலை -கடிதங்கள்

யட்சிப்பாலை அழியா வண்ணங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   வணக்கம்   யட்சிப்பாலை வாசித்ததிலிருந்து உங்களுக்கு எழுத நினைத்துக்கொண்டே இருந்தேன். தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதால் வலுவூட்டும் பயிற்சிகள் திரும்பத்திரும்ப நடத்தப்பட்டன. கல்லூரியும் நேற்றுடன் முடிந்து இரண்டுமாத கோடைவிடுமுறை துவங்கியது. எழுதவே முடியவில்லை. ஏழிலைப்பாலை எனக்கு பிடித்தமான மரம்.Alstonia scholaris என்னும் இதன் பெயரில் சிற்றினம் Scholaris. முன்பு பட்டம் வழங்கப்படுகையில் உடன் இதன் பூக்கும் சிறுகிளையொன்றினையும் அளிப்பார்களாம்.கற்றுத்தேர்ந்தவர்களுக்கான மரம் இது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனாலும் பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121044

பழந்தமிழர்களின் அறிவியல்!

அன்புள்ள ஜெ  பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி தினத்தந்தியில்  சிறப்புக் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். தன்னுடைய முனைவர் பட்டத் திறனைப் பயன்படுத்தி  தமிழ் ஆசிரியர் ஒருவர் பழந்தமிழர்களின்  அறிவியல் சிந்தனையை எளிய மனிதரும் அறியும் வண்ணம் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்துள்ளார். பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி இதுவரை அறிவியல் உலகம் கண்டிராத வகையில் குறிப்பிடுவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.நவீன அறிவியல்துறைகளுக்கும் பழந்தமிழரின் சிந்தனைகளுக்கும் இடையே இருக்கும் இணைப்பை ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கின்ற விதங்கள் அவரின் நுண்மான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120821

ஒரு மொழியாக்கம்

    ராகுல் காந்தியின் உரையை ஜோதி அழகாக மொழியாக்கம் செய்கிறார். வேண்டுமென்றால் சில இணைப்புச்சொற்கள் மிகுதி என்னும் குறையைச் சுட்டிக்காட்டமுடியும்.   முன்னர் தங்கபாலுவும், பி.ஜே.குரியனும் மொழியாக்கம் செய்து நகைப்புக்கு இடமானார்கள். அவர்கள் செய்த பிழைகள் என்னென்ன? முதலில் மொழியாக்கம் என்பது ஒரு மொழித்தொழில்நுட்பம். அதில் தேர்ச்சி கொண்டவர்கல் மொழியாக்கம் செய்யவேண்டும். மாறாக கட்சியில் முக்கியத்துவம் கருதி மொழியாக்கம் செய்ய முன்வருகிறார்கள். ராகுலின் அருகே நின்றிருக்கும் வாய்ப்பு என்பது பெரிதாகத்தெரிகிறது. அதை இன்னொருவருக்கு கொடுக்கும் உளநிலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121065

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

அருணா ராய் பேட்டி 1 அருணா ராய் பேட்டி 2  தகவலறியும் சட்டத்தின் கதை கொலாபா, மும்பையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு, கடற்கரையை ஒட்டி, இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கார்கில் போர் முடிந்தவுடன், போரில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு  வழங்க வேண்டும் என்னும் நோக்கில், ஆறு மாடிக் கட்டிடம் கட்ட அரசின் அனுமதி பெற்று, ஒரு திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கியபின், நகர் வளர்ச்சி வாரிய விதிகளுக்கும், கடற்கரையோர கட்டிட விதிமுறைகளுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120859

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி… கிருஷ்ணன்

ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை ஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்     ஆசிரியருக்கு ,   அறிவியக்கத்தில் நாட்டமுள்ள ஒருவன் விவாதித்துக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. சொல்லப் போனால் நண்பர்களுடன் அல்லது சித்தாந்த எதிரிகளுடன் விவாதிக்குக்போது  அறிவு  சேகரிப்பை விட  நமது கொள்கையை நிலைநாட்டுவதையே பிரதானமாகக் கொள்கிறோம். ஒருவன் இவ்வளவு ஆண்டுகளாக விவாதித்து பெற்றுக் கொண்டது என்ன எனக் கேட்டால் மிக மிக சொற்பம் என தான் பதில் கிடைக்கும். என்றாவது நீங்களோ அல்லது உங்களது மறுதரப்போ உங்கள் நிலைப்பாட்டை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120818

அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்

அறிபுனை- விமர்சனப்போட்டி அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  உமா ரமணன்   அரூவின் இனைய இதழில் வெளியான பத்து கதைகளையும் வாசித்தேன்.  இந்த கதைகளை தொடர்ந்து வாசித்த பொழுது அரூப வெளியில் கொஞ்சம் கொந்தளிப்போடும் அதே சமயம் அக விடுதலையுடனும் உலாவுவதை போலிருந்தது. அது ஏற்படுத்திய உணர்வுகள் என் இருப்பின் மீது ஆழமான கேள்விகளை எழுப்பியது. அதற்கான விடைகளை மிக எளிமையாக ஏற்றுக்கொள்ள வைத்தது மரணத்தை ஏற்றுக்கொள்வதை போல. இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121049

Older posts «

» Newer posts