Category Archive: பொது

புதியகதைகள்- கடிதங்கள்

இசூமியின் நறுமணம்[ சிறுகதை] ரா செந்தில்குமார் அன்புள்ள ஜெ, இசூமியின் நறுமணம் அழகான கதை. மென்மையானது. சொல்லப்போனால் வண்ணதாசனின் உலகைச் சேர்ந்தது. ஆனால் அந்த குடிப்பேச்சுக்களை அவர் எழுதியிருக்க மாட்டார். அந்த காண்ட்ராஸ்ட்தான் இந்தக்கதையை முக்கியமானதாக ஆக்குகிறது. இந்த மாதிரி ஒரு சூழலிலும் அந்த சின்ன நுட்பமான விஷயத்துக்கு இடமிருப்பது அளிக்கும் மகிழ்ச்சிதான் அந்தக்கதை என நினைக்கிறேன் ஒருமுறை நானும் நண்பர்களும் செங்கோட்டைப் பக்கம் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தபோது மந்தாரமலரின் வாசனை. அது மிகமிக மென்மையான வாசனை இல்லையா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132324/

இரு நடிகர்கள்

[வினாயகன்] 2004 ல் நான்கடவுள் படத்தின் நடிகர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. நான் அப்போது பார்த்த ஒரு மலையாளப்படத்தில் சுரேஷ்கோபி துப்பறிகையில் ஒரு விசித்திரமான தோற்றம் கொண்ட குற்றவாளியை விசாரிக்கிறார். அந்த நடிகரின் தோற்றமும், மிகையற்ற நடிப்பும் என்னைக் கவர்ந்தன. சற்று மாறுபட்ட தோற்றம் கொண்டவர்களிடம் ஒரு சிக்கல் உண்டு, அவர்கள் என்ன நடித்தாலும் பொய்யாக மிகையாகத் தெரியும். அந்த எல்லையை அவர் இயல்பாகக் கடந்துவிட்டிருந்தார் அவரை நான்கடவுள் படத்தின் குய்யன் கதாபாத்திரத்திற்கு நான் பரிந்துரை செய்தேன். பாலா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126751/

ஆசிரியர் தேர்வு முறை

  அன்புள்ள ஜெ, வணக்கம். தமிழகத்தின் கல்விச்சுழல் குறித்து, குறிப்பாக உயர்கல்வித்துறை குறித்து வருந்தாத சிந்தனையாளர்கள் இங்கு இல்லை. அதுகுறித்த கசப்புணர்வும், தூற்றல்களும் தமிழ் வாசிப்புச்சூழலில் புதிதும் அல்ல. இணையம், அச்சு என எவ்வூடகம் வழியேனும் மாதம் ஒருமுறையாவது அதைக் கடக்கிறோம். இப்போது கல்விச் சாதனைகள் என்று நாம் மார்தட்டிக் கொள்ள எதாவது இருக்குமென்றால், அது சென்ற தலைமுறை நமக்கு விட்டுச்சென்றவைகளில் ஒன்று. நிகழ்காலம் தேய்பிறை. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ அது குறித்த அக்கறை சிறிதும் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126672/

பக்தியும் அறிவும்

சிலைகளை நிறுவுதல் அன்புள்ள ஜெ, நலமா? தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் கடிதங்களும் விவாதங்களும் புதியவகையில் எண்ணச் செய்கின்றன. முன்பெல்லாம் இந்த விஷயங்களைப்பற்றிய கேள்விகள் உள்ளத்தில் இருந்தாலும் அவற்றை இத்தனை தெளிவாகக் கேட்டுக்கொண்டதில்லை. அவற்றுக்கு இப்படியெல்லாம் பதில் யோசித்ததும் இல்லை. என்ன காரணம் என்றால் இவற்றையெல்லாம் ஒரு அன்றாடப்பார்வையிலேயே பார்த்துவந்தோம். இவற்றின் வரலாறு, குறியீடு எதையுமே யோசித்ததில்லை. ‘அறிவில்லா முட்டாளுங்க பசுவோட குண்டியக் கும்பிடுறாங்க’ என்ற அளவில்தான் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பார்த்தோம். இன்றைக்கு யோசிக்கையில் செடி முளைவிடும் வயலை கும்பிடலாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126640/

யக்ஷி உறையும் இடம்

  கேரளா தொடர் கொலைகள்: மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி.. அதுவும்? 6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி! கேரளா தொடர் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஜோலி உள்பட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி   நாலைந்து நாட்களாகவே தொடர்ச்சியாக நான் கவனித்துவரும் செய்தி கேரளத்தில் ஜோலியம்மா ஜோசஃப் என்னும் ஜோலி  தாமஸ் செய்த தொடர்கொலைகள். சும்மாவே கேரளத்தில் செய்திப்பஞ்சம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126622/

சிலைகளை நிறுவுதல்

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?   அன்புள்ள ஜெ கிருஷ்ணன் என்னும் காமுகனை வழிபடலாமா, கீதையை எப்படி வாசிப்பது என்னும் இரண்டு கட்டுரைகளுமே எனக்கிருந்த பலவகையான ஐயங்களையும் குழப்பங்களையும் தீர்த்துவைப்பவையாக இருந்தன. பல புதிய தொடக்கங்களையும் உருவாக்கி அளித்தன. நான் இந்த ஐயங்களுடன் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். பலருடைய உரைகளைக் கேட்டிருக்கிறேன். நூல்களை வாசித்திருக்கிறேன். அவர்கள் சொல்லாத எதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று எண்ணிப்பார்த்தேன். நவீனமொழியும் நவீனச் சிந்தனைகளின் தர்க்கங்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126570/

எவ்வாறோ அவ்வாறே!

Dear Mr.Jeyamohan I was delighted to read your piece about Que Sera Sera song on your Blog By a happy coincidence I had written an article in English about the song and its history in the “Daily Financial Times”published n Colombo. Later it was posted on my Blog also Incidently P. Bhanumathy sang verses from …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126573/

யாதும் ஊரே

அமெரிக்காவின் வண்ணங்கள்     அன்புள்ள ஜெ   ராஜன் சோமசுந்தரம் இசையமைத்த யாதும் ஊரே கேட்டேன். ஏற்கனவே அதை ஒருமுறை கேட்டிருக்கிறேன். அப்போது முதலில் உருவானது ஒரு ஒவ்வாமை. ஏனென்றால் இசைரசிகர்களுக்கு பொதுவாக உள்ள தூய்மைவாதம்தான். ஃப்யூஷன் என்றாலே ஒரு விலக்கம். தூய்மையான இசை என்றால் ஒரு தனி ஈர்ப்ப்பு. அதோடு ஃப்யூஷன் என்றபேரில் சுசீலா ராமன் போன்றவர்களின் பிசாசுத்தனமும் ஒரு காரணம்.   ஆனால் இம்முறை மீண்டும் கேட்டபோது மிகப்பெரிய ஒரு நிறைவை அடைந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126442/

அமெரிக்காவின் வண்ணங்கள்

ராஜன் சோமசுந்தரத்துடன் அமெரிக்காவில் ஒருமாதம் ஓய்வுச்சுற்றுலா என்பது ஒரு பெரிய ஆட்ம்பரம்தான், ஒருவேளை தொழிலதிபர்களுக்கும் நடிகர்களுக்கும் மட்டுமே வாய்ப்பது. வாசகர்கள் ,நண்பர்கள் இருப்பதனால் எனக்குச் இயல்வதாகிறது. இம்முறை அருண்மொழி வராமலிருந்ததுதான் பெரிய குறை. அவள் இருந்திருந்தால் நான் பாட்டுக்கு இன்னமும் ‘சின்னப்புள்ளைத்தனமாக’ இருந்திருக்கலாம். என் வாழ்க்கையில் அவளுடைய பங்களிப்பு என்ன என்று இப்போதுதான் தெரிந்தது. நான் இயல்பாக இருக்கும் ஓர் இடம். இலக்கியவாதி அல்ல. அறிவுஜீவி அல்ல. சாதாரண அசட்டு நாரோயிலான். அபத்தமான, அசட்டுத்தனமான கருத்துக்களை அவளிடம்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126423/

நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?

இந்தியப் பெருமிதம் சுயபண்புமுன்னேற்றம் ஆசிரியருக்கு,   குடிமை ஒழுக்கத்தில் நாம் பல படிகள் தாழ்ந்திருந்தாலும், நாம் வளர்த்துக் காட்டிய பண்பாட்டு விழுமியம் குறித்து நாம் பெருமைக்கொள்ள இடமிருக்கிறது. இந்தியாவெங்கிலும் நாம் பயணித்ததிலும் உங்களுடன் நான் கண்ட இரண்டு கும்பமேளாவிலும் இந்தியன் என்பதில் நான் நிச்சயம் பெருமிதம் கொள்கிறேன். எங்கும் காணப்படும் இந்திய பண்பாட்டு ஒருமை உணர்வும் மக்களிடையே இயல்பில் வெளிப்படும் கலாச்சார தோழமையும் ஒருவனை உள்ளபடியே நெகிழ்ச்சியூட்டுவது. எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை எனினும் அடுத்த பிறவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126349/

Older posts «