Category Archive: பொது

இலக்கியத்துறையில் மாற்றங்கள்- உரை
சென்னையில் நமதுநம்பிக்கை – கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மாறும் யுகங்கள்  என்னும் தலைப்பில் நிகழ்ந்துவரும் சொற்பொழிவுத்தொடரில் 19 – 6-2018 ஆற்றிய சிறப்புரையின் சுட்டி..   ‘இலக்கிய துறையில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய சிறப்புரை https://www.youtube.com/watch?v=8eNunE6w4Ns  
Permanent link to this article: https://www.jeyamohan.in/110362

ஆர்.கே.சேகர்
    மலையாள சினிமாவில் பணியாற்றும்போதெல்லாம் ஆர்.கே.சேகர் பற்றிய பேச்சு எப்படியோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். அவரைப்பற்றிய ஒரு பெருமிதமும் நெகிழ்ச்சியும் மலையாளச்சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் ஒரு மேதை என்ற எண்ணமும் அதை கேரளமே அடையாளம் கண்டது என்ற எண்ணமும் கேரளத்தில் உள்ளது. பலபாடல்கள் இன்றும் வாழ்வதே முதற் காரணம்.   அதேசமயம் பல காரணங்களால் முழுமையாக வெளிப்படாமல் போன கலைஞர் என்றும் சொல்கிறார்கள். முதல்விஷயம் நல்ல மனிதர் என்பது. கலைஞர்கள் அப்படி இருக்கமுடியாது. அவர்கள் ஒருவகையான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110117

மன்மதன் ஒரு வாசிப்பு
மன்மதன் [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். மன்மதன் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ரேமண்ட கார்வரின் கதீட்ரல் கதையுடன் ஒப்பிட்டு வாசித்ததும்,  நல்ல அறிதலின் அனுபவமாக எனக்கு இருந்தது. அதன் மீதான என் வாசிப்பனுபவம் உங்கள் பார்வைக்கு. – https://rendering-endeavors.blogspot.com/2017/11/kamadevan-short-story.html  மன்மதன் ஒரு வாசிப்பு என்றும் அன்புடன், உங்கள் வாசகன் சிவமணியன் மன்மதன் – ஒரு கடிதம் மன்மதன் கடிதங்கள் மன்மதன் -கடிதங்கள்      
Permanent link to this article: https://www.jeyamohan.in/110102

விஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்
  விஷ்ணுபுரம் இணையதளம் அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தை தினந்தோறும் வாசிப்பதே என்முன் நிற்கும் மிகப்பெரிய குறிக்கோள். நான் உங்களை பின்தொடர்பவன், பலவற்றில் உங்கள் கருத்துதான் எனது கருத்தும். என்னைப்பொறுத்தவரை உங்களைத் தொடர்ந்து, உங்களுடைய உணர்வுகளில் நின்று, உங்களது பார்வையில் உங்களது கருத்தைக் கொண்டிருப்பதே, என்வரையில், மிகப்பெரிய வளர்ச்சிதான்.அறிவுப்பூர்வமான உரையாடலிலிருந்த பொறுப்பான ஆசிரியர், கடவுள் நம்பிக்கை அற்றவர், தனது கடமையைக் கண்ணாகச் செய்பவர், என்னுடைய இளமையில் சொன்னார். “பெண்களைப் பற்றிய எண்ணங்களும் காமமும் ஒருநாற்பது வயது வரைதான்”. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/109991

பழைய நிலங்கள்
17, ஜூன் ஞாயிறன்று அஜிதன் வீட்டிலிருந்தான். சைதன்யாவுக்கு விடுமுறை. ஆகவே சும்மா ஒரு சுற்று கிளம்பிவரலாமே என்று புறப்பட்டோம். கன்யாகுமரி மாவட்டத்தில் விளவங்கோட்டுக்கு என்று ஒரு தனிப் பண்பாடு உண்டு. பண்பாடு என்பது தனித்தன்மைக்குள் தனித்தன்மைக்குள் தனித்தன்மை என்று சென்றுகொண்டே இருப்பது. குமரிமாவட்டம் தமிழகத்திற்குள் முற்றிலும் பண்பாட்டுத்தனித்தன்மை கொண்டது. கேரளத்திற்கும் அது ஒரு விந்தையான அயல்நிலம்தான். இரு மாநிலத்தவருமே அதைப்பற்றி ஒருவகையான மயக்கத்துடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். கன்யாகுமரிமாவட்டத்திலேயே அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்கள் ஒருவகையான பண்பாடு கொண்டவை. இவை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110325

நற்றிணை இலக்கியவட்டம் -கடலூர்
நண்பர்கள் கூடி நிகழ்த்தும் நற்றிணை இலக்கிய கூடல் மூன்றாம் ஆண்டினை நிறைவு செய்கிறது . சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை கடலூர் சுற்று பகுதியை சேர்ந்த வாசகர்கள் இலக்கியத்தை அறிமுகம் கொள்ள ஒரு கூடுகையை மாதம் தோறும் நிகழ்த்துவது என துவங்கிய சிறிய கூடுகை இன்று மூன்றாம் ஆண்டினை நிறைவு செய்கிறது . எழுத்தாளர்கள் கீரனூர் ஜாகிர் ராஜா , பாவண்ணன் ,ஜெயமோகன் இவர்களை தொடர்ந்து நாஞ்சில் நாடன் அவர்களின் வருகை கொண்டு கூடுகை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110308

வெண்முரசு மின்நூல்கள்
  அமேசானில் வெண்முரசு மின்னூல்கள் பாதிவிலைக்கு கிடைக்கின்றன அமேசானில் வெண்முரசு இணைப்பு  
Permanent link to this article: https://www.jeyamohan.in/110323

கிளி சொன்ன கதை -கடிதம்
கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு தங்கள் நலம் அறிய விழைகிறேன்.    கிளி சொன்ன கதை குறு நாவலை வாசித்து முடித்தேன். எனது குழந்தைப்பருவ நினைவுகளை இந்த அளவு தீவிரமாக மீண்டும் மீட்ட முடியும் என்று சொல்லியிருந்தால் நான் நம்பி இருக்க மாட்டேன். ராமாயண கிளி அனந்தன் வடிவிலேயே பேசிக்கொண்டிருக்கிறது. அத்தனை பெண்களுடைய கண்ணீரும் அவனுக்கு தெரிந்தே இருக்கிறது. ராமாயணக் கிளி உண்மையில் அனந்தனுக்கு உள்ளே தான் இருக்கிறது. அத்தனை பெண்களுடைய …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/109578

கண்டராதித்தன் விருது விழா -முத்து
அதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்த குருஜி சௌந்தர் தனக்கும் சேர்த்தே தன் நன்றியுரையில் நன்றி கூறிக்கொண்டு விழா நிகழ்வுகளை முடித்து வைத்தார். மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. முத்து எழுதிய குறிப்பு – குமரகுருபரன் விருதுவிழா பற்றி        
Permanent link to this article: https://www.jeyamohan.in/110310

வெண்முரசு புதுவைக் கூடுகை – 16 ( ஜூன் 2018)
அன்புள்ள நண்பர்களே, எழுத்தாளர் திரு ஜெயமோகனின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையின் மீதான வாசிப்பை முன்வைத்து மாதந்தோறும் நடைபெற்று வரும் புதுவை வெண்முரசுக் கூடுகையின் 16வது கலந்துரையாடல் மதிப்பிற்கினிய எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் புதுவை வருவதையொட்டி இம்மாதக்கூடுகை அவர் முன்னிலையில் ஒரு சிறப்பமர்வாக வரும் 23.06.2018 சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கூடுதலாக நமது குழும நண்பர் திருச்சி வழக்கறிஞர் செல்வராணி தனது வெஸ்பாவில் மணாலி வரை சென்று …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110304

Older posts «