Category Archive: புனைவு

புனைவுக் களியாட்டு- சிறுகதைகள் பற்றி…

தனிமையின் புனைவுக் களியாட்டு   தனிமையின் புனைவுக் களியாட்டு அறிவிப்புக்குப் பின் இளம் வாசகர்கள் எழுதிய பல கதைகள் வந்தன. எல்லா கதைகளையும் வாசித்துவிட்டேன். நானே எழுதிக்கொண்டிருப்பதனால் எல்லாருக்கும் தனித்தனியாகப் பதில்களை விரிவாகப் போடவில்லை. எழுதவிருப்பவர்களுக்கும் சேர்த்து இந்தக்குறிப்பை பொதுவாக எழுதுகிறேன்.   அ. சிறுகதை ஒரு சவுக்குச் சொடுக்குபோல ஆரம்பிக்கவேண்டிய கதைவடிவம்   எனக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான கதைகள் மிகமிகத் தயக்கமாக ஆரம்பிக்கின்றன.“அவன் இப்படி நினைத்தான். இப்படித்தானோ என்று தோன்றியது. இப்படி நினைவுகூர்ந்தான்’ என்றவகையில் முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130217/

தனிமையின் புனைவுக் களியாட்டு

நண்பர்களுக்கு, பெரும்பாலானவர்கள் சொந்தவீட்டில் சிறையில் இருக்கும் நேரம் இது. இச்சூழலில் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் போலச் சோர்வுறச் செய்பவை வேறில்லை. ஆகவே புனைவில் திளைக்கலாமென்று ஓர் எண்ணம். நண்பர்கள் எழுதும் புனைகதைகளை ஒவ்வொருநாளும் வெளியிட நினைக்கிறேன்.நானும் முடிந்தால் எழுதலாம் என்றும் திட்டம். ஆனால் இந்தப் புனைகதைகளுக்குச் சில நிபந்தனைகள் உண்டு, அவை சிடுக்கானமொழியுடன் புதிரான வாசிப்பை அளிப்பதாக இருக்கலாகாது.யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்ற பேரில் செயற்கையான கொடூரங்களைச் சொல்வனவாகவும் இருக்கக் கூடாது. ஒழுக்கான நடையுடன், கதைத்தன்மையுடன் அமையவேண்டும். அன்றாட யதார்த்தத்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130188/

“கெரகம்!”

உயிர் எழுத்து ஜூலை 2017 இதழில் நஞ்சுண்டன் பிழைதிருத்தல், பிரதிமேம்படுத்துதல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ‘கால்திருத்தி’ என்னும் தலைப்பில். பொதுவாக இந்த க்ரியா வகை ‘பிரதிமேம்படுத்தல்’ பற்றி எனக்கு ஆழமான சந்தேகம் உண்டு. வாழ்க்கையையோ இலக்கியத்தையோ அறியாமல், மொழியின் விதிகளை இயந்திரத்தனமாகப்போட்டுச் செய்யப்படும் இத்தகைய ’மேம்படுத்தல்கள்’ ஒரு இலக்கியப்பிரதியை சித்திரவதை செய்பவை. மொழியின் சாவி தங்களிடம் இருப்பதாகவும் இமையம், பூமணி போன்ற நாட்டுப்புற கலைஞர்களை தங்கள் மெய்ஞானம் மூலம் தாங்கள் உயர்கலைஞர்களாக ஆக்குவதாகவும் ஒரு பாவனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100271/

சிங்கப்பூரில் இரண்டுமாதங்கள்…

உலகமெங்கும் கல்விமுறையில் மொழியின் இடம் மேலும்மேலும் முக்கியத்துவம் அடைந்துகொண்டே செல்லும் காலகட்டம் இது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இந்த அவதானிப்பு நிகழ்த்தப்பட்டு கல்விமுறையின் மையப்போக்காக ஆகியது. மொழியாக வழியாக அறிவதும், மொழியாக மாற்றப்படுவதும்தான் உண்மையில் அறிவென ஆகிறது. ஆகவே நூல்வாசிப்பை மிகப்பெரிய அளவில் இன்றைய கல்விமுறை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால், வாசிப்புப்பழக்கத்தை உருவாக்கி வழிகாட்டினால் மட்டுமேபோதும், குழந்தைகளே கற்றுக்கொள்ளும் என்பதே இன்றைய சிந்தனை இதில் புனைவுவாசிப்பு மேலும் முக்கியமான பங்கை வகிக்கிறது. அது பொழுதுபோக்கு அல்ல. கற்பனை மூலம் கற்கவும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89036/