புதியவர்களின் சந்திப்புகளில் தொடர்ச்சியாகப் பேசப்பட்ட சில தலைப்புகள் விவாதத்தின் நெறிகள், கருத்துக்களைத் தொகுத்துக்கொள்ளும் முறைமை போன்றவை. அவற்றில் முக்கியமான ஒரு தலைப்பு புனைவுகளில் வெளிப்படும் உணர்ச்சிகளைப் பற்றியது. உண்மையில் இலக்கியம் குறித்த தொடக்கப்புரிதல்களில் ஒன்று இது. இலக்கிய அறிமுகம்செய்யும் ஒரு முன்னோடி முதலில் இதைப்பற்றித்த்தான் இளம் வாசகர்களிடம் பேசத்தொடங்குவார். ஓர் இலக்கிய அறிமுக வகுப்பில் ஆரம்பநிலை விளக்கங்களில் ஒன்றாக இது இருக்கும். ஆனால் தமிழில் பல ஆண்டுகளாக இலக்கியவாசிப்புடையவர்களுக்குக் கூட இத்தெளிவு இருப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். காரணம், …
Category Archive: புனைவிலக்கியம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/86990
மரபை மறுஆக்கம்செய்தல்
திரைப்படங்களில் பணியாற்றுபவன் என்ற வகையில் எனக்கு ஓர் அவதானிப்பு உள்ளது. தொண்ணூறுகளில் வரைகலை [graphics] முறை சினிமாவின் முக்கியமான கவர்ச்சியாக ஆனபோது திரையில் எதையும் காட்டலாமென்ற நிலை வந்தது. அதுவரை நாடகத்தனமாக செட் போட்டு எடுக்கப்பட்டுவந்த பல காட்சிகளை திரையில் உருவாக்க முடிந்தது விளைவாக மிகைக்கற்பனை [fantasy] சினிமாவில் பெருகியது. அறிவியல்புனைகதைகள் ,காமிக்ஸ்கதைகள் போன்ற புதிய புராணங்கள் அதிகமாகச் சொல்லப்பட்டன. சமூகக்கதைகளுக்கு ஒருவகை பண்பாட்டு எல்லை உள்ளது. மிகு கற்பனைக்கதைகளின் கனவுத்தன்மை மானுடகுலத்துடன் உரையாடுவது. மேலும் சினிமா …
Permanent link to this article: https://www.jeyamohan.in/85782
என்றுமுள்ள இன்று
ஒரு நிரந்தரக்கேள்வி வெண்முரசின் வாசகர்களாக வரும் இளையதலைமுறையினரில் ஒருசாராரிடம் எப்போதுமுள்ள கேள்வி ஒன்றுண்டு. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இக்கேள்வி என்னைநோக்கி வந்துகொண்டே இருக்கும். இவர்களில் பலர் தொடக்கநிலை இலக்கிய அறிமுகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.சமகால அரசியல் மற்றும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக் கொண்ட புனைகதைகளை வாசித்திருப்பார்கள். அவற்றின் சமகாலத்தன்மையே அவற்றுடன் இவர்கள் கொள்ளும் தொடர்புக்கான உடனடிக்காரணமாக இருந்திருக்கும்.அவ்வாறு புனைவெழுத்தின் உடனடிக்கடமைகளில் ஒன்று சமகாலத்தை விமர்சனம் செய்தல் என்று புரிந்துகொண்டிருப்பார்கள். அத்துடன் உள்ளூர ஒரு பெரிய பிரிவினை இருக்கும். சமகாலம் என்பது …
Permanent link to this article: https://www.jeyamohan.in/83957