Category Archive: பயணம்

ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை?

“டிசம்பர் 19, ராஜஸ்தான் பயணத்தின் ஒரு பகுதியாக பிகானரில் இருந்து ஜெய்ப்பூர் சென்று கொண்டுயிருக்கையில் back bag அணிந்து இருந்த  ஒரு இளைஞன் எங்கள் வண்டியை கண்டு lift கேட்கும் சைகையை காட்டினார். வண்டி சிறிது தூரம் சென்று பின் திரும்பி வந்து அவரை ஏற்றி கொண்டோம். அவர் பெயர் ஷிரிஷ், 21 வயது, சொந்த ஊர்  இண்டோர்  (Indore)  மத்தியபிரதேசம், நடுத்தர வர்க்க குடும்பம், தந்தை சிறு கடை நடத்தி வருகிறார். இளங்கலை ஜர்னலிசம் முடித்துவிட்டு ஒரு வருடம் Decathlonல் வேலை செய்துவிட்டு தற்போது பயணத்தில் இருப்பதாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அவரது பயண திட்டம், காஷ்மீரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117603

இமையத்தைக் காணுதல் – சுபஸ்ரீ

அன்புநிறை ஜெ, மீண்டும் இமையம் சென்று வந்தேன் – இம்முறை நண்பர் கணேஷும் உடன்வந்தார். சென்றமுறை இமாசலப் பிரதேசம். இம்முறை உத்தராகண்ட். பெங்களூரிலிருந்து விமானப் பயணமாக தெஹராதூன் சென்று, ரிஷிகேஷ் அடைந்தோம். முதல் முறையாக கங்கையின் தரிசனம். அந்தி வேளையில் வான் நிகழ்த்தும் மகாதீப ஆராதனைக்கு முன் சிற்சில தீபங்கள் கங்கையில் மிதந்து சென்றன. மிகப் பெரிய குடும்பத்தின் மூத்த அன்னையென கங்கை. அவளது கரையில், அவளது மடியில், அவளை சாட்சியாக்கி, கடந்து, கரைந்து, கரைத்து, ஆசி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114939

குளிர்ப்பொழிவுகள் – 3

இன்று இரண்டு அருவிகள். முதலில் ஜோக் அருவி. அதைப்பற்றி நான் அறிந்தது ஒரு நகைச்சுவைத்துணுக்கு வழியாக. நான் என் பள்ளிநாளில் வாசித்த நூல் காகா காலேல்கரின் ஜீவன்லீலா. காகா காலேல்கர் பிறப்பால் மராட்டியர். காந்தியால் ஊக்கம் பெற்று காந்தியளவுக்கே மாறிய மாமனிதர்களில் ஒருவர். காந்தி அவரிடம் குஜராத்தி கற்று அந்த மொழியில் இலக்கியம் படைக்கும்படி ஆயிட்டார். காகா காலேல்கர் குஜராத்தி இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஆனார். காந்தியப்பணிகள் பலவற்றில் முன்னோடி முயற்சிகள் செய்தவர். அவருடைய பித்து தண்ணீரில். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113445

குளிர்ப்பொழிவுகள் – 2

  சிக்மகளூரில் விடுதியில் இரவு தங்குவது விந்தையான அனுபவமாக இருந்தது. அங்கே அதிகமானபேர் வருவதில்லை போல. ஓர் உற்சாகத்தில் சுற்றுலாவிடுதியைக் கட்டிவிட்டார்கள். ஓர் ஓரமாகக் கட்டுமானப்பொருட்கள். அறைகளில் கொஞ்சம் தூசி. ஆனால் தலைக்கு நாநூறு ரூபாயில் தங்க முடிந்தது. இத்தகைய விடுதிகளை அமைக்க அரசுகள் ஊக்குவிக்கின்றன. இணையம் வழித் தொடர்பு இருப்பதனால் அவ்வப்போது பயணிகளும் வருவதுண்டு. ஆனால் இவற்றை சரியாக நிர்வாகம் செய்ய உள்ளூரில் ஆட்கள் கிடைப்பதில்லை. நம் சொந்தவீடு போல ஒரு சுற்றுலா விடுதியை வைக்கக்கூடாது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113412

மையநிலப் பயணம் -2

காண்ட்வா விடுதியில் தூங்கி எழுவதற்குள் பகல் அணுகிவிட்டது. முந்தைய நாளின் நீண்ட பயணத்தின் களைப்பு. குளித்துக்கிளம்பும்போது நல்ல வெயில் வழியிலேயே ஒரு உணவு விடுதியில் போகோ என்னும் அவல் உப்புமாவும் புளிப்பு கலந்த ஜாங்கிரியும் சாப்பிட்டோம். இங்கு காலை உணவு என்பது பெரும்பாலும் இதுதான். போகோ நனைத்த அவல் மீது ஒரு விதமான் ராமராஜன் பச்சை ஏற்றப்பட்டு காரசேவு போல ஒன்று மேலே தூவப்பட்டு தரப்படும்.  சம்மந்தமில்லாமல் தமிழ் சினிமாவில் வரும் பாட்டைப்போல அதில் அந்த உப்புக்காரத்திற்குள் இனிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103266

மையநிலப் பயணம் -1

  இவ்வாண்டு எழுதழல் எழுதுவதற்கு முந்தைய இடைவெளியில் ஒரு நீண்ட பயணம் செய்யலாமென்று கிருஷ்ணனிடம் சொன்னேன். எழுதி எழுதி கை ஓய்ந்த நாள் ஒன்றில் டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து பார்வதிபுரம் சந்திப்புக்கு நடந்து சென்றபோது பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஒரே வீட்டில் தங்கி ஒரே வழியில் சென்று ஒரே டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கிருஷ்ணனை அழைத்து எங்கே என்று தெரியாத ஊரில் எவருமே தெரியாத சூழலில் டீயா காப்பியா என்று தெரியாத ஒன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103224

பச்சைக்கனவு –கடிதங்கள் 3

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன் நான்… பச்சைக்கனவு என்று தலைப்பைப் பார்த்ததுமே லா.ச.ராவின் கதையில் சென்றது என் எண்ணம். திருக்குறள் உரையில் “விசும்பின் துளி’ என்ற குறளை விளக்கும்போது வாகமனைப்பற்றியும் உங்கள் மழைப்பயணம் பற்றியும் கூறியிருப்பீர்கள். அப்போதிருந்தே அதன் பசுமை மனதில் குடிகொள்ளத்தொடங்கியது. உங்களின் பயணக்கட்டுரை என் இந்த நாளை பலமணி நேரம் பசுமையோடு தேக்கி என்னைத் தன்னுள் வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மகத்தான அனுபவம் தந்தமைக்கு நன்றி. அன்புடன் நா. சந்திரசேகரன் *** அன்புள்ள சந்திரசேகரன் பச்சைக்கனவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100276

பச்சைக்கனவு கடிதங்கள் 2

வணக்கம் உங்களின் மழை அனுபவப்பதிவை நேற்று வாசித்தேன். வழக்கம் போலவே எங்களையும் உடன் அழைத்துச்சென்றிருக்கிறீர்கள். பல வருடங்களாக இதை தொடருகிறீர்கள் எனபது எப்போதும் போலவே பொறாமையை தருகிறது. Comfort zone என்ற பெயரில் நாங்களெல்லாம் உண்மையில் சிறையில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன், அதுவும் குறிப்பாய் மழையில் நனைந்து கொண்டே சாப்பிட்ட அந்த ஐஸ்கிரீம்!! இது இன்னும் ஆண்கள் உலகுதான் இல்லையா சார்? வக்கீலை stand up comedian உடன் ஒப்பிட்டது உங்களின் signature பகடி. நல்ல வேளையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100212

பச்சைக்கனவு -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, பருவ மழைப்பயணம். நினைவில் அகலாத மலைகள், தழுவிச் செல்லும் முகில்கள், பச்சைப் படாம் போர்த்த வெளிகள், அடர்ந்த பல்வகைத் தாவரங்கள், மலர்கள், பெருமரங்கள், நீரோடைகள், ஓயாது ஓசையிடும் அருவி, தொடர்ந்து வரும் மழை, மனதில் இன்னும் உலராத ஈரம். இரவு வீடு திரும்பினேன் உடல் சோர்வடையவில்லை அதனால் உறக்கம் உடனடித் தேவையாக இல்லை. மனம் உவகையில் இருந்தது. நீர்க்கோலத்தின் விடுபட்ட நான்கு அத்தியாயங்களைப் படித்து முடித்தேன். “மூன்றுநாள் மழை அனைவருக்கும் உடலோய்ந்த உள்வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100175

பச்சைக்கனவு

என் வலக்கையின் மணிக்கட்டு ஓரமாக ஒரு சிவந்தபுள்ளி. அது அரித்துக்கொண்டே இருக்கிறது. இனியதோர் இருப்புணர்த்தல். அதுதான் மழைப்பயணம் முடிந்து வந்த நினைவு. அட்டை கடித்த தடங்கள் சில அரித்து சிவந்து தடித்து புள்ளியாகி கொஞ்சநாள் நீடிக்கும். ஆனால் இம்முறை அட்டைக்கடி மிகக்குறைவு. ஏன் என்று தெரியவில்லை. அட்டைகள் பெருகிக்கிடக்கவேண்டிய ஈரச்சதுப்புகள் பலவற்றை தாண்டிக்கடந்தோம்,. சென்றமுறை கால்களெல்லாம் ஒட்டிக்கொண்டு நெளிந்த மேற்குமலையின் உரிமையாளர்களை பெரும்பாலும் காணமுடியவில்லை. இத்தனைக்கும் சென்றமுறை போல உப்புக்கரைசலுடன் நாங்கள் செல்லவுமில்லை. உப்பு வாங்கி காரிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100070

Older posts «

» Newer posts