Category Archive: பயணம்

மலேசியப் பயணம்

இன்று திருவனந்தபுரத்திலிருந்து மலேசியாவுக்குக் கிளம்புகிறேன். நேராக பினாங்கு, அங்கிருந்து கூலிம். கூலிம் ஆசிரமமும் சுவாமி பிரம்மானந்தாவும் என் இனிய நினைவுகள். மலேசியா என்றாலே கொலாலம்பூர்தான் பெரும்பாலானவர்களின் நினைவில். நான் மலேசியாவின் உள்ளூர் முகம் என அறிந்த ஊர் கூலிம்தான்.   நான் 2006ல் முதல்முறையாக மலேசியா சென்றேன். சிங்கப்பூரிலிருந்து சண்முகசிவா – நவீன் ஆகியோரின் அழைப்பின் பேரில். அதன்பின் பலமுறை. ஆனால் கூலிம் சென்று அங்கிருந்து பினாங்கு சென்றபோதுதான் மலேசியாவின் முழுமையை அறிந்துகொண்டேன் என்று சொல்லவேண்டும். மலேசியாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128752/

மலேசியப் பயணம்,விருது

வரும் டிசம்பர் 19 முதல் 26 வரை மலேசியாவில் பயணம் செய்யவிருக்கிறேன். அருண்மொழியும் உடன் வருகிறாள். மலேசியாவில் கூலிம் தியான ஆசிரமத்தில் நிகழும் கூடுகைகளில் நான்கு நாட்கள் உரையாற்றுகிறேன். மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தா நெடுநாட்களாகவே என் வணக்கத்திற்கும் அணுக்கத்திற்கும் உரியவர். பலமுறை நண்பர்களுடன் அவருடைய குருநிலையில் சென்று தங்கியிருக்கிறேன். மலேசிய இலக்கிய – ஆன்மிகச் செயல்பாடுகளின் மையமாக அந்த குருநிலை திகழ்ந்துவருகிறது.   ஆண்டுதோறும் கூலிம் ஆசிரமத்தின் சார்பில் வழங்கப்படும் விருது எனக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128516/

மாபெரும் மலர்ச்செண்டு

இலையுதிர்காலம் என்பது ஒரு படிமம். ஒவ்வொன்றாக இலைகளை உதிர்த்துவிட்டு வெறுமைகொண்டு காற்றைத்துழாவி வான்நோக்கி கைவிரித்து நின்றிருக்கும் மரங்கள் கவிதையில் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. ஓவியங்கள், திரைப்படங்கள் வழியாக நம் கனவுக்குள் கடந்திருக்கின்றன. இலையுதிர்காலம் என்னும் சொல்லே என்னை நெடுநாட்கள் ஆட்கொண்டிருக்கிறது. 1986 வாக்கில் நான் கணையாழி இதழில் எழுதிய ஆரம்பகாலக் குறுநாவலில் தொடக்கக் கூற்றாக   ‘சென்றது கிளிக்காலம் பிறகொரு இறகுதிர்காலம்’   என்ற கவிதைவரிகளை எடுத்துக் கொடுத்திருந்தேன். அது நான் மேலும் நான்காண்டுகளுக்கு முன்பு என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126498/

பாலைநிலப் பயணம்

  நேற்று காலை சென்னையிலிருந்து கிளம்பி ஒரு ஏழுநாள் பாலைநிலப் பயணம். ஜெய்ப்பூருக்கு காலை பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஓசியான் வரை காரில் வந்து ஓரு விடுதியில் தங்கியிருக்கிறோம். பாலைநிலம் வழியாக  மூவாயிரம் கிலோமீட்டர் திட்டம். குஜராத் கட்ச் வளைகுடாவுக்குள் புகுந்து அங்கிருந்து ஊர் திரும்புகிறோம். பன்னிரண்டு நண்பர்கள் இரண்டு கார்கள். ராஜஸ்தான் பாலைநிலம் வழியாக இரண்டுமுறை ஏற்கனவே வந்திருக்கிறோம். அருகர்களின் பாதை பயணத்தின்போது தவறவிட்ட இடம் ஓசியான். ஊழ் இங்கே கொண்டுவந்திருக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/127282/

அமெரிக்கா நோக்கி…

இன்று [9-9-2019] முற்காலை மூன்றரை மணிக்கு அமெரிக்கா கிளம்புகிறேன். 6-902019 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளமபி பெங்களூர் வந்தேன். இங்கே ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் நவீன், ஸ்வேதா, திருமூலநாதன், சங்கர், விஷால்ராஜா ஆகியோர் வந்தனர். 7,8 இருநாட்களும் இலக்கியப்பேச்சு. கொஞ்சம் எழுதலாமென திட்டமிட்டிருந்தேன். ஆனால் இளம் நண்பர்களுடனான உரையாடல் அதை ஒத்திப்போடச்செய்தது. 8-9-2019 அன்று அந்தியில் கிளம்பி விமானநிலையம் வந்தேன். இன்றிரவு இங்கேதான்.   நேராக ராலே செல்கிறேன். அங்கே ஊர்சுற்றல். ஒரு இசை நிகழ்ச்சி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125995/

கற்காலத்து மழை-8

பயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்ததும் எங்கள் பயணம் உள்ளத்தில் நிறைவடைந்துவிட்டது. அதற்குமேல் ரத்தினகிரி செல்வதில் பொருளில்லை . பிறிதொரு முறை வெயில் எழுந்தபின்னர் ,அனேகமாக டிசம்பரில் இப்பகுதிக்கு வரலாம் என்று திட்டமிட்டோம். அன்று இத்தனை நீண்ட பயணமாக வராமல் புனா வரை ரயிலிலோ விமானத்திலோ வந்து அங்கிருந்து ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு இங்கே வந்தால் இன்னும் அணுக்கமாகவே இவற்றை பார்த்துவிடலாம்.   ரத்னகிரியிலும் மும்பை பகுதிகளிலும் கனமழை பெய்துகொண்டிருப்பதனால் பாறை செதுக்கு இருக்குமிடத்திற்கு செல்வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124600/

கற்காலத்து மழை-7

ஒரு பயணத்தின் உச்சம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒர் இடம். பலசமயம் அது தானாக அமைவதுமுண்டு. மத்தியப்பிரதேசப் பயணத்தில் இயல்பாகவே பிம்பேட்கா குகைகள் உச்சமாக அமைந்தன. இந்தப்பயணத்தில் ரத்னகிரியை உச்சமென எண்ணியிருந்தோம். குடோப்பி அவ்வாறாக ஆகியது. ஆனால் அதற்குத் தகுதியான இடம்தான் அது.   குடாப்பி வருங்காலத்தில் இன்னும் விரிவான ஆய்வுக்கு உள்ளாகும் என நினைக்கிறேன். பாறைச்செதுக்கு ஓவியங்கள் அப்பகுதியெங்கும் இருக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டிருக்கின்றன. அங்குள்ள பாறைச்செதுக்கு ஓவியங்களை பார்க்கப்பார்க்க புதியதாக ஏதேனும் தெரிந்துகொண்டே இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124575/

கற்காலத்து மழை-6

[குடோப்பி தெரு] ஆர்தர் சி கிளார்க் ‘சின்னம்’ [The Sentinel] என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அறிவியல்புனைவு. ஆனால் மிக எளிமையானது. இதை நான் எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்யச்செய்து 2001ல் சொல்புதிது இதழில் வெளியிட்டேன். நிலவுக்குச் செல்பவர்கள் அங்கே ஒரு பொருளைப் பார்க்கிறார்கள். மிகச்சரியான முக்கோண முப்பட்டை வடிவமானது. ஆகவே அது எவராலோ செய்யப்பட்டதுதான் என தெரிகிறது. ஆனால் உள்ளே நுழைய வாயில்கள் இல்லை. திறக்க முடியவில்லை. படிகம்போன்ற எதனாலோ ஆனது. உடைக்கவும் முடியவில்லை. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124517/

கற்காலத்து மழை-5

  பதினான்காம்தேதி பெல்காம் நகரத்திலிருந்து கிளம்பினோம். முந்தைய நாள் இரவு பெல்காம் வந்து சேர்வதற்கு மிகவும் பிந்திவிட்டது .வரும் வழியிலேயே எங்கள் வண்டியின் ஒரு சக்கரம் பழுதடைந்தது. இப்பகுதி முழுக்க  மிகப்பெரும் சாலைகள், மேம்பாலங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்கு பார்த்தாலும் பலகைகள், அவற்றை அறையும் ஆணிகள். அதிலொன்று வசமாக சக்கரத்தில் நுழைந்துவிட்டது   பொதுவாக இத்தகைய வாடகை வண்டிகளில் மாற்றுச் சக்கரம் மிகப்பழையதாகவும் அனேகமாக குப்பையில்வீசத்தக்கதாகவுமே இருக்கும். அதை வைத்து பத்து கிலோமீட்டர் கூட ஓட்ட முடியாது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124477/

கற்காலத்து மழை-4

  இந்தப்பயணம் மழையில் செல்வதையும் இலக்காகக் கொண்டது. நாங்கள் மழைப்பயணம் செல்லத் தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. முன்பெல்லாம் மழைப்பயணம் என்றால் கேரளத்தின் தேவிகுளம் பீர்மேடு வாகைமண் பகுதிகளுக்குச் செல்வோம். கவி, பரம்பிக்குளம் என பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். இம்முறை மேற்குதொடர்ச்சிமலையின் வடக்கு எல்லைக்குச் சென்றோம். மழையும் கற்கோயில்களும் கற்காலச் சின்னங்களும் என ஒரு கலவையான கரு கொண்டது இந்த பயணம் பதிமூன்றாம் தேதி முழுக்க காட்டுக்குள் பயணம். பெல்காமிலிருந்து கொங்கணி கடற்கரை நோக்கிச் செல்வதற்கு நடுவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124421/

Older posts «