Category Archive: பயணம்

வானோக்கி ஒரு கால் – 2

தென்காசிக்குச் சென்று ஸ்டேட் வங்கியைத் தேடி கொஞ்சம் அலைந்தேன். ஒருவருக்கு கல்விச்செலவுக்கு வாக்களித்திருந்த பணத்தை அனுப்பவேண்டும் என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஸ்டேட் வங்கியில் தினகரனின் உள்ளூர் நிருபரை சந்தித்தேன். என் தளத்தை வாசிக்கிறார் என்றார். ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நான் கிளம்பியது முதலே பலர் அடையாளம் கண்டுகொண்டார்கள். நாகர்கோயில் பேருந்துநிலையம் ஆரியபவனில் சாப்பிடச்சென்றால் என் நண்பரும் ஈஷா யோகமையத்தின் உறுப்பினருமான உரிமையாளர் ரமேஷ் வந்து பார்த்தார். பேருந்தில் ஒருவர் நீங்கள் ஜெயமோகன் அல்லவா என்றார். நெல்லையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119660

வானோக்கி ஒரு கால் -1

சும்மா பாறையடி மலைவரை ஒரு காலைதான் சென்றேன். அங்கிருந்து இருபது கிமீ நடந்து பூதப்பாண்டி வரை சென்றேன். தாடகை மலை அடிவாரத்தில் அமைந்த கோயில். கருவறை குடைவரையாலானது. அங்கே சிற்பங்களை நோக்கி நின்றபோது தோன்றியது, இவ்வாறு நிலையழிந்திருக்கும் ஒவ்வொருமுறையும் கோயில்களுக்குத்தானே செல்கிறேன் என்று. ஒவ்வொரு முறை இந்தப் பெருந்தனிமையை சுமக்கும்போது கிளம்பிச்செல்வது ஆலயங்களுக்கே. தூண்டுதல்களுக்காக. ஆறுதலுக்காக. வெண்முரசின் ஒவ்வொரு நாவலுக்கும் இவ்வாறு சென்ற ஆலயங்களை தனியாக பட்டியலிடவேண்டும். ஒவ்வொரு தொடக்கத்தையும் கோயில்களிலிருந்தே பெறுகிறேன். சொல்வளர்காடு கிராதம் கேதார்நாத்திலிருந்து. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119637

சமண வழி – கடலூர் சீனு

சென்ற வெள்ளி மாலை, நண்பர் இதயத்துல்லா அழைத்திருந்தார் உங்கள் தளத்தில் மேல் சித்தாமூர் சார்ந்த பதிவுகளையும்,வாசகர்களின் பயணக் கடிதங்களையும் வாசித்திருக்கிறார்.”சார் இங்கதான் சார் இருக்கு போலாமா” என்று வினவினார். சனிக்கிழமை காலை ஏழரை மணி அளவில் பண்ருட்டியில் இருந்து, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டோம். மார்ச் மாத வெக்கை துவங்கி,காற்று உறைந்து நின்று விட்ட புழுக்கம் நிலவும் தட்பவெப்பம். கிளம்பினோம். வழக்கமான பாதைகளை தவிர்த்து குறுக்குப் பாதைகள் எதேனும் உண்டா என்று கூகிள் வரைபடத்தை துழாவ, அது பண்ருட்டி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119112

வெள்ளியங்கிரியில்…

அன்புள்ள ஜெ மேற்குத் தொடர்ச்சி மலைஅருகில் வாழ்பவர்கள் பேறு பெற்றவர்கள். நாள் தோறும் வேளிமலையோ அல்லது குருடிமலையோ ஒளி சூடி நிற்பதைக் காணமுடியும். சென்ற வாரம் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை உச்சிக்கு சென்று  திரும்பினேன். ஏழு மலைகள் . ஆறாம் மலையின் முடிவில் சிறிய சுனை. ஆண்டிசுனை. பெயர் தெரியாத ஆண்டிகளே இம்மலைகளின் ,நிலத்தின் வற்றாத பண்பாட்டு ஊற்று போலும். கூட்டம் ஆரம்பிக்கவில்லை. நள்ளிரவில் வெகு சிலர் மட்டும் அங்கே நின்றிருந்தோம்.  . தலைக்கு மேலே தண்ணிலவு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118675

கும்பமேளா கடிதங்கள்-4

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெ, தங்கள் பயணக்கட்டுரை ஒரு நிஜ அனுபவத்தையே எனக்குள் ஏற்படுத்துகிறது. நீங்களே என்னை கைப்பிடுத்து அழைத்துகிச்சென்று காட்டியது போன்ற உணர்வு. வெறும் சுற்றுப்பயணமாக அன்றி ஒரு தரிசனத்தையே முன் வைக்கிறது. பின்வரும் வரிகள் அனைவருக்குமான அவசியச்செய்தி “ இந்தியா மிகமிக விரைவாக நடுக்குடியினரின் தொகையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த விழாக்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118444

கூடியிருந்து குளிர்தல்…

அன்புள்ள ஜெ, உங்களோடு வருவதாக இருந்த கும்பமேளா திட்டம் என் வகுப்புக்கள் காரணமாக ஒரு வாரம் தள்ளிப் போய்,  வசந்தபஞ்சமியை அடுத்த வசந்த பெளர்ணமி, நீராடல் மிக முக்கிய நிகழ்வு என்பதால்,  இந்த வாரம் திட்டமிட்டோம். நண்பர்கள் சிவாத்மா, சண்முகம் , அவர் மாமா முருகதாஸ், என நால்வரும் சென்று வந்தோம். சென்னையில் ரயில் ஏறும் போதே மனதில் உற்சாகம் நிறைந்து விட்டது. எதிர் இருக்கை பயணிகள் ஊர் ஊராக சென்று, “ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்”  செய்யும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118493

கும்பமேளா கடிதங்கள் 4

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 ஜெ தங்களின் நீர்கூடல் கட்டுரை படித்தேன். அருமை .காற்றின் மொழி திரைப்படத்தில் நாயகி ஹரித்வார் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வர், ஆனால் பிறகு அவர் பயணம்செல்லவில்லை என்றும் அம்மாவிடமிருந்து கேட்ட அனுபவத்தை சொன்னதாகவும் சொல்வார்  தங்களின் பயண கட்டுரைகள் எனக்கு அவ்வாறு சென்ற அனுபவங்களை அளிக்கிறது. ஸ்வச் பாரத் சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118333

கும்பமேளா கடிதங்கள் 3

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் கும்பமேளாவில் இருந்த அதே நேரத்தில் நானும் அலஹாபாத் கும்பமேளாவில்தான் இருந்தேன். தனியாகச் சென்று காசியில் தங்கி தை அம்மாவாசையன்று கும்பமேளாவிற்குச் சென்று திரும்பி அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்தே காசியிலிருந்து கிளம்பினேன். அலகாபாத் கும்பமேளா தொடர்பான உங்கள் கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118331

சிரீஷும் மதுரையும்

  ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை? கையில் பணமில்லாமல், வழியில் வண்டிகளிடம் கை காட்டி ஏறிக்கொண்டு இந்தியாவை சுற்றிவரும் சிரிஷ் யாத்ரி பற்றி எழுதியிருந்தேன். நூறுநாட்களுக்கு முன் லடாக்கிலிருந்து பயணத்தைத் தொடங்கி இப்போது கன்யாகுமரி வரை வந்து சேர்ந்து பயணத்தை முடித்திருக்கிறார். கன்யாகுமரியில் நண்பர் ஷாகுல் ஹமீது அவர்களின் நண்பரின் இல்லத்தில் தங்கியிருக்கிறார். சிரீஷின் கொள்கைகளில் ஒன்று, பேருந்தில் ஏறுவதில்லை. மக்கள் அளிக்கும் இலவசப் பயணம் மட்டுமே. பேருந்துச்சீட்டு எடுத்துக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வதில்லை. உணவு வாங்கிக்கொடுத்தால் உண்பார், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118435

சிரிஷ் யாத்ரி- தாமரைக் கண்ணன்

ஒரு பயணத்திற்கு என்னதான் தேவை? ஷிரிஷ் எழுதிய Instagram பதிவு: https://www.instagram.com/p/BrlHFmoBZIz/?utm_source=ig_share_sheet&igshid=90leueb4xyvc அன்புள்ள ஜெ புதுவை வெண்முரசு கூடுகையில் மழைப்பாடல் நூல் முடிந்து, வண்ணக்கடல் அலைவீச ஆரம்பித்துள்ளது. இளநாகன் எங்களுக்குள் பயணிக்கிறான். வண்ணக்கடலின் கரையிலேயே இளநாகனின் சித்திரம் மனதில் ஆழப்பதிந்து விடுகிறது, அவன் பாணன் என்பதாலா பயணி என்பதாலா, ஏதென்று அறியாமலேயே அவன் மீது ஒரு பிரேமை. பாரதத்தின் மைய நிலத்தில், இந்திரன் நகரிலிருந்து ஒரு இளநாகன் கிளம்புகிறான், அவன் ஊர்ப்புறத்தில் பருத்தி வெடித்து பறந்து செல்வதை கண்டு கண்டு அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118380

Older posts «