Category Archive: நேர்காணல்

ஆழத்து விதைப் பரப்பு

நம் நாயகர்களின் கதைகள் சென்ற காலத்தின் அடையாளமாகத் திகழும் பெரியவர்களைப் பார்க்கச் சென்றால் எப்போதும் ஒன்று நிகழும், நாம் வரலாறென ஒன்றை நினைத்திருப்போம்.  அது அரசியல்கட்சிகளால், அவர்களின் சொல்பரப்புநர்களான அரசியலெழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அதை மீறி பெரியவர்களின் வாயிலிருந்து நமக்குத்தெரியாத மெய்யான வரலாறு வெளிவந்து நம்மை திகைக்கவைத்தபடி முன்னால் கிடக்கும். தமிழகத் தலித் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், இடதுசாரிகளாயினும் திராவிட இயக்கத்தவராயினும், தலித் இயக்கத்தவராயினும் , அதில் காந்தியப் பேரியக்கம் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்வதே இல்லை. ஆனால் எவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119318

சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி

  அலகிலா ஆடல் -சைவத்தின் கதை   அலகிலா ஆடல்- சைவத்தின் கதை என்ற பேரில் சைவம் குறித்த நூலை எழுதிய துலாஞ்சனன் அவர்களுடனான பேட்டி. இலங்கையின் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது துலாஞ்சனனுடன் ஒரு பேட்டி

Permanent link to this article: https://www.jeyamohan.in/118198

அறிவியல் புனைகதைகள் பற்றி…

  அறிவியல் புனைகதைகள் மற்றும்  மீமெய்யியல் படைப்புகளுக்கான ஒரு தளமாக சிங்கப்பூரிலிருந்து  அரூ இணைய இதழ் இரண்டு மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அவ்விதழில் அறிவியல்புனைகதைகளைப்பற்றி என்னுடைய விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது.   கேள்வி அறிவியல் புனைவை ஒரு சீரியஸ் இலக்கியமாக கருதுகிறீர்களா? அல்லது அதனினும் குறைந்த ஒரு வகைமையாகவா? இலக்கியம் என்பது படிமத்தளத்தில் நிகழும் மன நுட்பங்களை அல்லது ஆழ்மன ஆடல்களை மொழியால் பிரதிசெய்வது என்று கொண்டால், அறி-புனைவுக்கும் அதுவேதான் இலக்கணமா? அதுவே சாத்தியமா? ஜெயமோகன் பேட்டி – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117413

சந்தன வீரப்பன், அன்புராஜ் – கடிதம்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெ, அன்புராஜ் அவர்களின் பேட்டி மிக நெகிழ்ச்சியான அனுபவம். சந்தனக்கொள்ளையன் வீரப்பனுடன் இருந்திருக்கிறார். காட்டில் கொள்ளையனாக வாழ்ந்திருக்கிறார். எல்லா வகையான அனுபவங்களையும் அடைந்திருக்கிறார். அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்து ஒரு சமூகசேவையாளனாகவும் கலைஞனாகவும் வாழ்கிறார். எழுபதுகளில் இப்படி சம்பல் பகுதியில் கொள்ளையர்களாக வாழ்ந்த சிலர் வினோபாவே- ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியால் மனம்திருந்தி சிறைக்குச் சென்று மறுவாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவருமே சிறையிலிருந்து வெளிவந்தபின் முற்றிலும் வேறுவகையான வாழ்க்கையையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116952

அன்புராஜ் – கடிதங்கள் – 2

[அன்புராஜ் பறவைகளின் குரலில் பறவைகளுடன் உரையாடுகிறார்] கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி அன்புள்ள ஜெயமோகன் அன்புராஜ் அவர்களின் பேட்டியை வாசித்தேன். ஒரு பெரிய நாவலை வாசித்ததுபோன்ற நிறைவு ஏற்பட்டது. எப்பேர்ப்பட்ட வாழ்க்கை. சாகசங்கள், போராட்டங்கள், மீட்பு. ஒருவர் இதன் வழியாக எவ்வளவோ துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் அவர் மீண்டு வந்துவிடுகிறார். தன்னை கண்டடைகிறர். ஒரு தவம்தான். சொல்லப்போனால் இந்தவகையான துன்பங்களே இல்லாமல் ஒருவாழ்க்கை இருந்தால் அதில் சொகுசு இருக்கும். ஆனால் கண்டடைதல் இருக்காது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116946

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

  அந்தியூர் அருகேயுள்ள கழுதைப்பாளி  மலையடிவார கிராமத்தில் நண்பர்கள் 12 பேர்களுடன் திரு. அன்புராஜை சந்தித்தோம். இவரை பற்றி   25-11-2018 அன்று தீ கதிரில் வந்திருந்த ஒரு  செய்தித்தொகுப்பை   அனைவரும் படித்திருத்தோம். வீரப்பனுடன் இணைந்து  9 வனவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் 1997 முதல் 2016 வரை 19 ஆண்டுகள்  9 மாதங்கள்   தொடர்ந்து  9 பகுதிகளாக தமிழக மற்றும் கர்நாடக சிறைச்சாலைகளில் தண்டணை அனுபவித்துவிட்டு  விடுதலையானவர். 7ம்  வகுப்பு படித்திருந்த 42 வயதுடைய அன்புராஜ் சிறையிலேயே ஒரு  பட்டயப்படிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116346

அ.முத்துலிங்கம் நேர்காணல்

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am   “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78

சீ முத்துசாமி நேர்காணல் -நவீன்

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் மலேசியப்படைப்பாளி சீ. முத்துசாமியின் நேர்காணல். நவீன் எடுத்தது. சமீபத்தில் இலக்கியவாதிகளிடம் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நேர்காணல் என்று இதைத்தான் சொல்வேன். அந்த இலக்கியச்சூழலை, அதன் வரலாற்றை, அவ்விலக்கியவாதியின் பங்களிப்பையும் குறைகளையும் நன்கு உணர்ந்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது “எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி ================================================ சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது ————————————————————————————————— சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன் சீ. முத்துசாமியின் ‘இருளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100236

கனடா CMR FM நேர்காணல் – 1

Canadian Multicultural Radio 101.3 FM-இல் ஒலிபரப்பான நேர்காணல்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/77030

மின்தமிழ் பேட்டி-கடிதம்

தமிழ் மின் இதழில் உங்களின் பேட்டியை மட்டுமே படித்தேன், மிச்சத்தை அடுத்த இதழ் வருவதற்குள் முடித்துவிடுவேன் என நினைக்கிறேன். நீங்கள் கொடுத்த மிக அருமையான பேட்டி அது. கேள்விகளும் உங்களின் , உங்கள் செயல்பாட்டின் அத்தனை தளங்களையும், குடும்பத்தையும், வாசிப்பையும் சேர்த்து அருமையாக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பொன்னியின் செல்வனுடன் ஏன் விஷ்ணுபுரத்தை ஒப்பிடக்கூடாது என்பதற்கான விளக்கம் அருமை. மிக நாகரிகமாக பதில் சொல்லி இருந்தீர்கள். அசோகவனம் பற்றிய பேச்சும், அது நீங்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் முடியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70028

Older posts «