Category Archive: நூல்

பிரதமன் சிறுகதைத்தொகுப்பு

பிரதமன் வாங்க சிறு தருணங்கள்  [நற்றிணை வெளியிடாக வந்திருக்கும் பிரதமன் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை] வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது அந்தப் பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக்கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர்செய்துகொண்டவை. அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர்வினைகளும்கூட. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117004

பனைமரச்சாலையில் ஒரு போதகர்

பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்-  வாங்க காட்சன் கடிதம்  ஜனவரி 9, 2019 அண்ணன், சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன். எனது பாதையினை நானே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117293

நற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’

  அமேசானில் மின்நூலாக வெளிவந்த தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் இப்போது நற்றிணை வெளியீடாக வந்துள்ளது. பெரும்பாலும் தென்தமிழகத்தைச் சேர்ந்த நாட்டார்தெய்வங்களின் கதைகளின் மறுஆக்கங்கள் இவை. அந்தக் கதைகளிலிருந்து ஒரு கண்டடைதலை நோக்கிச் செல்லும் அமைப்பு கொண்டவை. தமிழகத்து நாட்டார் தெய்வங்களை சமூகவியல் நோக்கிலும் கலைநோக்கிலும் ஆன்மிகநோக்கிலும் விரிந்த புலத்தில் வைத்து அறிந்துகொள்ள உதவுபவை. குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்   =========================================================================================== அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117279

இலக்கியமுன்னோடிகள்

இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள் இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்… அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். தமிழ் எழுத்தாளர்கள்ப் பற்றிய தங்களின் அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய ” இலக்கிய முன்னோடிகள் வரிசை” என்ற கட்டுரைத்தொகுப்பு  எம்.எஸ் கல்யாணசுந்தரம், கு.பா.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,மெளனி என்று தொடங்கி, .ப.சிங்காரம்,ஆ.மாதவன்,நீலபத்மநாபன் வரையில் ஏழுதொகுதிகளாக 2003 ல் தமிழினி பதிப்பில் வெளிவந்தது. இந்த ஏழு கட்டுரைத்தொகுப்பிலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகள் என 22 எழுத்தாளர்களை அறிமுகம்செய்து அவர்களின் படைப்புகளை மிகநேர்மையாக வெளிப்படையாக ஆய்வுசெய்தீர்கள். என்போன்ற வாசகர்களுக்கு அக்கட்டுரைகள் நல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117314

ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி

அன்புள்ள ஜெ.மோ.க்கு, நலமாக இருப்பதாக நினைக்கிறேன் என்று தான் சொல்வது வழக்கம். நீங்கள் நலமாகவே இருக்க வேண்டும். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபுகள் என்ற புத்தகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன். https://dineshrajeshwari.blogspot.in/2018/05/blog-post.html?m=1 அன்புடன் தினேஷ் ராஜேஸ்வரி

Permanent link to this article: https://www.jeyamohan.in/114910

கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்  

[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என  அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116317

நிலத்தில் படகுகள்

நிலத்தில் படகுகள் வாங்க நண்பர்களுக்கு வணக்கம், சென்ற வருடம் (2017) சீ.முத்துசாமி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களின் விவரங்கள்: S.No English Tamil Translator 1 A Waterfall of Horses குதிரைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116831

தன்மீட்சி 

வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் எதிலாவது மீண்டு மீண்டு அடுத்ததை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மீட்சியின் தொடரே வாழ்க்கை. ஒவ்வொருநாளும் காலையில் போர்வையை காலால் விலக்கி தூங்கி எழுவது ஒருவகை பிறப்பு என நான் நினைப்பதுண்டு. காலால் உதைத்து எம்பி எழுந்து முகம் வெளிக்காட்டி கருவறைநீங்குதல்.  இருண்ட சிறையிலிருந்து கருப்பாதை வழியாக ஒரு பயணம். ஓர் அதிர்ச்சி, கண்கூச்சம், மூச்சுத்திணறல். சூழ்ந்துகொள்ளும் புதிய உலகம். வாழ்க்கையின் ஒவ்வொரு கண்டடைதலும் ஒரு வகை மீட்சி. அரிதாக நாம் ஆழமாக சிக்கிக்கொள்கிறோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116673

உரையாடும் காந்தி

    ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில்  ஒன்று காந்தி. வேர்களை வெட்டிவிட்டு எழுந்து பறந்தவர்களின் யுகம் அது. ஆழ வேரூன்றி விழுதுகளையும் ஊன்றி வானுக்கு கைவிரித்தெழுந்த ஆலமரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116669

தன்னறம் நூல்வெளி

    செயல்படுவோர் அளிக்கும் மீட்பு அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, தற்காலச்சூழல் மெல்லமெல்ல தர்க்கச்சூழலாகவே, எல்லா பக்கங்களிலிருந்தும் அணுகப்படுவதை நாமனைவருமே பார்கிறோம். ஒருவித வெறுப்புணர்வு உச்சம் மனித மனங்களிலிருந்து எவ்விதத் தடையுமின்றி வெளிப்படுகிறது. எதிர்மைசார்ந்த பயணப்போக்கின் மீது ஒரு சாயல் ஏற்பட்டுள்ளதை நம்மால் மறுக்க முடியவில்லை. ஒன்றினை அடைதல் என்ற குறுஎல்லையை இலக்காக வைத்திருப்பதனால், நாமடைந்த இழப்புகளை கணக்கில்கொள்ளத் தவறிவிடுகிறோம். அவ்வகையில், இவ்வாழ்க்கையின் மீதும் அதன் உள்ளார்ந்த சத்தியத்தின் மீதும் எங்களுக்குப் பேரார்வமும் பெரும்பிடிப்பும் உண்டாக… உங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116627

Older posts «

» Newer posts