Category Archive: நூல்

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) ஊர் சேலம். உறவினர்கள் அங்குதான் இருக்கிறார்கள். ஒரு தம்பி, திருப்பூரில் வேலை செய்கிறான். இப்போது எர்ணாகுளத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். முறையான பள்ளிக் கல்வி வாய்க்கவில்லை, வேலைக்குப் போக நேர்ந்தது. இணையம் வழியும், தொலைநிலைக் கல்வி மூலமும் இப்போதே படித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்? என் வீட்டில் சற்றே வாசிப்புப் பழக்கம்  இருந்தது. தாத்தா வீட்டில் தொடர்கதைகளை இதழ்களிலிருந்து சேர்த்து பைண்ட் செய்தெல்லாம் வைத்திருந்தார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129037

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

பால்யகாலச் சித்திரங்கள் தொடர்ந்து ஆழ்மனதில் வண்ணம் உலராமல் தங்கி நிற்பவை. வயதேறும் தோறும் ஆழம் கொள்பவை. பிற்கால உலக அனுபவங்களை ஆழ்மனச் சித்திரங்களைக் கொண்டுதான் உரசிப் பார்த்துக் கொள்கிறோம். நல்லவை அல்லவை எனப் பிரித்துப் பார்ப்பதும் ஏற்பதும் மறுப்பதுமான உளத் தீர்மானங்களை இவையே உருவாக்கித் தருகின்றன. மனிதனின் அகத்தில் இவை நிகழ்த்தும் மாற்றங்களே அவனது குணாம்சங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன. சமூகத்தின் மீதான பார்வையும் அதனுடனான சமருக்கும் சமரசத்துக்குமான கருவிகளையும் காப்புகளையும் உருவாக்கித் தருவதும் இவையே. பசி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129045

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

2007ல் நான் நாகர்கோயிலில் இருந்து ஈரோடு நண்பர்களைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த பேருந்தில் விஜயராகவன் அறிமுகமானார். அவர் என்னை வாசித்திருந்தார். ஈரோடு நண்பர்களை என் வழியாக அறிமுகம் செய்துகொண்டார். அதன்பின் இன்றுவரை பயணத்தோழராகவும் விஷ்ணுபுரம் அமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்துவருகிறார். தொடர்ந்த வாசிப்பாளர். உலக இலக்கியத்தில் நீடித்த கவனம் கொண்டவர். தொடர்ச்சியாக மொழியாக்கங்கள் செய்துவந்தாலும் இப்போதுதான் முதல் நூல் வெளிவருகிறது உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) எனது பெற்றோருக்கு தலைமகனாக போடிநாயக்கனூரில் பிறந்து, அரசு பொறியாளரான தந்தையின் பணி காரணமாக மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129009

‘தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

. உலகின் பல்வேறுபட்ட படைப்பாளிகளின் படைப்புகளை படிக்கும்போது வாழ்வின் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வு, நிலைகுலைவுகள் ஆகியவற்றை அவர்கள் காண்பிக்கும் காட்சிபடிமங்களும் பல்வேறு கோணங்களும், அவர்களுடைய கலாச்சாரம் வாழ்நிலை சூழல் மதம் மற்றும் அரசியல் சார்ந்து பிரதிபலிப்பதை பார்த்து மொழிபெயர்க்க ஆவல் கொண்டேன். இத்தொகுப்பில், புனைவுகதைகளில் உள்ள உணர்வு வித்தியாசங்களுக்காகவும், படைப்பாளிகளின் படைப்புப் பார்வையில் பெண் எனும் பிரகிருதியை அவர்கள் அணுகும் விதங்களுக்காகவும் என் ரசிப்பின் அடிப்படையில் தேர்வு செய்துள்ளேன். கட்டற்ற வேட்கையையும், உடலை கொண்டாடும் போக்கையும், மாயா யதார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129012

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் வாங்க இனிய ஜெயம் பொதுவாக வாசித்த நூல் குறித்துதான் உங்களுக்கு உவகையுடன் எழுதுவேன். முதன் முறையாக இனிமேல் வாசிக்கப்போகிறேன் எனும் நூல் குறித்து குதூகலத்துடன் எழுதுகிறேன். அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்கள் வசம் நீங்கள் மதிப்புரை எழுதச்சொன்ன, பேசுகையில் நீங்கள் என் வசம் குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் லகுகீச பாசுபதம் நூல் குறித்து இணையத்தில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என அலசினேன். ஆச்சர்யம் ஒரு வாசகர்,முனைவர் அந்த நூலை அறிமுகம் செய்து எழுதி இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119350

நமது குற்றங்களும் நமது நீதியும்

பிரபலக் கொலைவழக்குகள் வாங்க ஒவ்வொருமுறை நான் மக்களின் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்யும் செய்திகளை வாசிக்கையிலும் அந்த வழக்குகள் பின்னர் என்ன ஆயின என்றே யோசிப்பேன். இந்திய நீதிமுறை என்பது மிகப்பெரிய ஒரு மோசடி என்பதிலும் பெரும்பாலான காவலதிகாரிகளும் நீதிபதிகளும் அறவுணர்வே அற்றவர்கள் என்பதிலும் இங்கு இத்தனை குற்றங்கள் பெருகுவதற்கு அவர்களே முழுமுதற்காரணங்கள் என்பதிலும் ஒவ்வொருநாளும் என் உறுதி பெருகியே வருகிறது. பொள்ளாச்சி பாலியல்கொடுமைச் செய்திகள் இணைய உலகை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்தபோது மாத்ருபூமி நாளிதழ் வெளியிட்ட செய்தியை வாசித்துக்கொண்டிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119203

சதுரங்கக் குதிரைகள்

கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’ இனிய ஜெயம் , இந்த மாதம் கண்டவற்றில், தேசிய புத்தக நிறுவனம், சீர்சேந்து முங்கோபாத்யாய வின் கரையான், குர் அதுல் ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி, இரண்டு நாவல்களையும் மறு பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். அரசு வழங்கும் தமிழ் எண்ம நூலகத்தில், கிரிராஜ் கிஷோர் எழுதிய சதுரங்கக் குதிரைகள் நாவல் பொது வாசிப்புக்கென இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது.  சுட்டி கீழே தமிழ் எண்ம நூலகம் – சதுரங்கக் குதிரை  கடலூர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119164

தன்மீட்சி – கடிதங்கள்

தன்மீட்சி  தன்மீட்சி -கடிதங்கள் தன்மீட்சி அன்புள்ள ஜே.எம், தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் தன் மீட்சி புத்தகம் ஏற்கனவே இணையத்தில் படித்த கடித பரிமாற்றமாக இருந்தாலும் கூட சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது. இதே தலைப்பில் இதை உள்ளடக்கிய ஒரு உரை கூட ஒன்று நிகழ்த்தலாம் . திருக்குறள், கீதை , காந்தி , வியாஸர் வரிசையில் சிறந்த உரையாக அமையக்கூடும் , வாழ்க்கை , அறம் , உளச்சோர்வு பற்றி தொடந்து  கேட்கும் வாசகர்களுக்கும் மீண்டும் மீண்டும் கேட்டு ஊக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117745

பிரதமன் சிறுகதைத்தொகுப்பு

பிரதமன் வாங்க சிறு தருணங்கள்  [நற்றிணை வெளியிடாக வந்திருக்கும் பிரதமன் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை] வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது அந்தப் பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக்கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர்செய்துகொண்டவை. அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர்வினைகளும்கூட. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117004

பனைமரச்சாலையில் ஒரு போதகர்

பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்-  வாங்க காட்சன் கடிதம்  ஜனவரி 9, 2019 அண்ணன், சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன். எனது பாதையினை நானே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117293

Older posts «

» Newer posts