Category Archive: நூல்

அட்டைகள்

மலையாளத்தில் பாஷாபோஷினி ஆண்டுமலரில் வெளிவந்த யானைடாக்டர் குறுநாவலை பத்து பதிப்பகங்கள் வெளியிடவிருக்கின்றன. மாத்ருபூமி பதிப்பு வெளிவந்துவிட்டது. மதிப்புரைகளும் பாராட்டுரைகளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு சேவை நிறுவனமான சைக்கிள் புக்ஸ் வெளியிட்டுள்ள எளிமையான முகப்பு ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. நூறுநாற்காலிகள் இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் அட்டைகளை பார்க்கையில் அதிலிருக்கும் வேறுபட்ட வாசிப்புகள் ஆச்சரியமூட்டுகின்றன. தொடக்கத்தில் அந்நாவல் நாற்காலிகளின் கதையாக வாசிக்கப்பட்டு மெல்ல அன்னையின் கதையாக ஆகிவிட்டதைக் காணமுடிகிறது. யானை டாக்டர் எடுத்த எடுப்பிலேயே யானைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99831

கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு

இனிய ஜெயம், இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் தலைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம் தொட்டு தற்போது வரை வெவ்வேறு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிந்து நாகரீகம்; சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்ட ஆளுமைகளில் மிஷேல் தானினோ அவர்களும் ஒருவர். [ கிழக்கு வெளியீடாக வந்த அவரது சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஆய்வு நூலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97477

குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு

  அன்பின் ஜெ தங்களிடம் முன்பே பகிர்ந்து கொண்டபடி என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் தங்கள் சிறப்பு வெளியீடாக செம்பதிப்பாக வெளியிட்டுள்ளனர். தங்கள் பார்வைக்கு முகப்பட்டை படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்… * சென்ற ஆண்டு நான் முடித்திருக்கும் NOTES FROM THE UNDERGROUND இன் மொழியாக்கம் நிலவறைக்குறிப்புக்கள் என்னும் தலைப்பில் விரைவில் நற்றிணை வெளியீடாக வர இருக்கிறது. திருத்தங்கள் முடித்தாயிற்று,ஈரோடு புத்தகக்கண்காட்சியின்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97093

தாமிராபரணம்

[முன்னுரை] நம் அரசு சார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் மூத்த பெரும்படைப்பாளிகள் கௌரவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்ட நிலைக்கு எதிரான செயல்பாடாகத் தொடங்கப்பட்டது விஷ்ணுபுரம் விருது. இது எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் அளிக்கப்படுகிறது. அவருடைய புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரத்தின் பெயரால் அமைந்தது. 2010ல் ஆ மாதவனுக்கு முதல்விருது அளிக்கப்பட்டது. 2011ல் பூமணியும் 2102 ல் தேவதேவனும் 2013 ல் தெளிவத்தை ஜோசப்பும் 2014 ல் ஞானக்கூத்தனும் 2015ல் தேவதச்சனும் இவ்விருதைப் பெற்றனர். 2016 ஆம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93576

துறைசார் நூல்கள்

        அன்புமிக்க திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் ’ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’ நூலின் ஆசிரியன். டிசம்பர் 23, 2012ல் நீங்கள் என் நூலுக்கு உங்கள் இணையதளத்தில் எழுதிய விமர்சனத்திற்கு நான்காண்டுகளுக்குமேல் தாமதித்து நன்றி கூறுவதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் அந்த நூலை ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த சிறந்த பத்துத் தமிழ்நூல்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று MIDS பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கும் கூட நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87918

எத்தனை காலடித்தடங்கள்!

  22.4.2012ல் எனக்கு ஐம்பது வயதாகியது. திடீரென்று வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்குச் சென்ற உணர்வு. அது ஒருபாவனைதான். மேலும் ஒரு இருபத்தைந்தாண்டுக்காலம் இருக்கலாமா என்று ஒரு கற்பனை. ஒரு சுயகிண்டல் புன்னகை. என் இணையதளத்தைத் திரும்பிப்பார்த்து மறைந்தவர்களைப்பற்றி நான் எழுதிய கட்டுரைகளை எடுத்து வாசித்தேன் நான் நினைவுகளை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறேன். எழுத்தாளனின் நினைவுகள் சிலகுறிப்பிட்ட இயல்புகள் கொண்டவை என்பதை வாசகர்கள் காணலாம். அவை துல்லியமான ஆளுமைச்சித்தரிப்பு கொண்டிருக்கும். முகபாவனைகள், சொற்கள், சூழல் , உணர்வுநிலைகள் எல்லாமே அழியாமல் அவனில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87726

அன்னம்மாள் பாடிய ஸ்ரீகோதா பரிணயம் (1906) -நா.கணேசன்

  தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் இமயத்தைத் தாண்டிவரும் ‘Super bird’ ஒன்று இருக்கிறது. இமயத்தை இருமுறை தாண்டி நம் மாநிலத்திற்கு வலசை வரும் அன்னப் பறவைகளில் ‘bar-headed’ geese’ என்றும் ‘graylag geese’ என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. சங்க இலக்கியத்திலும், பின்னரும் இந்தப் பறவைகளைப் பற்றிய செய்திகளை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளனர். உ-ம்: இவை முட்டையிட்டுப் குஞ்சுகளைப் பொரித்து பார்ப்புகளை வளர்ப்பது இமயத்திலே தான் (திபெத்தில்). இவையெல்லாம் சங்க இலக்கியத்தால் உய்த்துணரமுடியும். கலை, ஓவியம், சிற்பம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87398

‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு

என் பிரியத்திற்குரிய நண்பர் ‘காலம்’ செல்வம் அவர்களின் நூல் ‘ எழுதித்தீராத பக்கங்கள்’  கனடா டொரெண்டோ நகரில் வெளியிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது செல்வத்தின் பாரீஸ் அகதிவாழ்க்கை அனுபவங்கள் குறித்த நூல் இது. இக்கட்டுரைகளுக்கு நான் எழுதிய மதிப்புரை யானைவந்தால் என்ன செய்யும்?முன்னரே வெளியாகியிருக்கிறது ஜெ யானைவந்தால் என்ன செய்யும்? கடலோர மரம்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/85878

அலகிலாதவை அனைத்தும்

  விஷ்ணுபுரம் நாவலின் மீண்டுமொரு பதிப்பு வெளிவரும் இத்தருணத்தில் அந்நாவலை எழுதநேர்ந்த உளஎழுச்சிகளை நினைத்துக்கொள்கிறேன். நெடுநாட்களுக்கு முன் நண்பர்களுடன் திருவட்டார் ஆதிகேசவன் பேராலயத்திற்குச் சென்று அங்கே அக்கரு என்னில் விழுந்த அன்று நான் படுத்திருந்த அந்த மண்டபத்தை நோக்கினேன். அங்கிருந்த சிலைகள் அனைத்தும் என்னை விழிதொட்டு பேசமுற்படுவதுபோலத் தோன்றியது. அவை நம்முடன் பேசும் என்பதை அங்கே படுத்திருக்கையில் கண்ட கனவுகளில் அறிந்திருக்கிறேன். அச்சொற்களால் ஆனது விஷ்ணுபுரம் அந்த மொழிநடையில், கூறுமுறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85241

புல்வெளியின் கதை

உங்களுடைய புல்வெளி தேசம், ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரை படித்து முடித்தேன்! தனி நபர்கள் பெயர்களை எடுத்துவிட்டால் அது ஆஸ்திரேலியாவின் புவி இயல், வரலாறு பற்றிய பாடப் புத்தகமாக வைத்துவிடும் அளவிற்கான தரம் கொண்டிருந்தது. குறிப்பாக ,பலாரட் தங்கச் சுரங்கம், நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்வியல், வீடுகள் கட்டும் முறை, John Keynes Theory, கான்பெராவின் தொன்மை, அதன் நிர்வாக அனுகூலம்,நகர அமைப்பு,நீங்கள் வாசித்த போர் நாவல்கள், கலிபோலி போர்,ஆஸ்திரேலியர்களின் பொருள் வழிபாடு நிலை, பள்ளிகளில் வேலையை விரும்பிச் செய்யும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83498

Older posts «