Category Archive: நூலறிமுகம்

அ.கா.பெருமாளின் ‘தமிழறிஞர்கள்’

தமிழறிஞர்கள்- அ.கா.பெருமாள்  நூல் வாங்க இலக்கியப் படைப்பாளிகளுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு, இலக்கியப்படைப்பாளி வாழ்நாள் முழுக்க தனக்கான நினைவுச்சின்னங்களைத்தான் உருவாக்குகிறான் என்று சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் சொல்கிறார். அந்நினைவுச்சின்னமும் அழிந்துபோகுமென்றால் அவன் நல்ல படைப்பாளி அல்ல என்றே பொருள். அது ஆழமான ஆக்கம் என்றால் அதற்கு எப்படியும் வாசகர்கள் தேடிவருவார்கள். ஆனால் அறிஞர்களின் நிலை அது அல்ல. ஓர் அறிவியக்கத்தில் திருப்புமுனைகளை உருவாக்கியவர்கள், முன்னோடியான பார்வைகளை உருவாக்கியவர்கள் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்கள். எஞ்சியோர் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118668

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை

அலகிலா ஆடல்- சைவத்தின் கதை வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம் விழைகிறேன். இது ஒரு சாதாரணக் கடிதம் தான்.  ஐயம் கேட்கும் வாசகர் கடிதம் அல்ல. வேலைப்பளுவின் மத்தியில் (குறிப்பாகச் சொன்னால் வெண்முரசுப் பளுவின் மத்தியில்  ) இதைப் படிக்கிறீர்கள் என்றால், பிறகொரு முறை ஆறுதலாகப் படித்து பதிலிறுக்கலாம். என் “அலகிலா ஆடல்: சைவத்தின் கதை” நூல் தங்கள் கரம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தலைப்பிலிருந்து அதன் உள்ளடக்கத்திற்கு சில தகவல்களைத் தந்தது வரை எனது நூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118190

இந்திய நாயினங்கள் – தியோடர் பாஸ்கரன்

ஒளிரும் விழிகள்  குழையும் வால் நம்மை விளையாட அழைக்கிறது பிரபஞ்சம்  நாயின் உருவில் . ஒரு ஜென் கவிதை இந்திய நாயினங்கள்- தியோடர் பாஸ்கரன் – நூல் வாங்க இனிய ஜெயம் நினைவு தெரிந்த நாள் முதலாக, என் வாழ்வு ஏதேனும் ஒரு நாயுடனே பிணைக்கப்பட்டு நகரும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. நான் கொலை செய்த மணி முதல் கடந்த வருடம் என்னை விட்டுவிட்டுப் போன ஒற்றைக்கண் பிளாக்கி வரை.   எங்கள் குலதெய்வத்துக்கு வீட்டு விலங்காக நாய் வைத்திருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118104

பனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை

பனைமரச்சாலை –  வாங்க காட்சன் எழுதி நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் பயணநூலான பனைமரச்சாலை குறித்து ”உழைத்துக் காய்த்த உடல்போல கருமையாக, திடமாக, மண்ணில் வேரூன்றி வானில் தலை தூக்கிப் பனை மரங்கள் நிற்கின்றன. வன்மம் மிக்க முனகல்கள் அவற்றிலிருந்து எப்போதும் எழுந்து கொண்டிருக்கின்றன. பனையேறிகளைப் போல பனைகளும் அதிகம் பேசுவதில்லை.  அவை அபூர்வமாக வெறிகொள்வதுண்டு; மதுவுண்டு போதையேறிய பனையேறிகளைப் போல. அவைஅப்போது ஊளையிட்டு அலறி தலை சுற்றித் தாண்டவமாடும்.  அப்போது கூட அடிமரம் திடமான கருங்கல் கோபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117956

நடேசனின் “எக்ஸைல்”- முருகபூபதி

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும்  தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. நோயல் நடேசனின் எக்ஸைல் நூலைப் பற்றி முருகபூபதியின் விமர்சனம். சார்பு நிலையெடுக்காத  குரல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/117424

ஒரு தொல்நகரின் கதை

தமிழில் ஆண்டுதோறும் வரும் வரலாற்று நூல்கள் இரண்டுவகை. ஒன்று, வரலாறு என்றபேரில் நினைத்ததை எல்லாம் எந்தத் தர்க்க ஒழுங்குமில்லாமல் எழுதிக்குவிக்கும் எழுத்துக்கள். அவை மூன்று வகை.  திராவிட, தமிழ்த்தேசியப் பெருமிதங்களை அடிப்படையாகக் கொண்டு கொரியமொழி தமிழ்மொழியே, எகிப்தும் தமிழ்நாடே என்றவகையில் எழுதப்படுபவை ஒருபக்கம். இன்னொருபக்கம் இணையான அசட்டுத்தனத்துடன் அனைத்தையுமே சம்ஸ்கிருத, பிராமணியப் பெருமிதவரலாற்றுடன் திரித்து இணைத்துக்கொள்ளும் வரலாறுகள். முந்தைய வரலாற்றுக்கு நவீனவரலாற்றாய்வு என்னும்பாவனை உண்டு. இரண்டாவது வரலாற்றுக்கு தொன்மச்சார்பும் அதிலிருந்து கிளைத்த தொகுப்புமுறையும் உண்டு. மூன்றாவதாக இன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117123

மங்காப் புகழ் புத்தர்

வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் தாங்களே முற்றாக வகுத்து முடிவெடுத்துவிடுகின்றன. நாம் செய்வதற்கொன்றுமில்லை. ஆனால் பிறிதொரு தருணத்தில் எனக்கு வரைகலைநாவல்கள் தேவைப்பட்டன. மூளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117100

நம் நாயகர்களின் கதைகள்

    ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி வழிமறிக்கும் வரலாற்று ஆவணங்கள்” என்னும் நூலை கையிலெடுத்தபோது படித்து முடிக்க குறைந்தது ஒருவாரம் ஆகும் என்று நினைத்தேன். அதன் தலைப்பு உருவாக்கிய சித்திரம் அது. அன்று மத்தியானத்திற்குள் அந்த நூலை படித்து முடித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஒரு கட்டுரை நூலை இத்தனை ஆர்வத்துடன் நான் படித்ததில்லை. கட்டுரை நூல்கள் பொதுவாகவே சற்று சலிப்பை ஊட்டலாம், அறியும் பொருட்டு நாம் அவற்றை படிக்க வேண்டும் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100192

கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு

இனிய ஜெயம், இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் தலைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம் தொட்டு தற்போது வரை வெவ்வேறு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிந்து நாகரீகம்; சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்ட ஆளுமைகளில் மிஷேல் தானினோ அவர்களும் ஒருவர். [ கிழக்கு வெளியீடாக வந்த அவரது சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஆய்வு நூலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97477

சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’

  சி. சரவண கார்த்திகேயன், இணைய ஊடகங்களில் எழுத ஆரம்பித்து அங்கிருந்து அச்சு ஊடகங்களுக்கு சென்று எழுத்தாளராக அறியப்பட்டவர். இணைய ஊடகங்களில் எழுதுபவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அங்கு தரப்படுத்தப்பட்ட வாசகர்கள் இல்லை என்பது. சிற்றிதழ்களுக்கோ இடைநிலை இதழ்களுக்கோ அவர்களின் வாசகர்களுக்கோ அந்த இதழ்களாலேயே தரப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பார்கள். இணையம் அனைவரும் வந்து செல்லும் ஒரு பொதுவெளி போலிருக்கிறது.   தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அழைக்கப்பட்ட விருந்தினர் நடுவே மூடிய அறையில் ஆற்றும் உரைக்கும் முச்சந்தியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94723

Older posts «

» Newer posts