Category Archive: நூலறிமுகம்

எங்குமென நின்றிருப்பது

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ” ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு பழுத்த தென்னையோலை மிக இயல்பாக, ஓசையே இல்லாமல் மரத்திலிருந்து பிரிந்து மிதந்து இறங்கியது. ஆற்றூர் சொன்னார் “முளைக்க வைத்து நீட்டுவதுதான் கஷ்டம்” பலசமயம் கவிஞர்கள் எல்லாவற்றையுமே கவிதையெனக் காண்கிறார்கள். ஆற்றூர், கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் அன்றாடப் பேச்சில் அவ்வகை வரிகள் வந்தபடியே இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129902/

செயல்யோகத்தின் சுவடுகள்

நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஆங்கிலேயர்களுக்கு உள்ள பங்கைப்பற்றிச் சொல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதன்மையான சிக்கல், நம்மவர்களின் ஒற்றைப்படுத்திப் பார்க்கும் பார்வைதான். ஆங்கில காலனியாதிக்கம் இந்தியாவை ஒட்டச்சுரண்டி இருள்பரவச் செய்து அதன் பல்லாயிரமாண்டு மாண்பை அழித்தது என்பது எத்தனை உண்மையோ அதற்கு நிகரான உண்மை இந்தியாவின் எளிய மக்களை விரும்பிய, அவர்களின் வாழ்வின் மேம்பாட்டுக்காக உழைத்த மாமனிதர்களில் பலர் ஆங்கிலேயர்கள் என்பது. இந்தியாவிற்கு நவீன சிந்தனைகளை, நவீன உலகின் விழுமியங்களை அவர்கள் கற்பித்தனர். இந்த இரட்டைநிலை ஐரோப்பாவிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129782/

பாலையின் களிப்பு

பாலைநிலப்பயணம் வாங்க   நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை கிண்டிலில் நூலாக பதிப்பித்திருக்கிறார் அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129985/

துரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது…

ஒரு மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் மிக முக்கியமானவை, அவை அம்மொழியின் பிற்காலத்தைய இலக்கியங்களுக்கான விதைகள் அடங்கியவை. அந்தப்படைப்புகளின் நேரடிப் பாதிப்பினால், அல்லது பாதிப்பை அஞ்சி நேர் எதிராக விலகும் போக்கினால் அந்த மொழியின் அடுத்த காலகட்ட எழுத்துக்கள் உருவாகியிருக்கும். செல்வாக்கு குறித்த அச்சம் [Anxiety of  Influence ] என இதை ஹரால்ட் புளூம் குறிப்பிடுகிறார் தமிழில் புதுமைப்பித்தனை முன்வைத்து இதை ஆராயலாம். புதுமைப்பித்தனின் ஆக்கங்களின் செல்வாக்கு வெவ்வேறு வகையில் தமிழில் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. அழகிரிசாமி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129860/

கணக்கு

’கணக்கு பாக்காதே’ என்று ஒரு சொலவடை உண்டு. எங்கெல்லாம் அது சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைவுகூர்கிறேன். பெரும்பாலும் சாவுவீடுகளில். “சரி இனிமே கணக்குப் பாத்து ஆகவேண்டியது என்ன? எல்லாம் அவன் நினைப்புப்படி….” என்று எவரேனும் சொல்வார்கள்? அதென்ன கணக்கு? கணக்கு என்னும் சொல் கணிப்பு என்பதிலிருந்து வந்தது. மூலவேர் கண் என்பதாக இருக்கலாம். எண்ணித்தொகுப்பது மட்டும் அல்ல, கூட்டுவது கழிப்பது மட்டும்  அல்ல, கணக்கு என்றால் சென்றதை நினைத்துக்கொள்வது ,வருவதை கற்பனைசெய்துகொள்வது, வேறுவாய்ப்புகளை எண்ணிப்பார்ப்பது, வெவ்வேறுவகையில் நிகழ்த்திக்கொள்வது எல்லாம்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129926/

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்

கால்டுவெல் குறித்து தமிழில் எப்போதுமே பேச்சு உள்ளது. இன்று அவர் வரலாற்றில் வகிக்கும் இடம் தமிழில் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் என்பது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவருடைய முதன்மையான நூலாக கருதப்படுகிறது. திருநெல்வேலி சரித்திரம் குறிப்பிடத்தக்க இன்னொரு நூல். தமிழின் வரலாற்றெழுத்தை தொடங்கிவைத்த தொடக்க கால நூல்களில் ஒன்று அது. அதேசமயம் திருநெல்வேலிச் சாணார் வரலாறு [1849] என்றபேரில் அவர் நாடார் சாதியினரை பற்றி எழுதிய நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129873/

பாரதி நினைவுக்குறிப்புகள்

பாரதி நினைவுக்குறிப்புகள்   நண்பர்கள் நினைவில் பாரதியார்- தொகுப்பாசிரியர் இளசை மணியன். வெளியீடு சிறுவாணி வாசகர் மையம். கோவை. [email protected]   பாரதியைப் பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது தமிழில், தமிழ்ப்படைப்பாளிகளில் அவர் அவ்வகையில் நல்லூழ் கொண்டவர். அவருக்கு வரலாற்றாசிரியர்கள், தொகுப்பாளர்கள் பலர் அமைந்தனர். அவருடன் வாழ்ந்தவர்களே பலர் அவருடைய வாழ்க்கையை எழுதினார்கள். ஆகவே ஓரளவு அவருடைய வாழ்க்கை நமக்கு தெரிகிறது   பரலி நெல்லையப்பர், வ.ரா, கனகலிங்கம், யதுகிரி அம்மாள், செல்லம்மா பாரதி ஆகியோர் அவருடனான நேரடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129835/

ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்

    முதல் தொகுப்பில் வரும் கதைகளே ஒரு ஆசிரியரின் எண்ணவோட்டத்தை நமக்கு அளிக்கின்றன. அவை அவரது ஆரம்பகால கதைகளாக இருக்கும் பட்சத்தில். அதன் பின்னான தொகுப்புகள் பெரும்பாலும் அதை கயிறு திரித்தோ அல்லது கூர்தீட்டியோ அலங்காரம் செய்தோ மேலெழுபவையாகத்தான் இருக்கின்றன. அதானால்தான் எந்த ஒரு எழுத்தாளருக்கும் முதல் தொகுப்பின் கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. அவற்றில் போதாமைகள் இருக்கலாம் எழுத்துப்பிழைகள் இருக்கலாம் வடிவ நேர்த்தி குறைந்திருக்கலாம் ஆனால் வாசகனுக்கு அவை முக்கியமானவையே. ஏனெனில் அந்த எழுத்தாளர் ஏன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129686/

அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்

  (1)   மிகச்சரியாக பதினோரு வருடங்கள் முன்பு விகடனில் வெளியான ‘வாகனம் பூக்கும் சாலை’ என்ற சிறுகதைதான் அழகியபெரியவன் எழுதி நான் வாசித்த முதல் சிறுகதை. அதற்கு விகடன் தளத்தில் பின்னூட்டமிட்டதும் நினைவிருக்கிறது. அதன்பின் இணையதளங்களில் அவரது கட்டுரைகளை வாசித்து வந்தாலும், கேணி கூட்டம் போன்ற மேடைகளில் அவரது உரைகளை கேட்டிருந்தாலும்  மீண்டும் முழுமையாக அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு சென்ற வருடம்தான் வாய்த்தது. சென்ற வருட துவக்கத்தில் தமிழினி வெளியீடாக வந்திருந்த ‘கொங்குதேர் வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129628/

பத்து உரைகள் – கடிதங்கள்

பத்துநூல் வெளியீடு உரைகள். அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகளையும் கேட்டேன். கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் உரைகள் சிறப்பாக இருந்தன. விஜயகிருஷ்ணன் பேச்சு என் ஏரியா இல்லை. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை. மற்றபடி அனைவருமே சுருக்கமாகவும் சிறப்பாகவும் பேசினார்கள். எங்கும் எவரும் மீறிப்போகவோ திசைமாறவோ இல்லை. சுருக்கமாக புத்தகம் பற்றியே பேசினார்கள். கதைச்சுருக்கம் சொல்லிவிட்டு போகவும் இல்லை. இளம்பேச்சாளர்களில் பிரியம்வதாவும், நவீனும் நன்றாகப் பேசினார்கள். நவீன் சுருக்கமாகப் பேசினார். முத்துக்குமார் மிகவும் தணிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129417/

Older posts «