Category Archive: நூலறிமுகம்

நம் நாயகர்களின் கதைகள்

    ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி வழிமறிக்கும் வரலாற்று ஆவணங்கள்” என்னும் நூலை கையிலெடுத்தபோது படித்து முடிக்க குறைந்தது ஒருவாரம் ஆகும் என்று நினைத்தேன். அதன் தலைப்பு உருவாக்கிய சித்திரம் அது. அன்று மத்தியானத்திற்குள் அந்த நூலை படித்து முடித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஒரு கட்டுரை நூலை இத்தனை ஆர்வத்துடன் நான் படித்ததில்லை. கட்டுரை நூல்கள் பொதுவாகவே சற்று சலிப்பை ஊட்டலாம், அறியும் பொருட்டு நாம் அவற்றை படிக்க வேண்டும் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100192

கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு

இனிய ஜெயம், இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் தலைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம் தொட்டு தற்போது வரை வெவ்வேறு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிந்து நாகரீகம்; சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்ட ஆளுமைகளில் மிஷேல் தானினோ அவர்களும் ஒருவர். [ கிழக்கு வெளியீடாக வந்த அவரது சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஆய்வு நூலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97477

சி.சரவணகார்த்திகேயனின் ’இறுதி இரவு’

  சி. சரவண கார்த்திகேயன், இணைய ஊடகங்களில் எழுத ஆரம்பித்து அங்கிருந்து அச்சு ஊடகங்களுக்கு சென்று எழுத்தாளராக அறியப்பட்டவர். இணைய ஊடகங்களில் எழுதுபவர்களின் முக்கியமான சிக்கல் என்னவென்றால், அங்கு தரப்படுத்தப்பட்ட வாசகர்கள் இல்லை என்பது. சிற்றிதழ்களுக்கோ இடைநிலை இதழ்களுக்கோ அவர்களின் வாசகர்களுக்கோ அந்த இதழ்களாலேயே தரப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக இருப்பார்கள். இணையம் அனைவரும் வந்து செல்லும் ஒரு பொதுவெளி போலிருக்கிறது.   தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அழைக்கப்பட்ட விருந்தினர் நடுவே மூடிய அறையில் ஆற்றும் உரைக்கும் முச்சந்தியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94723

பண்பாட்டரசியலின் குரல்

  ஜடாயு என்னும் பேரில் எழுதும் திரு சங்கரநாராயணன் சென்ற சில ஆண்டுகளில் தமிழ்ஹிந்து உள்ளிட்ட இணையதளங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. ஜடாயுவின் நிலைப்பாட்டை ’இந்துத்துவப் பண்பாட்டு அரசியல்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம். அந்நோக்கில் இன்றைய பண்பாட்டுச்சிக்கல்களை ஆராய்ந்து விரிவான ஆராய்ச்சிக்குறிப்புகளுடன் இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் இன்றைய சூழலில் இந்து என்ற சொல்லே ஓரு வசைச்சொல்லாக ஆக்கப்பட்டுள்ளது அதன் வெறுப்பாளர்களால். இந்துத்துவம் என்னும் சொல் ஓர் அரசியல்நோக்கு. ஆனால் அதை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாத எதிர்த்தரப்பினர் அதன்மேல் வெறுப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83283

ஜெயகாந்தனின் நினைவில்…

தமிழில் மிகக்குறைவாகவே எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். எழுதும்போது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கும் வணிக எழுத்தாளர்கள் எழுத்தை நிறுத்தும்போது அப்படியே மறைந்துபோய்விடுவதைக் காணலாம். ஒருமுறை சேலத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் ஒருவரைச் சுட்டிக்காட்டி ”அவர்தான் மகரிஷி, எழுத்தாளர்” என்றனர். என்னுடனிருந்த எவருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. எழுபதுகளில் அவர் குமுதம் வார இதழ் வாசகர்கள் நடுவே மிகப்பெரிய நட்சத்திரம். அவரது பலநாவல்கள் சினிமாக்களாகியிருக்கின்றன. ஒன்றில் ஜெயலலிதா நடித்திருக்கிறார், நதியைத்தேடிவந்த கடல். ஜானகிராமனின் பாதிப்புள்ள, காமம் கலந்த, மென்மையான உணர்ச்சிகரமான கதைகள். வணிக எழுத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81414

மீன்குருதி படிந்த வரலாறு

[ 1 ] 2008 ஜூன் 13 ஆம் தேதி நாகர்கோயில் கார்மல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. நண்பர் வறீதையா கன்ஸ்தண்டீன் அதன் ஒருங்கிணைப்பாளர். நெய்தல் என்னும் அமைப்பின் நிகழ்ச்சி. கடலோர மக்களை எழுதச்செய்வதற்கான ஒரு முயற்சியின் தொடக்கம் அது. அதில் நான் பேசினேன். எழுதப்போகிறவர்கள் என்னும் தலைப்பில் நான் அதில் பேசியது பிரசுரமாகியிருக்கிறது. அந்த உரையில் எழுத்துக்கான அடிப்படை மனநிலைகளை உருவாக்கிக்கொள்வது, எழுதுவதற்கான சில பயிற்சிகள், எழுத்துக்கு எதிரான சில போக்குகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80890

கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

1

ஒரு கவிஞரின் முழுத்தொகுப்பை வாசிக்கையிலேயே அவரைப்பற்றிய சித்திரம் நம்முள் அமைகிறது. பொதுவாக சிற்றிதழ்களில் அள்ளிக்குவிக்கப்படும் கவிதைகளை சலிப்புடன் கடந்துசெல்லக் கற்றுவிட்டிருக்கிறேன். காரணம் மிக அரிதாகவே அவற்றில் அரிய கவிதைகள் தட்டுப்படுகின்றன என்பது மட்டும் அல்ல. இன்றைய கவிதைகள் மொழி, கூறுமுறை, கூறுபொருள் ஆகியவற்றில் பொதுத்தன்மைகொண்டு ஒற்றைப்படலமாக, ஒரே பிரதியாக ஆகிவிட்டிருக்கின்றன என்பதுதான். ஆகவே நல்ல கவிதைகளை அவற்றிலிருந்து பிரித்தெடுப்பதே அரிதான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. இந்நிலையில் கவனம்பெறும் கவிதைகள் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. அந்த மாறுபாடே அளவுகோலாகக் கொள்ளப்படும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80685

ஏக்நாத்தின் ‘ஆங்காரம்’

பரவலாகக் கவனிக்கப்பட்ட கெடைகாடு நாவலுக்குப்பின் ஏக்நாத் எழுதியிருக்கும் நாவல் ஆங்காரம். ஒரு ரயில்பயணத்தில் இதை வாசித்துமுடித்தேன். இதன் ஈர்ப்புக்கு முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தபோது இதிலுள்ள நாஞ்சில்நாடன் எழுத்தின் சாயல்தான் என்று தோன்றியது. நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில்காயும்’ போன்ற நாவல்களுக்கு பலவகையிலும் அணுக்கமானது ஆங்காரம். குமரிக்குப்பதில் திருநெல்வேலிமாவட்டம். சற்றே வரண்ட நிலம். ஆடுமாடு மேய்த்தலும் மழையை நம்பி விவசாயம் பார்ப்பதும் தொழில்.படிப்படியாக அழிந்துவரும் கிராமச்சூழல். அதில் ஒரு வறிய உயர்சாதி [வேளாள] இளைஞனின் இளமைக்காலம். நாவலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80576

ஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு

1

ஸ்ரீபதி பத்மநாபாவுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இருவருமே தமிழில் எழுதும் மலையாளிகள். பண்பாட்டுக்குழப்பங்களில் முக்கியமானது தமிழனாக மலையாளப் பண்பாடும் மலையாளியாகத் தமிழ்ப்பண்பாடும் அளிக்கும் மனக்கிளர்ச்சிதான். ஸ்ரீபதி தமிழில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆரண்யம் என்னும் நடுப்போக்குச் சிற்றிதழை நண்பருடன் சேர்ந்து நடத்தியிருக்கிறார் அவரது வாழ்க்கைக்குறிப்புகள் அடங்கிய சிறிய நூல் மலையாளக்கரையோரம். பெரும்பாலானவை இணையக்குறிப்புகளாக வெளிவந்திருக்கக் கூடும். சுயகிண்டலும் இளஞ்சிரிப்புள்ள சமூக விமர்சன நோக்கும் ஓடிக்கொண்டிருப்பவை. ஆனால் இவற்றை முக்கியமானவையாக ஆக்குவது இன்னும் வளராத சிறுவனின் ஒரு பார்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80542

ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்

2111

அருந்ததி ராயின் அத்தனை அரசியல் கருத்துக்களையும் ஒற்றைவரியில் ‘முதிர்ச்சியற்ற, சமநிலையற்ற, தற்காலிகப்புகழைத்தேடும், உள்நோக்கம்கொண்ட எழுத்துக்கள்’ என சொல்லிவிடலாம். அவருக்குப்பின்னால் இருப்பது ஒரு சர்வதேச வலை. தன்னார்வக்குழுக்களாலும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளாலும் புரக்கப்படுவது அது அருந்ததி காந்தியைப்பற்றி எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ என்னும் கட்டுரை தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இங்குள்ள இந்திய எதிர்ப்புத் தன்னார்வக்குழுக்களாலும் அரசியலமைப்புக்களாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான ஒரு வாரத்திற்குள் ஓர் அரசியல் ஆவணம்போல இந்த அபத்தமான கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78638

Older posts «