Category Archive: நீதி

நமது குற்றங்களும் நமது நீதியும்

பிரபலக் கொலைவழக்குகள் வாங்க ஒவ்வொருமுறை நான் மக்களின் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்யும் செய்திகளை வாசிக்கையிலும் அந்த வழக்குகள் பின்னர் என்ன ஆயின என்றே யோசிப்பேன். இந்திய நீதிமுறை என்பது மிகப்பெரிய ஒரு மோசடி என்பதிலும் பெரும்பாலான காவலதிகாரிகளும் நீதிபதிகளும் அறவுணர்வே அற்றவர்கள் என்பதிலும் இங்கு இத்தனை குற்றங்கள் பெருகுவதற்கு அவர்களே முழுமுதற்காரணங்கள் என்பதிலும் ஒவ்வொருநாளும் என் உறுதி பெருகியே வருகிறது. பொள்ளாச்சி பாலியல்கொடுமைச் செய்திகள் இணைய உலகை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்தபோது மாத்ருபூமி நாளிதழ் வெளியிட்ட செய்தியை வாசித்துக்கொண்டிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119203

சட்டமும் அறமும்

  அன்பின் ஜெ.. எனது புரிதலில் உள்ள தவறைச் சுட்டியிருந்தீர்கள். நன்றி. உங்களுக்குக் கடிதம் எழுதிய பின்னர், அது எனக்குத் தோன்றியது – வேலைப்பளு அதை மீண்டும் சுட்டி எழுத விடாமல் இழுத்து விட்டது என்பதை இப்போது சொன்னால் சாக்குப் போக்காக இருக்கும். அடிப்படை விஷயங்களான – சமூக அறம் / உரிமைகள் –  போன்ற விஷயங்களில்,  பல முன்னோடி தீர்ப்புகள் வந்திருக்கின்றன. .  தினசரி நம் மீது குவியும் செய்திகளில், இது போன்ற ஒரு பகுதியை வெளிச்சத்தில் பார்ப்பது மிக அவசியம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88909

பெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்…

  ஆசிரியருக்கு, இணைப்பு –http://www.legallyindia.com/bar-bench-litigation/read-justice-sanjay-kishan-kaul-s-epic-defence-of-freedom-of-expression-author-perumal-murugan நீங்கள் நீதிமன்றங்களுக்கு வழங்கியிருக்கும் பாராட்டுதல்கள் சற்று அதிகப் படியானது, போகட்டும். முதலில் இந்த விஷயத்தில் இரண்டு முக்கிய பேசுபொருட்கள் சற்றேறக் குறைய அனைத்து விவாதங்களிலும் இத்தீர்ப்பிலும் விடுபட்டுள்ளது. புனைவென்பதும் ஒரு மாற்று வரலாறே : தற்போது வரலாற்று மறுஉருவாக்கம் ஏராளமாக அசலிலும் மொழிபெயர்ப்பிலும் வருகிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கும் புனைவுக்குமான கோட்டை கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக கிட்டத்தட்ட அழித்தே விட்டது புனைவு எழுத்து. இப்புனைவு இதை ஒரு மாற்று வரலாறு என கோருகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88891

நமது நீதிமன்றத்தீர்ப்புகள்….

அன்பின் ஜெ.. பெருமாள் முருகன் தீர்ப்பில், “நீதி மன்றத்தின் தீர்ப்பில் சற்றே நம்பிக்கை வருகிறது” என்னும் போலி அறப்பாவனையை சொன்னீர்கள். உங்கள் வாக்கியத்தில், நீதி மன்றத்தில் பெரும் அறத்தீர்வுகளே வருகிறது என்னும் பாவனையும் உள்ளது. பெரும்பாலும் முற்போக்கு; விதிவிலக்குகள் அபூர்வம் என. இதை புள்ளியியல் கொண்டு விளக்க முடியாது; தரவுகள் இல்லை. ஆனால், நீங்கள் சொல்லும் விதிவிலக்குகள் சிலவற்றைக் குறிப்பிடத் தான் வேண்டும். இதில் ஆதி முதல்வர், குமாரசாமி. பெரும் கற்பனைத் திறமும், காவியச் சாயலும் கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88848

பெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்

  பெருமாள் முருகனின் எழுத்து சமூகத்தடைக்கு உள்ளான வழக்கில் தீர்ப்பு வந்துள்ள விஷயத்தை நண்பர்  ‘இந்து’ கோலப்பன் அழைத்துச்சொன்னார். தீர்ப்பின் குறிப்பிடத்தக்க பகுதிகளை அவரே அனுப்பியிருந்தார். நான் இங்கிலாந்தின் கிராமப்புறங்களில் சுற்றிக்கொண்டிருந்த தருணம்.  திரும்பி வரும்வழியில் விமானநிலையத்தில் அதை வாசித்தேன். முழுமையாக வாசித்துக் கருத்துச்சொல்லும் சட்டம் அறிந்த நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்களிடம் பேசவேண்டும். அதற்கு முன் ஒரு உடனடி மனப்பதிவு இது. இது எல்லாவகையிலும் ஒரு முற்போக்கான தீர்ப்பு. ஆனால் இத்தீர்ப்பு வந்ததுமே பலர் ‘நீதிமன்றத்திடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88786

பெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்…

உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு பெருமாள் முருகன் அறிக்கை. நண்பர்களே, வணக்கம். தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் ஒளியைப் பற்றிப் பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன். ஒன்றுமில்லை, மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்கிறது மனம். துணைநின்ற நண்பர்களுக்கு நன்றி. எதிர்நின்ற நண்பர்களுக்கும் நன்றி. பூ   பெருவெடிப்புக்குப் பின் ஒரு பூ மலர்கிறது கூர்மணம் நறுந்தோற்றம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88780