Category Archive: நிகழ்ச்சி

பத்மபிரபா நினைவு விருது

என்றாவது வெகுதூரப் பயணத்துக்குப் பிறகு வீடு திரும்பும் நேரம் ஏதோவொரு நாளின் குளிரடங்காத அதிகாலையாகவே இருக்கிறது. கதவைத் திறந்த அம்மா கைப்பையை வாங்கியதும் இளைத்துப் போனாயே என்று கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். காய்சலோ  வேறு தொந்தரவோ என்று நெற்றியையும் கன்னத்தையும் தொட்டுப் பார்க்கிறாள். குளிரில் நடுங்கும் உடலில் மேலும் அவள் தொடுகை சில்லிடுகிறது. அப்படித்தான் கவிஞர் கல்பற்றா நாராயணனின் சொற்கள். அவர் தன் கவிதைகளைச் சொல்வதோ தன் நிலத்துக்கே உரிய குளிராக. இரவில் மலையேற்றமும் காணத்தோன்றாத உறக்கத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118065

உரையாடும் காந்தி – உரையாடல், சென்னை

வணக்கம், காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 30.01.2019 அன்று (மாலை 6.45-7.45), நெய்வேலி பாலு அவர்கள்  “உரையாடும் காந்தி” என்ற ஜெயமோகன் அவர்களின் நூலை அறிமுகம் செய்து பேசுகிறார்.   இடம்: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600017 தொடர்புக்கு:  9790740886 (ம) 9952952686 மாலை 6.45-7.45 அனைவரும் வருக!! பேச்சாளர் பற்றி: நெய்வேலி பாலு அவர்கள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொழிற்சங்கவாதி, அரசியல் விமர்சகர், தமிழ் உணர்வாளர் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117699

உரையாடும் காந்தி – இளையோர் சந்திப்பு – கோவை

  இளையவர்களின் மனச்சக்தியையும் செயலூக்கத்தையும் நம்பியே கடைசிவரை காந்தியின் ஆத்மா துடித்துக்கொண்டிருந்தது. இன்று, இந்தியதேசத்தின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதம் மனிதர்கள் 35 வயதுக்குட்பட்ட இளையோர்கள். சிந்தனையளவில் நமக்கு இளந்துடிப்பு இரத்தம் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. பூமிக்கிரகத்தின் பழமையான தேசங்களிலும் ஒன்றாகவும், இளையசக்திகளின் திரளாகவும் இந்தியதீபகற்பம் ஒரே சமயத்திலிருக்கிறது. காந்திய எதிர்ப்பு என்பதும் அஹிம்சை மீதான அவதூறு என்பதும் இன்றைய இளைஞர்களிடத்து ஒரு கிளர்வை உருவாக்கி விமர்சிக்கத் தூண்டுகிறது. காந்தியம் சரியா தவறா என்பதற்கான துவக்கயுரையாடல்கள் ஏதும் துவங்கப்படாமலேயே, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117516

சென்னையில் பாவண்ணன் விழா

பாவண்ணனைக் கொண்டாடுவோம்! இந்திய- அமெரிக்க வாசகர் வட்டம் நடத்தும் பாவண்ணனைப் பாராட்டுவோம் “  நாள்: 26.05.2018 சனிக்கிழமை இடம்: கவிக்கோ அரங்கம்   6,சி.ஐ.டி.காலனி, 2ம் பிரதான சாலை மைலாப்பூர் சென்னை -600 004   நேரம்: 09.45 -10.45   வாழ்த்துப்பாடல் : ரவி சுப்பிரமணியன் வரவேற்புரை:    அ.வெற்றிவேல் தொடக்கவுரை:   பவா. செல்லத்துரை     அமர்வு:1   நேரம்: 10.45 – 11.45 பாவண்ணன் சிறுகதை எம்.கோபாலகிருஷ்ணன் கடற்கரய் ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்பிரமணியன்     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109389

எம்.ஏ.சுசீலா நன்றியுரை

அன்பின் ஜெ, வணக்கம். இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்பில் அதிலும் சென்னையில் பெருவிழா எடுத்து எனக்கு நீங்கள் பெற்றுத் தந்திருக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது. ஓர் அர்த்தமுள்ள வாழ்வைத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்ற உணர்வை நீங்களும் நண்பர்களும் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள். அது மேலும் பல ஆண்டுக்காலம் உற்சாகமுடன் செயல் புரிய எனக்குத் துணை வரும். ருஷ்யக்கலாசார மையத்தில் நிகழ்ந்த 7.4.2018 மாலைக்கூட்டம் என் வாழ்வில் முக்கியமான நேரங்களில் ஒன்று.தங்களுக்கும் எல்லா நண்பர்களுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108217

கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

  கோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்று அமைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். வழக்கமாக புத்தகக் கண்காட்சிகளில் மிகப்பிரபலமான சொற்பொழிவாளர்களின் உரைகள் அமைக்கப்படும். அதற்கு தனி கூட்டம் உண்டு. ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் நூல்களுடன் சம்பந்தமற்றவர்கள். புத்தகக் கண்காட்சியை எட்டிக்கூட பார்க்காதவர்கள் அவர்களில் மிகுதி. கோவையில் இலக்கிய உரையாடல்களாக அந்நிகழ்ச்சி அமையவேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். ஆகவே பெரிய பேச்சாளர்கள் இலக்கியவாதிகள் என ஒரு கலவையாக, அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த முறையில் உரையாடலை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். தமிழின் முக்கியமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100552

பறக்கை நிழற்தாங்கல் 2017

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது பதிவு. https://sivamaniyan.blogspot.in/2017/03/2017.html          

Permanent link to this article: https://www.jeyamohan.in/96924

பறக்கை – கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, மஞ்சள் ஒளிவிளக்குகளின் வெளிச்சம் சூழ்ந்திருக்கும் அதிகாலையின் நிசப்தத்தினூடே தூத்துக்குடியை விட்டு என் பயணத்தை தொடங்கினேன். திருநெல்வேலியிலிருந்து நண்பர் ஜானும் வருவதாக சொல்லியிருந்தார். அதிகாலை விடிந்த போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நண்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். எல்லா காகங்களையும் போல அந்த ஒற்றைக்காலுடைய காகம் தன் கூட்டத்துடன் சேர்ந்திருக்க வில்லை. விடியலின் துவக்கத்தில் தன் உணவு சேகரிக்கும் பணியில் சற்றே எச்சரிக்கையுடன் தன் கிராபைட் பளபளப்பு அலகை திருப்பி திருப்பி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96819

அராத்து கேள்விகள்…

அன்புள்ள ஜெயமோகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது? எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர். நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன். 6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94388

சென்னையில் நண்பர்களுடன்…

சென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரசு விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது.  அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87389

Older posts «