Category Archive: நாவல்

வெள்ளையானை – கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் சதிஷ்வரன். வெள்ளையானை நாவல் பற்றி YouTubeல் பேசியிருந்தேன்( https://youtu.be/cJqFxS5rpek). நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் அதைப் பகிர்ந்திருந்ததை இப்பொழுதுதான் கவனித்தேன். மிகவும் நன்றி. உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். வெள்ளையானை எனக்கு மிகப்பெரிய திறப்பாக இருந்த புத்தகம். குறிப்பாக இந்தியா வரலாற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள பெரிய ஊக்கமாக அமைந்தது. எங்கிருந்து துவங்குவது என்ற குழப்பத்தில் இருந்தபோது உங்கள் வலைத்தளமே மீண்டும் உதவியது. அதில் வெள்ளையானை பற்றிய சில பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119370

இரவு – திறனாய்வு

அன்புள்ள ஜெயமோகன் சார், இரவு நாவலை உங்களின் தளத்தில் வாசித்தேன்.விஷ்ணுபுரம், வெண்முரசு போல் இல்லாமல் நிகழ்காலத்தில் கதை நடக்கிறது. நீலியையும் இரவு வாழ்க்கையையும்,தவிர மீதி நாம் தினமும் சந்திப்பது,கேள்விபட்டதுதான்.ஆனால் அந்த சம்பவங்களின் மூலம் கிடைக்கும் தரிசனங்கள்,சாக்த தத்துவங்கள், நாம் உக்கிரமாக சந்திக்கும் தருணங்கள் எப்படி வாழ்க்கையை செதுக்குகிறது?,அதை எப்படி அந்த கணத்தில் சந்திக்கிறோம்,அதன் பொருள் என்ன என்பது எல்லாம் மிகவும் புதியது. இப்படியாக பட்ட தருணங்களை சந்திப்பவனின் மனவோட்டங்களை அப்பட்டமாக வெளிபடுத்துகிறீர்கள்.முதல் கவிதையிலே கூறிவிடுகிறீர்கள் இரவு…இயந்திரங்கள்,கணக்கு வழக்குகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119356

காடு – கடிதம்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெ,வணக்கம். இது எனக்கு ஜெயமோகனின் நான்காவது நாவல்.முதலில் வெள்ளை யானை பிறகு அறம்,ரப்பர் அடுத்து இதோ காடு.முதல் முறை காடு வாசித்தபோது ஒன்றிரண்டு அத்தியாயங்களாக நின்று நிதானமாக வாசித்து, பின்பு வாசித்தவரை கொஞ்ச நேரம் அசை போட்டு அசை போட்டுத்தான் அடுத்த நகர்வு என்றுதான் வாசிக்க முடிந்தது.  நீங்கள் அடிக்கடி சொல்வது போல் வாசக இடைவெளி கள் மிகுந்த நாவல்.வாசித்து முடித்ததும் அதே சூட்டோடு மறு படியும் வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119143

பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். பின் தொடரும் நிழலின் குரல் வாசித்துத் தொடங்கி குறைந்தது முந்நூறு பக்கங்கள் சரசரவென வாசித்துவிட்டேன். அருணாச்சலம், அவரின் மனைவி, தொழிற்சங்கங்கள், அதன் வாழ்க்கை, கம்யூனிசம்.. இவ்வரிசையில் பயணிக்கும் அருணாச்சலம் அடையும் மனப் போராட்டங்கள் அனைத்தையும் நானும் அடைந்தேன். படித்து முடித்தபின் விரிவாகவே எழுதுகிறேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று வாசிப்பைத் தொடர்ந்தேன். அன்னாவிற்கும் புகாரினிக்கும் நடக்கும் உரையாடல்களைக் கடக்க முடியாமல் கண்கள் கலங்கிக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118680

வெள்ளிநிலத்தில்…

இனிய ஜெயம் எனது பதின்பருவ மத்தியில் என்னை பரவசத்தில் ஆழ்த்திய முக்கிய திரைப்படங்களில் ஒன்று ஸ்பீல்பர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம். [இதை எழுதும் இக்கணம் மனிதன் கைகளிலிருந்து நழுவிய காவலாளி, மிருகத்தின் வாய்க்குள் செல்லும் இறுதிக் கணம், மனிதனும் மிருகமும் கண்ணுக்குக் கண் பார்த்துக்கொள்ளும் அப் படத்தின் காட்சி வலிமையாக உள்ளே எழுகிறது.உலக திரைப்பட வரலாற்றின் சிறந்த நூறு ஷாட் களில் ஒன்றாக அது இருக்க வாய்ப்பு உண்டு] காரணம் அதில் உயிர் கொண்டு உலவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117996

சுபிட்சமுருகன் – கடிதங்கள்

அன்பு ஆசிரியருக்கு, மிளகாயின் காரம்போல் சுருக்கென ஏறாமல் மிளகின் கார்ப்பாக மெதுவாக பரவுகிறது மனம் முழுவதும்  காந்தல் , சரவண சந்திரனின் “சுபிட்ச முருகன்” வாசித்தபோது .. உங்களின் சிலாகிப்பை படித்தபின்  எதிர்பார்ப்புடன்   நாவலைப் படித்தாலும்,எதிர்பார்ப்பிற்கு மேலேயே இருந்தது வாசிப்பனுபவம் . தீவிரப்பற்றே எல்லாவித இன்பங்களுக்கும் ஊக்கமாக இருப்பதோடு எதிர்திசையின் வஞ்சங்களுக்கும் காரணமாகிறது. அதை அடைவதற்காக எத்தனை இழிவானதையும் இயற்றவைக்கும்.மலைச்சரிவில் இறங்கும்போது இரண்டடி வைத்தபின் நினைத்தாலும் நிறுத்தமுடியாமல் பிறிதொன்றின் கரம் எத்திக்கொண்டு வருவதென கீழ்மையில் வீழ்ந்து அமிழ்ந்தாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117922

உலோகம் – கடிதம்

வணக்கம், நேற்று உலோகம். உள்ளம் செயல்படும் விதத்தையே நான் கவனித்துக்கொண்டிருந்தேன். சார்லஸ் எவ்வளவு கவனமாக இருந்தும் சில சமயங்களில் எப்படியும் உள்ளம் போக்குகாட்டிவிடுகிறது. கொஞ்ச காலமாகவே உள்ளம் ஏன் ஒரு நிலையில் இருப்பது ஒரு கணத்தில் சட்டென நேர் எதிர் நிலைக்கு செல்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இப்போது கூறும் சொற்களே கூட உலோகத்துக்கு பிறகு தெளிவானதே. சில சமயங்களில் உள்ளம் ஒரு நம்பிக்கையில் மிகச் சௌகரியமாக இருந்துகொண்டு நான் இப்படி இருக்கிறேன் என்று சொல்லிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117646

வானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்

அன்புள்ள ஐயா வானம் வசப்படும் வாசித்தேன்.  முடிவு பெறாத ஒரு வரலாற்றுப் புனைவு , பிரபஞ்சன்  நினைவுகளை துயருடன் கிளர்த்தியது. பிரெஞ்சு  காலனியத்திற்கு அடிமைப்பட்டிருந்த புதுச்சேரி வாசிகளின் துயரும் அரசியல் சதிகளும் அடிமைகளாக விற்கப்பட்டவர்களின் வாழ்க்கையும் நிலத்தின் வாசனையுடன் வட்டார வழக்கில்  வங்கக் கடல் காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் இந்தியாவிற்குள் பயணம் செய்யும்போதும் மக்கள் வாழ்வு முறை மாறுகிறது என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சில ஐயங்கள் 1 புதினத்தை முழுதாய்ப் புரிந்து கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117609

ஏன் வரலாற்றை சொல்லவேண்டும்? – கடிதம்

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? அன்புள்ள ஆசிரியருக்கு , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வெள்ளை யானையை பற்றிய எண்ணம் இன்று கூட வந்து போனது. புத்தாண்டு வாழ்த்து சொன்ன என் மைத்துனரிடம் பரியேறும் பெருமாள் படம் பற்றி பேசும் போது, அவர் நான் ரஞ்சித் படம்னு தெரியாம பாத்துட்டேன் மச்சான் ..அவன் ரொம்ப பேசறான் என்னும் போது எனக்கு மின்னலென வெள்ளை யானை சித்திரம் வந்து மறைந்தது..வெள்ளை யானை மற்றும் நூறு நாற்காலிகள் போன்ற ஆக்கங்களின் தேவைகள் என்றைக்கும் விட இன்றைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117543

எஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் – கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்   எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள் எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் நான் இதற்குமுன் வாசித்தது தி.ஜானகிராமனின் “மோகமுள்”மற்றும் யுவனின் “கானல் நதி”.அவையிரண்டும்     பாடகர்களின் அக அலைக்கழிப்புகளைப் பற்றியே பிரதானமாகப் பேசுகிறது.ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” நாவல்  பெரும்பாலும்  நாதஸ்வரக் கலைஞர்களின் புற வாழ்வைப் பற்றிய படைப்பாகவுள்ளது. பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள்  அநேகமாக சமூகத்தின் உயர்நிலையில் இருப்பார்கள்.மாறாக நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117564

Older posts «