Category Archive: நாடகம்

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750

நாடகமும் இலட்சியவாதமும்

அன்புள்ள ஜெ, நாடகங்கள் வாசிப்பதில் ஆர்வமிருந்ததில்லை. அது நிகழ்த்துகலை. அதை வரிகளாய் வாசிப்பதில் எந்த இலக்கிய அனுபவமும் நிகழ வாய்ப்பில்லை என்றே கருதி வந்தேன்.. வசனங்களை கேட்பதில் கூட எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, பிறகெப்படி வாசிப்பது. தங்கள் தளத்தின் அத்துனை கதைகளையும் வாசித்திருந்தும் வடக்கு முகத்தை நான் தவிர்த்து வந்ததற்கு மேற்கூறிய என் முன் முடிவுகளும், முன்பு வாசித்த சில நாடகங்கள் தந்த சலிப்பும் காரணமாக இருக்கலாம். சில நாட்களுக்கு முன், ”தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73569

கரிய பட்டில் வைரம்

அன்பான ஜெயமோகன், உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகிவிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன். இத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70081

எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்

வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் [ குறிஞ்சி குழு ] உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு நடுவர் தேர்வில் முதலாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இந்த பெருமையெல்லாம் தங்கள் எழுத்துக்களின் பெருமையையே பிரதிபலிக்கும்.நன்றி. கோமதி காசிநாதன் more photos

Permanent link to this article: https://www.jeyamohan.in/48767

ஆங்கில நாடகங்கள்

அன்புள்ள ஜெ., நீங்கள் அஜிதனைக் கல்லூரியில் சேர்க்க பெங்களூரு வந்திருந்த போது தங்களைச் சந்தித்திருந்தேன். அப்போது எனது நாடகத் துறை ஆர்வம் பற்றியும் அதில் சந்திக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் கூறியது நினைவிருக்கலாம். (மேலும், blogswara பற்றியும், பிற சந்தர்ப்பங்களில் படைப்பூக்கம் தொடர்பான மற்றும் வேறு சந்தேகங்களைக் கேட்கவும் தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.) அந்த சந்திப்புக்குப் பின், மேலும் இரு நாடகங்களுக்குப் பிறகும் திரும்பவும் அதே போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கின்றேன்! விஷயம் இது தான்: இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20657

பதுமை (நாடகம்)

விதி என்றால் பல்லாயிரம் மாந்தரின் ஆசைகளும், கனவுகளும், கோபங்களும் கலந்து ஒன்றாகி ஓடும் பெரும் நீரோட்டம். நம் வாழ்வு அதில் ஒரு சிறு சருகு. நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. நமது ஆசைகளும் கோபங்களும் தர்மத்தின் விதிகளுக்கு இசைகின்றனவா என்று பார்த்துக் கொள்வது தவிர, ஏனென்றால் விதி தர்மத்துக்குக் கட்டுப்பட்டது

Permanent link to this article: https://www.jeyamohan.in/6999

வடக்குமுகம் [நாடகம்] – 6

(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்) நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய். பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம். நிழல்: ஏன் ? பீஷ்மர்: ஏனெனில் இது காலத்தின் இக்கரை. இங்கு இருந்து நாம் கூவும் எதுவும் மறுகரையில் ஒலிக்காது. (அம்புப்படுக்கையில் கால்களை நீட்டிக் கொள்கிறார்) ஆனால் இந்த அம்புகளின் எரியும் வலியை நான் என் உடல் முழுக்க உணர்ந்து கொண்டிருந்தேன் அப்போது. நிழல்: …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6159

வடக்குமுகம் [நாடகம்] – 5

[கர்ணன் அரங்கில் நுழைகிறான்) கர்ணன்: பிதாமகரை வணங்குகிறேன். பீஷ்மர்: உனக்கு புகழ் உண்டாவதாக. கர்ணன்: (அருகே வந்து) தாங்கள் என்னை ஒருபோதும் ஆயுளுடையவனாக இருக்கும்படி வாழ்த்தியதில்லை. பீஷ்மர்: அது ஏன் என உனக்கே தெரியும். கர்ணன்: இங்கு வந்து தங்களை சந்திக்கலாமா கூடாதா என்று என் மனம் ஊசலாடியது. பீஷ்மர்: உனக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். இந்த அம்புகள் அர்சுனனுக்குரியவை. கர்ணன்: பிதாமகரே. பீஷ்மர்: இனி நீ ஆயுதமேந்தலாம் அர்ஜுனனை வென்று அஸ்தினபுரியை கைப்பற்றலாம் . . . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6158

வடக்குமுகம் [நாடகம்] – 4

[பீஷ்மரது  நிழல் அவர் தோளைத் தொடுகிறது.) நிழல்: உன் உடைகள். உன்னுடைய முகம் இதோ. பீஷ்மர்: உம் (பெருமூச்சுடன் கை நீட்டுகிறார்) நிழல்: எந்த வேடங்களும் சீக்கிரமே நம் இயல்புகளாக மாறி விடுகின்றன. (பீஷ்மர் பதில் கூறாமல் மெல்ல தன்னுடைய உத்தரீயம் கச்சை ஆகியவற்றை களைந்து நிழலுக்கு தருகிறார். இன்னொரு நிழல் அவரது நரை முடியையும் தாடியையும் அளிக்கிறது. வயோதிக நடையுடன் மீண்டும் வந்து தன் அம்புப்படுக்கைமீது படுத்துக் கொள்கிறார். நிழல்கள் கலைந்தாடுகின்றன. போர்க்களத்து ஒலிகள் தொலைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6157

வடக்குமுகம் [நாடகம்] – 3

அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6156