Category Archive: தொடர்

இந்த மாபெரும் சிதல்புற்று

நத்தையின் பாதை 2 ஊட்டியில் நாங்கள் சென்ற ஏப்ரல் 2017ல் ஆண்டுதோறும் நடத்தும் இலக்கியக்கூடுகையில் பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலை வரலாற்றைப் பற்றிப் பேசினார். அதன் இறுதியில் ‘இந்தியச் சிந்தனைமுறை என ஒன்று உண்டா’ என்ற வினாவை எழுப்பிக்கொண்டு ஆனந்தக் குமாரசாமி, அரவிந்தர் வழியாக அவ்வினாவுக்கான விடை நோக்கிச் சென்றார். அதில் அவர் முன்வைத்த ஆனந்தக்குமாரசாமியின் ஒரு கருத்து இது. ‘தனிப்பட்ட வாழ்க்கைத்தரிசனம் அல்லது சிந்தனை என ஒன்று இல்லை. ஒருபண்பாட்டின் பகுதியாக, அதில் முன்னரே இருந்தவற்றின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100158

மோகினி

  அஸாமின் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்று மாஜிலி என்னும் நதித்தீவு. பிரம்மபுத்திரா இரு பகுதிகளாகப்பிரிந்து மீண்டும் சென்று இணையும்போது நடுவே சிக்கிக்கொண்ட நிலம். உண்மையில் பிரம்மபுத்திராவின் வண்டலால் உருவான மேடு இது. அடிக்கடி பெருவெள்ளம் எழுந்து இந்தத்தீவை மூழ்கடிக்கிறது. வெள்ளத்தால் பயிர்களும் கால்நடைகளும் இறப்பது என்றும் உள்ள அபாயம். ஆனாலும் அங்குள்ள வளம் மிக்க மண் அங்கே மனிதர்கள் குடியேறுவதை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது. மிக மக்கள்ச்செறிவுள்ள பல கிராமங்கள் இங்குள்ளன. வீடுகள் பெரும்பாலும் உயரமான மூங்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92619

வழிப்போக்கர்கள்

  எண்பதுகளில் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கொண்டிருந்தேன். எவ்வகையிலோ அந்த ஊருடன் எனக்கொரு ஈர்ப்பும் ஒவ்வாமையும் உண்டு. நான் கல்லூரி இறுதியாண்டு படிப்பை முடிக்காமல் துறவியாகும் பொருட்டு வீட்டை விட்டுக் கிளம்பி அலைந்து திரிந்த நாட்களில் பழனியிலும் பின்பு திருவண்ணாமலையிலும் இருந்திருக்கிறேன். அந்த ஊரின் வெயிலும் வரண்டநிலமும் எனக்கு ஒவ்வாதாயின. அங்கு நான் இருந்த ஒரு சிறு காலகட்டத்தின் நினைவுகள் இனிதாயின.   திருவண்ணாமலைக்கு எண்பத்தொன்றில் என்னை மலையாளத்துச்சாமி என்று அழைத்த பாண்டிச்சாமி என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92612

சுட்டிவிகடன் -வெள்ளிநிலம் பற்றி

    அன்புள்ள சார், மூன்று வருடங்கள் முன்பு குழந்தைகள் கதை என நினைத்து ஆயிரத்தோரு இரவு அரேபிய கதைகள் முழுத்தொகுப்பை வாங்கி ஹாலில் வைத்து படிக்க ஆரம்பித்தேன். அப்புறம் அதை அலமாரி உச்சியில் வைத்து அவ்வப்போது படித்தேன். நான் சிறுவயதில் படித்த கதைகள் இவையில்லையே. அவை இவற்றில் ஒரு பகுதிதான். அவற்றில் பறக்கும் ஜமக்காளமும், ஆளைத்தூக்கிச் செல்லும் கழுகுகளும் மட்டும்தான் வந்தன. ஆனால் இந்த முழுத்தொகுதியானது சிறுவர்களுக்கானது இல்லை என்பது தாமதமாகவே புரிந்தது. நான் என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92671

முகங்களின் தேசம் கடிதங்கள்

  ஜெ, நலமா?..  இந்தியப் பயணம் மிக கம்பீரமாய் நெகிழ்வாய் தொடங்கியிருக்கிறது.வெகுஜன இதழில் மிக ஆழமான எழுத்தின் தேவை என்ன என்பதை அழுத்தமாய்  உணர்த்துகிறது. சாதவாகனர்களின் அரசு நானோகாட் கணவாய் என்று முதல் பகுதியே மிக அழகாக வந்திருக்கிறது.எப்பொழுதும் உங்கள் பயணக்கட்டுரைகளை மிகவும் ரசித்து வாசிப்பேன்.மிக இயல்பாகத் தொடங்கி நுட்பமாய் விவரங்களைச் சொல்லிச் செல்கிறீர்கள். அமுதசுரபி எனும் அறம் எளிய மனிதர்களிடமே  இருக்கிறது என்ற வரி என்னை நெருக்குகிறது எனலாம்.ஆம் அத்தகைய மனிதர்களை வாழ்வில் தரிசிப்பவர்களுக்கே அது புரியும்.இந்தியாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83311

முகங்களின் தேசம்: குங்குமத்தில் தொடர்

  அண்ணா, வணக்கம், இன்று வெளிவந்துள்ள குங்குமம் இதழில், தங்களின் புதிய தொடர்  ” முகங்களின்  தேசம்  ”  விரைவில் என்ற அறிவிப்பு (ஸ்கேன் இணைப்பு இம் மின் அஞ்சலோடு இணைத்துள்ளேன்.) கண்டு மகிழ்ச்சி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வெகு ஜன வார இதழில் தங்கள் தொடர்.  உங்கள் இணைய தளத்தில் முன்பே இடம் பெற்ற கட்டுரைத் தொடர் ஏதேனும் தான், இத்தொடராக வெளி வருகிறதா? அல்லது, புதிய கட்டுரை / பயணத் தொடரா?  எதுவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83062

பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – 3 வேர்களும் விருட்சங்களும்

திருவட்டாறு ஆதிகேசவ பேராலயத்திற்கு முன்பக்கம் அருகே நாகங்கள் பதிட்டை செய்யப்பட்ட அரச மரத்திற்கு அருகே என் தந்தைவழிப் பாட்டியின் வீடு இருக்கிறது. தன் 90 வயது வரையில் பாட்டி அங்கு தான் வாழ்ந்தாள். இளவயதில் அவ்வப்போது அங்கு சென்று பாட்டியிடம் தங்குவதுண்டு பாட்டியின் கை பிடித்துச் சென்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தை சுற்றி நோக்கி ஒவ்வொரு தூணாக நின்று சிற்பங்களையும் அலங்காரங்களையும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். பாட்டி என்னைக் கொண்டு சென்று முகப்பு மண்டபத்தின் மேலேற்றி சிறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76823

பேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 2,பேய் சொன்ன பேருண்மை

நான் வாழும் இடம் நாகர்கோவிலின் புறநகரான பார்வதிபுரம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி கள்ளியங்காடு என்று அழைக்கப்பட்டது. இதன் அருகே இருக்கும் கணியாகுளம் என்ற விவசாய கிராமம் தவிர இப்பகுதியில் மக்கள் வாழ்க்கை அன்று அனேகமாக இல்லை. பேச்சிப்பாறை அணைகட்டப்பட்டு இவ்வழியாக அதன் கால்வாய் வந்தபோது இந்நிலமெல்லாம் வயலாகியது. நகரம் வளர்ந்தபோது புறநகராகியது கள்ளியங்காடு அக்காலம் முதல் மனிதர் அணுக முடியாத ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் கள்ளியங்காட்டுக்கு அதற்கும் முன்னரே ஒரு நீண்ட வரலாறு உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76777

பேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 1, இரு புராண மரபுகள்

நான் சின்னப்பையனாக இருந்தபோது ஒரேசமயம் இரண்டு கதையுலகங்களில் வாழ்ந்தேன். என் பாட்டி லட்சுமிக்கு அப்போதே எண்பது வயது தாண்டியிருந்தது. பாட்டி ஒரு சம்ஸ்கிருத பண்டிதை , புராண கதைக்களஞ்சியம். அந்திக்கு விளக்கு கொளுத்தியதும் கைகால் கழுவி அமர்ந்து ராமநாம ஜபம் முடிந்தபின் என்னை மடியிலமர்த்தி என் தலையை கையால் மெல்ல தடவியபடி கதை சொல்லுவாள். தேவர்களும் கின்னர கிம்புருடர்களும் உலவும் மிகப்பெரிய கதைவெளி. அசுரர்கள், பாதாளநாகங்கள், அரக்கர் அவர்களை வதம் செய்ய பிறவியெடுக்கும் தெய்வங்கள். அவளுடைய கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76779