Category Archive: தமிழகம்

கெட்டவார்த்தைகள்

  அன்புள்ள ஜெ.  வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2196/

சோழர்கலை

பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது.   சோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2052/

அற்பத்தனமும் அகங்காரமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,   நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா?   அன்புடன், அருண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36883/

நமது கட்டிடங்கள்

நம்முடைய கட்டிடக்கலை தமிழகத்தில் இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒட்டி இணையக்குழுமத்தில் நிகழ்ந்த விவாதங்களுக்கு என் எதிர்வினை இது உலகில் எங்கும் எப்போதும் கட்டிடக்கலை ‘தூய்மை’யாக இருக்காது. ஒரு தலைமுறைக்குள் அமைப்பில் மாற்றம் வராமலும் இருக்காது. கட்டிடம் பண்பாட்டுச்சின்னமாக இருப்பதனால் ஒரு நாட்டில் நுழையும் எல்லாப் பண்பாடுகளும் கட்டிட அமைப்பைப் பாதிக்கின்றன. நடைமுறைத் தேவைகள் கட்டிட அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. ஆகவேதான் உலகக் கட்டிடக்கலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. நம்முடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16800/

மபொசி,காமராஜ், ராஜாஜி..

  ராஜாஜியின் பொருளியல்கொள்கைகள் ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா? அன்புள்ள ஜெ, இந்தக்கருத்தை உங்கள் மீதான மாற்றுக்கருத்தாக முன்வைக்கவில்லை. எனக்கு தமிழக அரசியலில் அந்த அளவுக்கு பழக்கம் இல்லை. நான் பிறந்ததே எண்பத்திரண்டில்தான். ஆனால் வழக்கமாக கேள்விப் படும் சில விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். திராவிட இயக்கத்தவரின் மேடைகளில் சொல்லப் படும் கருத்துக்கள்தான். அதாவது தமிழகத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் ராஜாஜியும் காமராஜும் தோல்வியடைந்து விட்டார்கள். காமராஜ் கவனக் குறைவாக இருந்த காரணத்தால்தான் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகள் பறிபோயின. முல்லைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11070/

கூட்டமோ கூட்டம்

‘’என்னா சார் போங்க…எலக்சன் வருதுல்ல…வேல பெண்டு நிமிருது… காலமடக்கி உக்கார நேரமில்லேன்னா பாத்துக்கிடுங்க… ஆனால் கட்சிவேலைன்னா அது எலக்சனிலதானே, ஏங்க? அதைப்பாத்தா போருமா? நம்ம சோறுல்ல?’’

Permanent link to this article: https://www.jeyamohan.in/7755/

பண்பாட்டை ஏன் சுமக்கவேண்டும்?

Aug 24, 2009 @ 0:09   அன்புள்ள  ஜெயமோகன், தென்றல் இதழில் உங்கள் பேட்டியை படித்தேன். அதில் நீங்கள் புலம்பெயர் இந்திய தமிழர்கள் வேற்று நாட்டையே தங்கள் நாடாக கொண்டு வாழ்வதை பற்றி ஒரு கசப்புடனே சொல்லியிருந்தீர்கள். வேறு நாட்டை தங்கள் வாழ்விடமாக கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ வாழ்வு தரம் சற்று மேம்பட்டு இருப்பதனால் தானே அவ்வாறு செய்கின்றனர். நீங்கள் பண்பாட்டு ரீதியாக உள்ள இழப்பை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3705/

உபியும் பிகாரும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தங்களுடைய தளத்தின் வழியாக பல்வேறு திறப்புகளை அடைந்தவன். அதற்காக என்றும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். தங்களின் இந்தோனேசியப் பயணங்களைப் படித்து வருகிறேன். வழக்கம்போலவே ஏதேதோ எனக்குள் திறக்கிறது. சமீபத்தில் ராமச்சந்திர‌ குஹா அவர்களின் கட்டுரை ஒன்றை ஹிந்துஸ்தான் நாளேட்டில் படித்தேன். அதனை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பி த‌மிழில் மொழிமாற்றி என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது என் முதல் மொழியாக்கம். தங்கள் பணிக்கு நடுவில் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் வாசித்து தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80909/

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8712/

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? வணக்கம் திரு.ஜெயமோகன் அவர்களே, நலம், நலமறிய ஆவல்… இது நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல். நான் தமிழை பள்ளியில் பயின்றது கிடையாது, ஹிந்தி தான் எனது இரண்டாவது மொழி ( Second Language ). நானாகத்தான் வீட்டில் இருக்கும் தினத்தந்தி பத்திரிகை மூலம் பயின்றேன். எனக்கு தமிழ் இலக்கணம், இலக்கியம் பற்றி அவ்வளவாக தெரியாது … நான் இங்கே பிழை இல்லாமல் அச்சிட்டிருந்தேன் என்றால் அதற்கு முழுக் காரணம் Google …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8711/

Older posts «