Category Archive: தத்துவம்

சிரிக்காத புத்தர்

  சித்தார்த்தன் என்ற பெயருடன் இணைந்து நம்மனதில் தியானத்தின் பேரமைதியில் உறைந்த புத்தரின் முகம் நினைவுக்கு வரும். உலகப்புகழ் பெற்ற ஜெர்மனிய படைப்பிலக்கியவாதியான ஹெர்மன் ஹெஸி’க்கு அந்த தியான நிலையை எட்டுவதற்காகப் புத்தர் கடந்து வந்த நீண்ட பாதை நினைவுக்கு வந்தது போலும். ஞானத்திற்கான தேடலின் தவிப்பையும் தத்தளிப்பையும் மையப்படுத்தக்கூடிய நாவல் அவருடைய `சித்தார்த்தா’. திரிலோக சீதாராம் அவர்களால் காவியச்சாயல் கொண்ட நடையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு தமிழில் 1957ல் வெளிவந்தது. பிறகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9255

மோவாயிசம்

  பல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல. பதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10820

முதுமை

எதிரே வரும் இளம்பெண்களில் எல்லாம் அழகிகளைத் தேடிப் பரபரத்த கண்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இன்றும் அழகிகள் அழகிகள்தான். அழகிகள் அளிக்கும் பரவசம் மேலே போனாலும் தொடரும் என்று கடவுளுக்குத் தெரியும், இல்லையேல் ரம்பை ஊர்வசி மேனகைகள் எல்லாம் எதற்கு?

Permanent link to this article: https://www.jeyamohan.in/6338

காடு, நிலம், தத்துவம்

அன்புள்ள ஜெ., நலமாயிருக்கிறோம். இசையும் மொழி தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி. கடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று. ஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99910

ஒளிர்பவர்கள்

திரு ஜெயமோகன் உங்களுக்கு வந்த கடிதம் எப்படி எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. நீங்கள் நகைச்சுவையாக ஆக்கி கடந்துசெல்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரியத்தான் செய்யும். இதைவேண்டுமென்றால் வெளியிடுங்கள். உங்களை இலுமினாட்டி என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் அந்தளவுக்கு பெரிய ஆள் இல்லை. இல்லுமினாட்டி என்பது ஒரு சிலந்தி. அதன் வலை உலகம் முழுக்க உள்ளது. அந்த வலையிலே ஒரு கண்ணி நீங்கள். தமிழக அளவிலே நீங்கள் அதிலே முக்கியமானவர். நீங்கள் இதுவரை மீடியாவிலேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97024

சண்டிகேஸ்வரர்

  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா? போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார். திடீரென்று இன்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20754

தன்னறம்

‘திருடனை துரத்த நாய் உள்ளே வந்தது. திருடன் ஓடியும் நாய் உள்ளேயே சுற்றி வருகிறது!’

Permanent link to this article: https://www.jeyamohan.in/7005

பிரபஞ்சமென்னும் சொல்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். இது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்.எங்கிருந்து தொடங்குவது, எவ்வாறு தொடங்குவது எனத் தெரியவில்லை.உள்ளிருக்கும் எண்ணங்களுக்கு, வார்த்தைகளாக வடிவம் கொடுத்து வெளியில் கொண்டு வருவதற்கு சிரமமாக இருக்கிறது. உள்ளிருக்கும் பொழுது, இந்த எண்ணங்களுக்கு ஒழுக்கம் தேவைப்படுவதில்லை.சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அவை வார்த்தைகளாக வடிவம் பெறும் பொழுது ஒரு கட்டமைப்பு தேவைப்படுகிறது. ஓரளவு கோர்வையாக எனது எண்ணங்களைப்  பதிவிட முயற்சிக்கிறேன். உங்களுடைய “வற்றாத ஜீவநதி இந்திய இலக்கியத்தின் சாரம்” படித்தேன். வெகு நாட்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88728

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது. ஆகவே அங்கே நுண்மையான அவமதிப்புகளுக்கு நாம் ஆளாகவேண்டியிருக்கும். இங்கு என்னை அழைத்த நண்பருக்காக ஒத்துக்கொண்டேன். அவருக்காகவும் என் பேச்சை சிலராவது எதிர்பார்க்கக் கூடும் என்பதற்காகவும் வந்தேன். என் மனநிலை சரியாக இல்லை என்பதனால் உரை சிறப்பாக அமையாவிட்டால் மன்னிக்கவும் * பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29

யூஜி கிருஷ்ணமூர்த்தி : தத்துவமா மெய்யியலா?

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். என் பெயர் சரவணன். இது என் முதல் கடிதம். சென்னையின் வெள்ளத்துக்குப்பின்பான ஜனவரியில் உங்களை வாசிக்கத் தொடங்கினேன். சில நாட்களிலேயே உங்களை எனக்கான எழுத்தாளராகக் கண்டுகொண்டேன். தூர தேசத்தில் தனிமையில் தற்செயலாய் ஒரு திருப்பத்தில் உற்ற நண்பனைக் கண்டதாய் உணர்ந்தேன். நீண்ட நாட்களாய் கேட்கப்பட ஆள் இல்லாமல் எனக்குள் கிடந்த கேள்விகளை இனி கேட்கத் துணிவேன். யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி யின் கருத்துக்கள் குறித்த உங்கள் பார்வை என்ன. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட பிரம்மாண்டமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88527

Older posts «