நண்பர் கண்ணன் தண்டபாணி அவரது வலைப்பூவில் எழுதியது இது. கண்ணன் எனக்கு அணுக்கமானவர் என்பதைவிட என் பெருமதிப்புக்குரியவர் என்பதே பொருத்தம். இயற்கை வேளாண்மையை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர். காந்திய அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். நம் காலகட்டத்தின் அபூர்வமான இலட்சியவாதிகளில் ஒருவர். கண்ணன் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் சுயகல்வியால் வளர்க்கிறார் என்பதையே ஒரு பெரும் சாதனையாக நினைக்கிறேன். அவரது மகள் சென்ற விஷ்ணுபுரம் விழாவன்று மாலையில் பாடியது நெகிழ்ச்சியூட்டும் நினைவு. அபாரமான அறிவாற்றலும் நுண்ணுணர்வும் கொண்டவள் அவள். …
Category Archive: சுற்றுச்சூழல்
Permanent link to this article: https://www.jeyamohan.in/89013
பியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக
சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு இல்லாததனால் பியூஷ் மனுஷ் மீது நிகழ்த்தப்பட்ட கீழ்த்தரமான அரசு வன்முறை பற்றி நான் நேற்று கோவையில்தான் அறிந்துகொண்டேன். கோவை நண்பர்கூட்டத்தில் அதைப்பற்றிப் பேசினோம். பியூஷ் மனுஷ் சேலம் தருமபுரி மாவட்டங்களில் பெரும்பணியாற்றிய சூழியல்போராளி. களப்பணியாளர். பல்வேறு ஏரிகளை மீட்டு எடுத்தும் தனிப்பட்டமுயற்சியில் காடுகளை உருவாக்கியும் சாதனைபுரிந்த முன்னுதாரண மனிதர் அவருடன் அரசு அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டது மிக இயல்பானதே. நானறிந்த வரையில் அதிகாரி என்பவர் ஊழலில், அதிகாரத்திமிரில், உலகியலின் அனைத்துக்கீழ்மைகளிலும் மூழ்கியவர் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/89015
கடவுளின் காடு
சென்ற ஜனவரி 21, 2015 ஒரு செய்தியை வாசித்தேன், கேரளத்தில் கவி சூழுலாமையம் மூடப்பட்டது. காரணம் அங்கே வந்த பயணிகள் இருவரை காட்டுயானை தாக்கிக் கொன்றது. அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள். அவர்களின் இறப்பு குறித்து ஆய்வுசெய்துவருகிறார்கள் என்றது செய்தி. நான் பஷீர் அங்கே இல்லை என நினைத்துக்கொண்டேன் நான் நண்பர்களுடன் பலமுறை சென்ற இடம் கவி. எங்கள் நீண்டபயணங்களின் நடுவே ஓரிருநாட்கள் நீடிக்கும் குறுகிய பயணங்களையும் மேற்கொள்வோம். அவற்றில் முக்கியமானது மழைப்பயணம் என நாங்கள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/86276