Category Archive: சுட்டிகள்

நடேசனின் “எக்ஸைல்”- முருகபூபதி

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும்  தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. நோயல் நடேசனின் எக்ஸைல் நூலைப் பற்றி முருகபூபதியின் விமர்சனம். சார்பு நிலையெடுக்காத  குரல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/117424

அறிவியல் புனைகதைகள் பற்றி…

  அறிவியல் புனைகதைகள் மற்றும்  மீமெய்யியல் படைப்புகளுக்கான ஒரு தளமாக சிங்கப்பூரிலிருந்து  அரூ இணைய இதழ் இரண்டு மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அவ்விதழில் அறிவியல்புனைகதைகளைப்பற்றி என்னுடைய விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது.   கேள்வி அறிவியல் புனைவை ஒரு சீரியஸ் இலக்கியமாக கருதுகிறீர்களா? அல்லது அதனினும் குறைந்த ஒரு வகைமையாகவா? இலக்கியம் என்பது படிமத்தளத்தில் நிகழும் மன நுட்பங்களை அல்லது ஆழ்மன ஆடல்களை மொழியால் பிரதிசெய்வது என்று கொண்டால், அறி-புனைவுக்கும் அதுவேதான் இலக்கணமா? அதுவே சாத்தியமா? ஜெயமோகன் பேட்டி – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117413

ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி

அன்புள்ள ஜெ.மோ.க்கு, நலமாக இருப்பதாக நினைக்கிறேன் என்று தான் சொல்வது வழக்கம். நீங்கள் நலமாகவே இருக்க வேண்டும். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபுகள் என்ற புத்தகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன். https://dineshrajeshwari.blogspot.in/2018/05/blog-post.html?m=1 அன்புடன் தினேஷ் ராஜேஸ்வரி

Permanent link to this article: https://www.jeyamohan.in/114910

மு.தளையசிங்கம் – ஒரு நினைவுக்குறிப்பு

எனது வாழ்நாளில் நான் முதல்முதலில் இனம்கண்டு கொண்ட Activist மு.தளையசிங்கம். நான் ஒரு Activist ஆக வாழ்கின்றேனா இல்லையா என்பதை இன்னமும் என்னால் தீர்மானிக்க முடியாதிருந்த போதிலும் அவ்வாறு வாழத்தான் வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குப் போதித்த குருவாக மு.தளையசிங்கத்தை குறிப்பிடுவேன். இலங்கையின் முதன்மையான படைப்பாளுமைகளில் ஒருவரும் சிந்தனையாளருமான மு.தளையசிங்கம் பற்றிய ஒரு நினைவுக்குறிப்பு. என் நண்பர் ஆஸ்திரேலியா முருகபூபதி எழுதியிருக்கிறார்.  காலமும் கணங்களும் மு தளையசிங்கம் -முருகபூபதி =================================================== மு.தளையசிங்கம் பற்றி… இலங்கை வாசகர்களும், இலக்கியமும் மு.தளையசிங்கத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116720

மனசிலாயோ?

‘ திருவனந்தபுரம் உலகப்பட விழாவில் வைத்து நவீனின் இந்தக்குறிப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கலைப்படத்திற்குண்டான களமும் கருவும் என்று பட்டது. மணமுறிவு பெற்ற கதைத்தலைவன். அவனுக்கு கழுத்துவலி. அது உள்ளத்தின் வலியாகவும் இருக்கலாம். அவன் எழுத்தாளனும்கூட. ஒரு அன்னியநாட்டில் அறியா நிலத்தில் சிகிழ்ச்சைக்காக வருகிறான். அங்கே விடுதியில் தங்கியிருக்கிறான். பலரை சந்திக்கிறான். பயணம் செய்கிறான். உடலும் உள்ளமும் மெல்ல மீள்கின்றன. அது ஒருவகை தன்மீட்பாகவும் அமைகிறது. திருவனந்தபுரம் ஆயுர்வேத சிகிழ்ச்சைக்குச் செல்வதற்கு முன் நவீன் என்னைப்பார்க்க வந்திருந்தார். புதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116111

சீ முத்துசாமி நேர்காணல் -நவீன்

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் மலேசியப்படைப்பாளி சீ. முத்துசாமியின் நேர்காணல். நவீன் எடுத்தது. சமீபத்தில் இலக்கியவாதிகளிடம் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நேர்காணல் என்று இதைத்தான் சொல்வேன். அந்த இலக்கியச்சூழலை, அதன் வரலாற்றை, அவ்விலக்கியவாதியின் பங்களிப்பையும் குறைகளையும் நன்கு உணர்ந்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது “எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி ================================================ சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது ————————————————————————————————— சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன் சீ. முத்துசாமியின் ‘இருளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100236

வெற்றி தெலுங்கில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், ‘வெற்றி’ சிறுகதையை ‘கெலுபு‌'(gelupu) என்று தெலுங்கில் மொழிபெயர்த்தேன். இந்த மாத ‘ஈமாட்ட’ (eemaata.com) இலக்கிய இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு கதை மிகவும் பிடித்தது என்று தெரிவித்தனர். கதையின் மொழிபெயர்ப்பு லிங்க்கை தங்களின் வலைப்பூவில் பதிவிடும்படி வேண்டுகிறேன். தமிழ் வாசகர்களின் வழியாக அவர்களின் தெலுங்கு நண்பர்களுக்கு இந்தக் கதை சென்றடையும் வாய்ப்புள்ளது. http://eemaata.com/em/issues/201707/12369.html?allinonepage=1 தெலுங்கு வாசகர்களிடமிருந்து வரும் கருத்துக்களை இந்த மாத இறுதியில் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். கதையை மொழிபெயர்க்க அனுமதியளித்தமைக்கு மீண்டுமொருமுறை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100123

பழைய அரிய தமிழ் புத்தகங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். போக முனிவர் அருளிய ஜெனன சாகரம்,தமிழ் சித்த வைத்திய அகராதி,ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்,சங்க இலக்கிய இன்கவி திரட்டு போன்ற *பழைய அரிய தமிழ் புத்தகங்கள்* வருடம் 1886 ல் இருந்து பதிப்பிக்கப்பட்டவை (5376 புத்தங்கள்) ‘pdf’ வடிவத்தில் கிடைக்கும் ‘சுட்டியை’ நண்பர் அனுப்பியிருந்தார்.அதை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் நமது தளத்தில் பகிர வேண்டுகிறேன்.  http://www.dli.ernet.in/handle/2015/247323/recent-submissions?offset=700 அன்புடன், அ .சேஷகிரி ***.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/97480

பறக்கை நிழற்தாங்கல் 2017

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது பதிவு. https://sivamaniyan.blogspot.in/2017/03/2017.html          

Permanent link to this article: https://www.jeyamohan.in/96924

எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்

  அன்புள்ள ஜெ, ருசி கதைக்கு இணைப்பு வழங்கியதற்கு நன்றி. முதல் கதை வாசுதேவன் பிரசுரமான 2013 ஆண்டிலிருந்து இன்று வரை மொத்தம் பன்னிரெண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். இதைத்தவிர ஒரு ஆங்கிலக் கதை எழுதி இருக்கிறேன் (பிரசுரமாகவில்லை, காமன்வெல்த் போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன்). வெற்றி தோல்வி என்றெல்லாம் எனக்குப் பகுக்கத் தெரியவில்லை. அவை வாசகருக்கு உரியது. ஆனால் கதை எழுதுவது மிகுந்த நிறைவை அளிக்கிறது, சில வேளைகளில் கொந்தளிப்பை அளிக்கிறது. என்னை நானே கண்டுகொள்கிறேன். இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93044

Older posts «

» Newer posts