Category Archive: சுட்டிகள்

ஈழத்திலிருந்து ஒரு குரல்

தமிழகத்தில் ஒவ்வொரு தரப்புகளுக்குமிடையில் முரண்பாடுகளும் கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளும் வெவ்வேறான அரசியல் நிலைப்பாடுகளும் உண்டு. அது அவர்களுடைய உள் வீட்டுப் பிரச்சினை. ஆனால் கருத்துலகம் என்ற வகையிலும் கோட்பாடு என்ற வகையிலும் அங்கே நிலவுகின்ற பிரச்சினைகள் ஈழச்சூழலிலும் பிரதிபலிக்கும் என்று ஒரு நியாயத்தை எவரும் சொல்லக்கூடும். அதில் உண்மையும் உண்டு. உதாரணமாக பெரியாரியம், தலித்தியம் மற்றும் இன அடையாளம் குறித்த பிற அம்சங்களில். ஆனால், அந்தக் கருத்து நிலையைக் கொள்வது வேறு. அங்குள்ள அணிகளுடன் தம்மை அடையாளப்படுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119658

யானை – கடிதங்கள்

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழினியில் வெளிவந்த அனோஜனின் “யானை’  ஈழத்தமிழ் படைப்புலக சூழலில் முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்திருக்கும் கதை என்பது எனது கணிப்பு. கதை குறித்த எனது முகநூல் பதிவை இங்கு தருகிறேன்.  யானை – அனோஜன் தமிழினியின் இம்மாதப்பதிப்பில் வெளிவந்திருக்கும் “யானை” என்ற அனோஜனின் சிறுகதை சமகால இலக்கிய பிரதிகளில் மிக முக்கியமானதொன்று. இந்த கதை இரண்டு கோணங்களில் பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டியதாக கருதுகிறேன். ஒன்று, கதை மையம் சார்ந்தது. மற்றையது அனோஜனின் இலக்கியப்பார்வை சார்ந்தது. “யானை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119372

ஆழத்து விதைப் பரப்பு

நம் நாயகர்களின் கதைகள் சென்ற காலத்தின் அடையாளமாகத் திகழும் பெரியவர்களைப் பார்க்கச் சென்றால் எப்போதும் ஒன்று நிகழும், நாம் வரலாறென ஒன்றை நினைத்திருப்போம்.  அது அரசியல்கட்சிகளால், அவர்களின் சொல்பரப்புநர்களான அரசியலெழுத்தாளர்களால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். அதை மீறி பெரியவர்களின் வாயிலிருந்து நமக்குத்தெரியாத மெய்யான வரலாறு வெளிவந்து நம்மை திகைக்கவைத்தபடி முன்னால் கிடக்கும். தமிழகத் தலித் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், இடதுசாரிகளாயினும் திராவிட இயக்கத்தவராயினும், தலித் இயக்கத்தவராயினும் , அதில் காந்தியப் பேரியக்கம் ஆற்றிய பங்கைப்பற்றிச் சொல்வதே இல்லை. ஆனால் எவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119318

யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

அனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119346

இலக்கிய முன்னோடிகள் – ஒரு விமர்சனம்

இலக்கிய முன்னோடிகள் வாங்க நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் இலக்கியமுன்னோடிகள் நூலுக்கு கேசவமணி எழுதிய விமர்சனக்குறிப்பு. 2004ல் தமிழினி வெளியீடாக வந்த ஏழு நூல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு உருவான நூல் இது. தமிழின் இலக்கிய முன்னோடிகளான 20 படைப்பாளிகளைப் பற்றிய விரிவான விமர்சன மதிப்பீடுகள் அடங்கியது இலக்கிய முன்னோடிகள் விமர்சனம் கேசவமணி இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள் இலக்கியமுன்னோடிகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/118604

போலிச்சீற்றங்கள்

ஈழ இலக்கியவாதிகள் மத்தியில் தற்பொழுது இலக்கியத்தைவிட ஈகோ, பொறாமை, சோம்பேறித்தனம் என்பது அதிகமாக உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள நேர்மையில்லை. இதை மறைப்பதற்கு தான் தற்போது ஒற்றுமையாக ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.   நோயல் நடேசன் எழுதிய கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/118439

கேசவமணி

அன்புள்ள ஜெயமோகன், உலக இலக்கியங்கள் குறித்த இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_12.html https://kesavamanitp.blogspot.com/2019/02/blog-post_10.html குருதி நிறம் என புதிதாகத் தொடர் ஒன்று எழுதத் தொடங்கியுள்ளேன் https://kesavamanitp.blogspot.com/2019/02/1.html அன்புடன், கேசவமணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/118239

சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி

  அலகிலா ஆடல் -சைவத்தின் கதை   அலகிலா ஆடல்- சைவத்தின் கதை என்ற பேரில் சைவம் குறித்த நூலை எழுதிய துலாஞ்சனன் அவர்களுடனான பேட்டி. இலங்கையின் தினக்குரல் நாளிதழில் வெளிவந்தது துலாஞ்சனனுடன் ஒரு பேட்டி

Permanent link to this article: https://www.jeyamohan.in/118198

ரயிலில் – ஒரு கட்டுரை

அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ‘ரயிலில்’ சிறுகதை நல்கிய வாசிப்பனுபவம் பதிவுசெய்யப்பட வேண்டியது. ஜெயமோகன் பெரும்பாலும் மையமான ஒரு புள்ளியில் இருந்து கதை சொல்பவர் அல்ல என்பது எனது அவதானிப்பு. தான் பேச எடுத்துக்கொண்ட கதையின் எல்லா சாத்தியமான சந்துபொந்துகளுக்கும் நுளைந்து பிரித்து மேய்ந்து விட வேண்டும் என்கிற ஜெயமோகனது வேட்கையை அவரது பலகதைகளிலும் அவதானித்திருக்கிறேன். மேலும், கதை முடிந்துவிட்டது என வாசகன் நினைக்கும் ஒரு புள்ளியில், இல்லை, கதை இன்னும் முடியவில்லை எனச் சொல்லி மிக நுணுக்கமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117474

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

அன்புள்ள ஜெ.. அரசியல் தலைவர்களுக்கு நீங்கள் அஞ்சலிக்குறிப்புகள் எழுதுவது இல்லை . கலைஞர் , ஜெ போன்றோர்களுக்கே எழுதவில்லை என்றாலும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் குறித்து எழுத வேண்டும் என்பது எங்கள் விருப்பம் எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து காங்கிரசுடம் உறவாடி பதவி சுகங்களை அனுபவிக்கும் கட்சிகள் மத்தியில் அவர் போன்ற லட்சியவாத தலைவர்கள் கோமாளிகளாக கருதப்பட்டு மறக்கப்படும் அபாயம் அதிகம் இந்திய ஜன நாயகத்தை மீட்டெடுத்தவர்களில் ஒருவரான அவரை நினைவில் கொள்வது அவசியம் http://www.pichaikaaran.com/2019/01/blog-post_29.html அன்புடன் பிச்சைக்காரன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/117748

Older posts «