Category Archive: சிறப்பு பதிவுகள்

நாளை மறுநாள் சென்னையில்..

    இந்த ஆண்டில் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. புத்தாண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இருந்தேன். தொடர்ந்து மதுரை, பாண்டிச்சேரி. இப்போது மீண்டும் சென்னையில். நாளை மறுநாள் [10-1-2020] சென்னையில் இருப்பேன். ஈரோடு பாண்டிச்சேரி தஞ்சை நண்பர்கள் வருகிறார்கள். அனைவரும் தங்குவதற்கு ஒரு பொதுவான இடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காலைமுதல் இலக்கிய அரங்கு ஒருவகையில் தொடங்கிவிடும். 10 மாலையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் பத்தாண்டு நிறைவு விழா. அது கோவையில் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. ஆனால் சென்னையில் நிகழும் நூல்வெளியீட்டை வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129160

அந்நிய நிதி- தொகுப்புரை

இந்த தொடர்கட்டுரைகள் வழியாக சில அடிப்படை ஆதாரங்களை அளித்திருக்கிறேன். அந்நிய நிதிக்கொடைகள் உருவாக்கும் அறிவுலகச்செல்வாக்கு பற்றிய என்னுடைய கட்டுரைகளுக்கெல்லாம் பொதுவாக ‘பூச்சாண்டி காட்டுகிறார்’ என்றும் ‘அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு’ என்றும்தான் பதில் சொல்லிவந்திருக்கிறார்கள் இந்திய உளவுத்துறையே எளிதில் கண்டடையமுடியாத ஆதாரங்களை எழுத்தாளர்கள் சொல்லவேண்டும் என்று வாதிடுவதன் சமாளிப்பை புரிந்துகொள்ள அதிக சிந்தனைவளமெல்லாம் தேவை இல்லை.இங்கே நான் அளித்துள்ளவை குறைந்தபட்ச ஆதாரங்கள். விரிவாக ஆராய விரும்புபவர்கள் இந்த வழியே நெடுந்தூரம் செல்லலாம் இந்த ஆதாரங்களில் இருந்து தெளிவாகக்கூடியவை சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70875

‘நிதிப்பிள்ளை’களைப் பற்றி…

சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வுலகின் அன்னியக்கரங்கள் என்று நான் கலாச்சாரச் செயல்பாடுகளிலும் சிலவகைச் சேவைகளிலும் ஊடாடி பெரும் செல்வாக்கைச் செலுத்தும் அன்னிய நிதிபற்றி சில கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். அன்று பெரும்பாலும் ஒருவகை வம்புகளாக மட்டுமே காணப்பட்ட அவை இன்று பரவலாக பேசப்படுகின்றன. சற்றுப்பிந்தியேனும் நான் சொன்னவற்றுக்கு ஒரு மதிப்பு வந்திருப்பதை உணர்ந்து மகிழ்ச்சி * தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் எனக்கு இந்த நிதிவலை பற்றிய தகவல்கள் தெரியவந்தன. அன்று நான் அதிதீவிரமாக பங்கெடுத்த பல சூழியல் அமைப்புகள் அன்னிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70559

இரண்டு பெண் எழுத்தாளர்கள்

திலீப்குமாரிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன். திலீப் தமிழின் முக்கியமான 85 கதைகளைத் திரட்டி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு தொகுப்பு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது இரு முக்கியமான படைப்பாளிகளை கண்டெடுத்ததாகச் சொன்னார். இருவரும் தமிழ் இலக்கியத்தின் மிகத்தொடக்க காலத்தில் எழுதியவர்கள். முன்னோடிகள். ஆனால் எந்த இலக்கியநூலிலும் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அம்மணி அம்மாள் 1913-இல் அக்காலத்து மாதஇதழ் ஒன்றில் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். வடிவம் மொழி ஆகியவற்றைக்கொண்டு பார்த்தால் அவர்தான் தமிழின் முதல் சிறுகதையாசிரியர் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56527

மலேசியாவும் இலக்கியமும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, அண்மையில் நடந்தேறிய மலேசிய இலக்கிய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இலக்கிய கூட்டம் ஒன்றில் கொண்டது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமே. கவிதை, நாவல், புதினம், சமூகம், ஆன்மீகம் என்று பல கோணங்களில் அலசப்பட்ட வாதவிவாதங்களும், உரைகளும், விளக்கங்களும் ஒரு இனிய இலக்கிய சூழலை ஏற்படுத்தி தந்தது. ‘வித்யா விநய சம்பன்னே’ என்பதற்கேற்ப குருசிஷ்ய பாவனையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கள் மலேசிய மண்ணில் மொழியும் இலக்கியமும் என்றும் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48583

வல்லினமும் பறையும்

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, வல்லினம் குழுவினர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘பறை’ எனும் சிற்றிதழ் வெளியீடு கண்டது. மிக விரைவில் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குச் செல்லவுள்ள இவ்விதழ் ‘கலை, இலக்கிய, அரசியலை’ முன்னெடுக்கும் தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வல்லினம் குழுவின் இதழ் வெளியீடு

Permanent link to this article: https://www.jeyamohan.in/48722