Category Archive: வரலாறு

குடும்பவரலாறு

  குடும்ப வரலாற்றைப் பற்றிப் பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளுத்தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ? ரமேஷ் அன்புள்ள ரமேஷ் மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டைத் தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் உள்ளது.குடும்பத்தின் வம்சவரிசை, முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிவுசெய்வார்கள். இது ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றை எழுதவும் இலக்கியப்படைப்புகளுக்கும் மிகப்பெரிய ஆவணத்தொகையாக உள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35350

மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’

    வரலாற்று நாவல் என்றால் என்ன என்று தமிழில் எளிய வாசகனிடம் கேட்டால் கல்கி, சாண்டில்யன் கதைகளைக் குறிப்பிடுவான். துரதிர்ஷ்டவசமாக சமீப காலம் வரை கல்வித்துறைசார்ந்த இலக்கிய விமரிசகர்களும் இதையே கூறிவந்தனர். ராஜா ராணி பற்றிய பாட்டிக்கதைகள் வரலாற்றுக் கதைகளா? ராஜாவுக்கு ராஜராஜ சோழன் என்றும் ராணிக்கு பெருந்தேவி என்றும் பெயரிட்டுவிட்டால் போதுமா? வரலாற்றுத் தகவல்களைப் பயன்படுத்தியதனால் மட்டும் ஒரு நாவல் வரலாற்று நாவல் ஆகிவிடுவதில்லை. வரலாறு மீதான அதன் ஆய்வுமுறையே அவ்வியல்பை தீர்மானிக்கும் அம்சமாகும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/190

வரலாற்று ஊகங்களை அணுகுதல்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம். சமிபத்திய ‘சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு’ பிரசுரமான செய்தி தொடர்ந்து அவை ஆமோதிக்கும் சில கருத்துக்கள். கங்கா யமுனா சரஸ்வதி என்றே நினைவு வைத்திருந்தமையால் இந்த புத்தகத்தின் தலைப்பே (என்னது இந்திரா காந்தி செத்துடாங்களா… ;)) ஆர்வமுட்டியது. மேற்படி புத்தக விவரங்கள் நிங்கள் அறிந்தவைதான். இருப்பினும் ஒரு சாமானியனாக பெரும் உற்சாகம் ஏற்ப்பட்டது புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கீழ் வரும் செய்திகள். கூறிப்பாக, படிக்கையில் நிச்சியமாக ஓன்றிரண்டு செய்திகளில் நம்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88417

சரஸ்வதி -ஒரு நதியின் மறைவு – சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு

அன்புள்ள ஜெ. நான் ”சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு” ஆசிரியர் – மிஷல் தனினோ (மொழிபெயர்ப்பு –வை.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்) புத்தகத்தை வாசித்தேன். இந்த புத்தகம், இலக்கியம், பாரம்பரியம், நிலவியல், புதைபொருள் ஆய்வுகள், காலநிலை சாஸ்திரம் மற்றும் பல அறிவியல்களின் வண்ணமயமான ஊடுபாவுகளால் நெய்யப்பட்டுள்ளது. இலக்கியம்,தத்துவம்,அறிவியல் போன்ற எந்த துறையில் ஆர்வம் இருப்பவராக இருந்தாலும், அவர்களுக்கு வரலாற்று உணர்வின் அவசியத்தை  நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளீர்கள். அதை நான் 2014 ஊட்டி சந்திப்பிலும், கோவையில் நடந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88322

எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை

1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்ஸிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம் இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22727

இலட்சியவாதம் அழிகிறதா?

  எரிக் ஹாப்ஸ்பாமின் வரலாற்றுச்சிந்தனைகள் பதினேழாம்நூற்றாண்டு ஐரோப்பிய அறிவொளிக்காலத்தை வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதும் போக்கு கொண்டவை. மானுட இலட்சியவாதத்தின் ஓர் உச்சகட்ட தருணம் அது என்றே ஹாப்ஸ்பாம் எண்ணுகிறார். இந்த விஷயத்தில் எப்போதும் அவருடன் நான் ஒத்துப்போவதனால் அவர் எனக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று சொல்லலாம்.   ஐரோப்பிய அறிவொளியுகம் தொடங்கிய அந்தக்காலகட்டத்தில்தான ஐரோப்பா உலகளாவிய காலனியாதிக்கத்தை உருவாக்கியது. தென்னமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்டமான இனப்படுகொலைகள் வழியாக ஒட்டுமொத்த பழங்குடிகளையும் அழித்தொழித்தது. ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் முழுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22732

வரலாற்றாய்வின் வீழ்ச்சி

  பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் டி.டி.கோசாம்பியின் வழிவந்த இடதுசாரி வரலாற்றாய்வாளர். வரலாற்றை பொருளியல் முரணியக்க அடிப்படையில் பார்ப்பவர். இந்திய வரலாற்றாய்வில் குறிப்பிடும்படியான பங்களிப்பை ஆற்றியவர்கள் இம்மரபினர். நாம் இந்தியவரலாற்றின் புதிர்கள் என நினைத்திருந்த பலவற்றை தெளிவுபடுத்தியவர்கள். வரலாற்றை தகவல்களின் குவியலாகவோ , பழம்பெருமையாகவோ நோக்காமல் ஒரு சமூகப்பரிணாமமாக நோக்க நமக்குக் கற்றுத்தந்தவர்கள். இந்திய சிந்தனை அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது இர்ஃபான் ஹபீப் அவர்களை நான் பல தருணங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறேன். மத்தியகாலகட்டத்தின் பொருளியல் வரலாற்றுப் பரிணாமத்தைப்பற்றி மிக அசலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86293

நாட்டார்கதைகளும் வரலாறும்

அன்புள்ள ஜெ நலமா ? ஜன்னலில் உங்கள் கட்டுரைகளை வாசித்து வருகிறேன் .அவை தொகுக்கப்பட்டு புத்தகமாக வரும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன் காஞ்சிரகோட்டு யக்ஷியை குறித்து கீழ் கண்ட இணைப்பில் வாசித்தேன்.https://en.wikipedia.org/wiki/Kanjirottu_Yakshi.முழுமையான வரலாறு அல்ல .இருப்பினும் ஒரு சில விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன .இந்த தொன்ம அமைப்பு பதிவான அமைப்புகளில் இருந்து வேறு பட்டு இருப்பதாக தோன்றுகிறது .பலராம உபாசனை ,ராமானுஜ பெருமாள் ஆகிய விஷயங்களும் தான்.(சுசிந்தரம் அருகே ஒரு பலராம க்ஷேத்ரம் இருந்தது என்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82874

எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்

அன்புள்ள ஜெ ,, எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எழுத்தாளர்கள் ஏன் எழுத்தாளர்களைப்போல இல்லை என்று கேட்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அதாவது எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு சீரான உறவு உண்டா என்ன? அதாவது ஒரு நாவலை வாசித்து ‘இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்’ என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா?  நான் சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது இதுதான். நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19576

ராஜராஜனும் சாதியும்

ஜெயமோகன் அவர்களுக்கு, ராஜராஜ சோழன் பற்றிய கட்டுரைகளை வாசித்தேன். இதுவரை நான் பேணிவந்த கருத்துகளுக்கு முற்றிலும் வேறொரு கோணத்தை இக்கட்டுரைகள் அளித்தன. தங்களுடன் பகிர்ந்து கொள்ள சில விஷயம்.. ராஜராஜசோழன் நாடு வளம் பெற, பண்பாட்டு ரீதியான ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கு ‘மட்டுமே’ பிராமணர்களுக்கு இலவசமாக நிலம், வரிவிலக்கு போன்ற சலுகைகளை கொடுத்தார் என்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வர்க்க வேறுபாடுகள் பிரபல்யமடையாத குல அமைப்பு இருந்த போது சொத்துரிமை தனியாருக்கு இன்றி, மொத்த சமூகத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80903

Older posts «

» Newer posts