Category Archive: உரையாடல்

குமுதம்

அன்புள்ள ஜெ. சார், என்னை பப்பரபாவென்று போட்டுக் கொடுத்துவிட்டீர்கள். யாருக்கும் தெரியாமல் ஓர் ஓரமாக எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தேன். இனிமேல் பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக மென்றாக வேண்டிய நெருக்கடிக்கு நானும் உள்ளாகிவிட்டேன் :( எனினும், குமுதத்தின் தொடர்ச்சி என்று நீங்கள் கூறியிருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது. பள்ளிப் பருவத்தில் என் பாடப்புத்தகங்களுக்கு இடையே ’குமுதம்’ எப்போதும் இருக்கும். அந்த இதழில் பணியாற்றிய ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி, ரஞ்சன் ஆகியோரை என்னுடைய முன்னோடிகளாக கருதுகிறேன். குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88650

கோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு

  தோளில் பையுடன் காரிலிருந்து இறங்கியபோது, மீனா சர்ச் எதிர்ப்புறம் தெரு ஆரம்பிக்கும் சந்திப்பிலேயே நின்றிருந்தார். “ஜெ சார்…” என்று ஆரம்பித்தவுடன், “அதோ அந்த கார் நிக்கிற இடத்துல ரைட் சைடு கறுப்பு கேட் வீடு” என்றார். “வெங்கி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு விட்டு, கேட் தாண்டி வாசலில் செருப்பு கழட்டி தயங்கி வீட்டுக்குள் நுழைந்தேன். ஹாலில் ஜெ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். பெயர்சொல்லி கைகொடுத்து கதவருகில் வலதுபக்கம் உட்கார்ந்துகொண்டேன். புதிய முகங்களோடு ஜெ வலைப்பக்கத்திலும், சொல்புதிது குழும பதிவுகளிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88522

பெண்களின் காதல்

ஜெ அவர்களுக்கு , அன்பு வணக்கம். உங்களைப் பற்றி அறியும் வாய்ப்பினைச் சில நாட்கள் முன்புதான் பெற்றேன். படித்தேன், உங்களது படைப்புகளை. மனதில் இனம் புரியாத அழுத்தம். காரணம் உங்கள் எழுத்தின் வலிமை தந்த வலி. பாராட்ட வயதில்லை. பரவசத்தைப் பகிர்ந்து கொள்ளத் தந்த வாய்ப்பிற்கு நன்றி . நேற்று இரவு இமை உறங்கி மனம் உறங்கா நேரத்தில் எழுந்த ஒரு கேள்வி! ஆண்களின் காதல் பகிரங்கமாகப் பலர் மத்தியில் பேசப்படும்போது, ஏன் பெண்களின் காதல் மட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16862

இலக்கியமும் சமகாலமும்

ஆசிரியருக்கு, நேற்று பாரதி புத்தகாலயத்தில் நண்பர்களுக்கு இடையே ஒரு உரையாடல் நடந்ததது, அதில் சில ஐயங்கள் எங்களுக்கு : 1. செவ்வியல் காலகட்டம் முதல் பின் நவீனத்துவ காலகட்டம் வரை உலகெங்கும் ஒரே நேரத்தில் ஒரே போக்கு நிகழ்ந்ததா? உலகின் நவீன காலகட்டத்தின் முடிவில்தான் நாம் (தமிழர்கள் ) அதற்கு வந்து சேர்ந்தோமா?குறைந்தபட்சம் இந்தியாவெங்கிலும் ஒரே போக்கு எல்லா சம காலத்திலும் நிகழ்ந்து வந்ததா? நிகழ்கிறதா ? 2. இது போன்ற சிந்தனைகள், அரசியல் அல்லது சமூக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22910

துறைசார் நூல்கள்

        அன்புமிக்க திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் ’ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’ நூலின் ஆசிரியன். டிசம்பர் 23, 2012ல் நீங்கள் என் நூலுக்கு உங்கள் இணையதளத்தில் எழுதிய விமர்சனத்திற்கு நான்காண்டுகளுக்குமேல் தாமதித்து நன்றி கூறுவதற்காக என்னை மன்னியுங்கள். நீங்கள் அந்த நூலை ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த சிறந்த பத்துத் தமிழ்நூல்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று MIDS பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கும் கூட நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87918

வியாசபாரதமும் வெண்முரசும்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, பன்னிரு படைக்களம் படித்துக் கொண்டிருந்தேன்… ஜராசந்தன் வதம் முடிய படித்த போது, எவ்வளவு தகவல்களை இவர் தருகிறார்… இவ்வளவில் பாதி தகவலாவது கங்குலியின் பதிப்பில் திரட்ட முடியுமா என்று திரும்பவும் மஹாபாரதத்தின் சபாபர்வம் கோப்புகளைக் கண்டேன். வியப்படைந்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சின்ன குறிப்புகளையும் நீங்கள் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்… உதாரணத்திற்கு கிருஷ்ணனும், பீமார்ஜுனர்களும் மகதத்தின் கடைவீதிகளில் நடந்தது; பெரு முரசுகள், மற்போர், ஜராசந்த வதம் முடிந்ததும் சகதேவனைச் சந்திப்பது என அனைத்திலும் உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87889

கோவை -வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்

நண்பர்களே , இந்த   மாத கோவை ” வெண்முரசு  வாசகர்கள் கலந்துரையாடல் ” 03- 04- 2016 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. ‘வெய்யோன் ‘ நாவலை முன்வைத்து கலந்துரையாடல் நடைபெறும். வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். முகவரி மற்றும் தொடர்பு எண்Suriyan Solutions 93/1, 6th street extension ,100 Feet road , near Kalyan jeweler, Ganthipuram, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86122

உரையாடல்களின் வெளி

அன்பின் ஜெயமோகன் தமிழ் மற்றும் இந்திய சூழலில் முஸ்லிம், கிறிஸ்தவர்களின் மனோபாங்கில் ஏற்பட்ட மாற்றம் பொதுப்புத்தியில் ஒரு அன்னியத்தன்மையை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு பண்பாடும் கொள்வினை, கொடுப்பினைகளால் மாற்றம் கண்டு செழுமை அடைவதை வரலாற்றில் பார்த்து வருகிறோம். இஸ்லாத்தின் தாக்கத்தால் இந்திய,தமிழ் மதிப்பீடுகள் முற்றிலுமாக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. அரபு சூழலில் சித்தப்பா மகளை திருமணம் செய்வது மரபான ஒன்று. ஆனால் தமிழ் சூழலில் சித்தப்பா மகள் தங்கை முறையாகிறது. தமிழகத்தில் மேலப்பாளையம் மற்றும் இன்னும் சில ஊர்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85629

பத்மராஜனுடன் ஓர் உரையாடல்

https://www.youtube.com/watch?v=Kl96WTpNoh4   ஒரு நண்பர் அனுப்பிய சுட்டி இது. பத்மராஜனுடன் ஓர் அந்தரங்கமான உரையாடல் என இந்த சிறியபடத்தைச் சொல்லலாம். நான் கவனித்த சில விஷயங்கள். ஒன்று, இந்தப்பையனுக்கு எந்தவகையிலும் மலையாளத்தன்மை இல்லை. அவன்பேசுவதே கேரளத்துக்கு அப்பால் எங்கோ இருந்துகொண்டு எனத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பத்மராஜனிடம் பேசுவதை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. அவரை எனக்குத்தெரியும்- ஒரு முறை சந்தித்திருக்கிறேன். லோஹியுடன். இந்த ஆங்கிலப்பேச்சைக்கேட்டால் திகைத்திருப்பார் பத்மராஜன் முழுக்கமுழுக்க கேரளத்தின் வட்டாரப் பண்பாட்டுக்குள் இருந்தவர். ஒற்றப்பாலத்தைச் சுற்றியிருக்கும் வள்ளுவநாடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84345

கெட்டவார்த்தைகள்

  அன்புள்ள ஜெ.  வணக்கம் … பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2196

Older posts «

» Newer posts