Category Archive: சந்திப்பு

நாளை மறுநாள் சென்னையில்..

    இந்த ஆண்டில் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. புத்தாண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இருந்தேன். தொடர்ந்து மதுரை, பாண்டிச்சேரி. இப்போது மீண்டும் சென்னையில். நாளை மறுநாள் [10-1-2020] சென்னையில் இருப்பேன். ஈரோடு பாண்டிச்சேரி தஞ்சை நண்பர்கள் வருகிறார்கள். அனைவரும் தங்குவதற்கு ஒரு பொதுவான இடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காலைமுதல் இலக்கிய அரங்கு ஒருவகையில் தொடங்கிவிடும். 10 மாலையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் பத்தாண்டு நிறைவு விழா. அது கோவையில் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. ஆனால் சென்னையில் நிகழும் நூல்வெளியீட்டை வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129160

மூன்று ஊர்கள், மூன்று விழாக்கள்

கிட்டத்தட்ட சுற்றுப்பயண விவரத்தை வெளியிடவேண்டிய கட்டாயம் உருவாகும் நிலை. எனக்குத்தெரிந்து நவீன எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் மட்டுமே இந்த அளவுக்கு ஆடிக்காற்றில் அலைக்கழிபவர். அவர் வீட்டுக்குள் பெட்டியுடன் நுழைகையில் ஆச்சி அடுத்த பெட்டியை அடுக்கி தயாராக வைத்திருப்பார் என்று கேள்வி. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து இறங்கி மறுநாளே பாரீஸ் சென்றிருக்கிறார். உலகம்சுற்றும் [கிட்டத்தட்ட] வாலிபர். நான் கொஞ்சம் கவனமாக இருப்பவன். ஆனாலும் என்ன ஏது என்று புரியாமல் தேதிகளை கொடுத்துவிட்டேன். காரணம் தேதிகளை கொடுத்தபோது இதெல்லாம் அடுத்த ஆண்டுதானே என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129114

புத்தாண்டு

சென்ற இரு ஆண்டுகளாக புத்தாண்டில் சந்திப்பது எந்த திட்டமும் இல்லாமல் நிகழ்ந்துவருகிறது. ஈரட்டியில் சந்தித்தோம். இம்முறையும் திட்டம் இருந்தது. ஆனால் நண்பர் ஆனந்தகுமார் அவர் ஆனைகட்டியில் நடத்திவரும் சத்-தர்சன் என்னும் அமைப்பின் சார்பில் கட்டப்படும் ஒர் இல்லத்தை நான் திறந்துவைக்க முடியுமா என அழைத்தார். அதையே புத்தாண்டுச் சந்திப்பாக ஆக்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஊட்டியிலிருந்து ஆனைகட்டிக்குச் சென்றேன் நண்பர்கள் சிலரை அழைத்திருந்தேன். இதை ஒரு பொது நிகழ்வாக அறிவிக்க விரும்பவில்லை, ஆகவே இணையதளத்தில் வெளியிடவில்லை. 30 நண்பர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129048

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்த சாரதி இணையப்பக்கம்   நேற்று மாலை [07-10-2019] நானும் நண்பர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களை அவருடைய இல்லத்திற்குச் சென்று பார்த்தோம். ஏழு மணிக்கெல்லாம் அவர் தூங்கிவிடுவது வழக்கம் ஏன்பதனால் சொல்லிவைத்து மாலை ஐந்து மணிக்கே நான் தங்கியிருந்த விடுதியில் கூடி அங்கிருந்து கிளம்பினோம். சண்முகம், காளிப்பிரசாத், சுரேஷ்பாபு ராகவ் ஆகியோர். இ.பா முன்பிருந்ததைவிட நன்றாக மெலிந்திருக்கிறார். நெஞ்சு எரிச்சல் போல சிறு உடல்சிக்கல்கள் இருந்தாலும் நன்றாக இருக்கிறார். வழக்கமான உற்சாகம், மெல்லிய நக்கல். ‘தொண்ணூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126547

குரு நித்யா சந்திப்பு – கடிதங்கள்

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி அன்புள்ள ஜெயமோகன், 2013ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தாண்டு மட்டும் காவிய அரங்கு ஏற்காட்டில் நடந்தது. அதில்தான் உங்களுடன் 2 நாட்கள் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று திரும்பிப் பார்க்கையில் அதன் மதிப்பு மேலும் மேலும் கூடிக்கொண்டே வருகிறது. அந்தந்த கணங்களில் வாழ்ந்த உங்கள் ஆளுமையை நேரில் உணர்ந்த தருணங்களை எண்ணும் போதெல்லாம் மனம் பெரும் கிளர்ச்சி அடைகிறது. வாசகர்களாகிய எங்களுக்கு அதெல்லாம் பெரும் பேறு. குறிப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119529

சந்திப்பு, உரையாடல் – கடிதங்கள்

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும் எழுதுக! அன்புள்ள ஜெ, வணக்கம். நான் தங்களது புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டேன். பள்ளி பருவதிலேஆர்வமாக புத்தங்களை படித்த எனக்கு,நான் படித்த சுசீந்திரம் பள்ளியில் சிறந்த புத்தங்களையாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை.எனக்கு கிடைத்த சில நாவல்கள் பொழுதுபோக்குஅம்சம் நிறைந்தவைகளாக மட்டுமே இருந்தன. பள்ளி பருவத்தில் அதன் மீது மிகப் பெரியஈர்ப்பு ஏற்ப்பட்டது. நன்றி,பள்ளியில் நான் பல பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளிலும் கலந்து கொண்டு பலபரிசுகளைப் பெற்று உள்ளேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119519

நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பு – கடிதங்கள்

காலை ஆறு மணிக்கு நமக்கலில் இறங்கியதில் இருந்து இந்த கட்டுரையை தொடங்குவது அடித்து துவைத்து காயவைக்கப்பட்ட தேய்வழக்காம். வேறு எங்கிருந்து தொடங்குவது? என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? யாருக்காக எழுதுவது? எதை எழுதக்கூடாது? எப்படி எழுதக்கூடாது? எதற்கு எழுதுவது? இப்படி ஓராயிரம் கேள்விகளுக்கு பதில்த் தேடி தான் நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பிற்கு சென்றிருந்தேன்! பொட்டிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் ஏற்கனவே சில நண்பர்கள் காத்திருந்தார்கள், இலக்கிய விவாதமும் தொடங்கிவிட்டிருந்தது. புதிய வாசகர்களின் படைப்புகள் முதல் விஷ்ணுபுரம் வரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119401

கொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு நாகர்கோயில் ரயில் நிலையத்தில் பழம்பொரியை பார்த்தேன். “ச்சேச்சே’ என விலகி அப்பால் சென்றேன். பழம்பொரி மட்டும் சாப்பிடக்கூடாது, டீயும் சாப்பிடவேண்டும், டீ சாப்பிட்டால் ரயிலில் தூக்கம் வராது, ஆகவே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டேன். ஆனால் ஒரு வட்டம்போட்டு மீண்டும் பழம்பொரிக்கு அருகிலேயே வந்திருப்பதை உணர்ந்தேன். “பால் கிடைக்குமா?” என்று கம்மிய குரலில் கேட்டேன். “ஆமாம்” என்றான். “நீயொக்கே என்னே ஜீவிக்கான் அனுவதிக்கில்ல அல்லெடா?” என ஜெகதி ஸ்ரீகுமார் குரலில் நெஞ்சுக்குள் குமுறிவிட்டு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119286

புதியவாசகர் சந்திப்பு நாமக்கல்

  நண்பர்களே, இந்த வருடம் தொடர்ச்சியான  நான்காம் ஆண்டாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்   சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பு  ஈரோட்டில் நடைபெற்றது.  அதில் சிலருக்கு இடமளிக்க இயலவில்லை, ஆகவே இந்த இரண்டாவது சந்திப்பு.   இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார்.  இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118461

புதியவாசகர் சந்திப்பு கடிதங்கள்-3

புதியவாசகர் சந்திப்பு, ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -கடிதங்கள் அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் இவ்வருட புதிய வாசகர் சந்திப்பிற்கான இடம் கிடைத்ததிலிருந்து  மனதில் ஒரே பரபரப்பும் பதட்டமும் தான். கடந்த இரு வாரமும் கதைகளையும் புதிய வாசகர்களின் படைப்புகளையும் வாசிப்பதிலேயே சென்றது. “தேர்விற்கு இவ்வாறு ஒழுங்காக படித்திருந்தால் வாழ்க்கையில் உருப்பட்டிருக்கலாம்”என்று அம்மாவின் குரல் அசரிரீ போல் இடையியே ஒலிக்கும். ஒரு வழியாக வெள்ளி இரவு பேருந்து ஏறினோம் நானும் விஜியும். வழமை போல சென்னையின் வாரஇறுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118552

Older posts «