Category Archive: குழுமவிவாதம்

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்

இலக்கியமானாலும் சொந்தவாழ்க்கையானாலும் தொழிலில் இருந்து அதைப் பிரித்துக்கொள்ளும் compartmentalization மிகமிக முக்கியம். அதிலுள்ள பிரச்சினையை இலக்கியத்துடன் கலந்துகொள்ளவேண்டியதில்லை. குடியை, கேளிக்கையை தொழிலுடன் கலந்துகொள்வதனால் தொழில்வீழ்ச்சி அடைந்தவர்கள் நம் சூழலில் மிகமிக அதிகம். அரசியலை கலந்துகொள்வதனால் வீழ்ச்சியடையும் சிறிய தொழில்செய்பவர்கள் ஏராளம். ஒப்புநோக்க இலக்கியம் அந்த அளவுக்கு ஆபத்தானது அல்ல இன்னொன்று, இன்னமும் முக்கியமானது. குடும்பவாழ்க்கை. அதை தொழிலில் இருந்து பிரித்தாகவேண்டும். மனைவியுடன் பூசல், மகன் சரியாகப் படிக்கதது மாமியாருக்கு நோய் என்னும் ஆயிரம் பிரச்சினைகளை தொழிலில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85803

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு நீண்ட பதிவு.. அனேகமாக அனைத்தும் நீங்களும், நண்பர்கள் விவரித்த புள்ளிகள் தான் என்றாலும், சொந்த அனுபவத்தில், அனைத்தையும் எண்ணித்தொகுக்க முயன்றிருக்கிறேன்.. ஏதேனும் தவறிருந்தால் கூறவும்.. 2009 ல் நான் இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன். அதன் முன்னரும் விகடனில், எஸ் ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் ஆகியோரை படித்திருந்தேன்.. ஆனால் இது ஒரு தனி வகையான எழுத்து (Genre) என்பது உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்ததும்தான் அறிந்தேன். என்னளவில் இலக்கிய வாசிப்பு என்னை பெரிதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85984

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-4

                   அன்புடன்  ஆசிரியருக்கு    வானவன் மாதவி இயலிசை வல்லபி ஆகியோரின் இல்லத் திறப்பு  குறித்த  உங்கள்  பதிவினை  படித்தது முதலே  மனம்  அமைதியற்றிருந்தது. ஈரட்டிச் சந்திப்பு  குறித்த  எதிர்வினைகளை படித்தபோதும் எழுத  நினைத்தேன். எழுதத்  தொடங்கினால் கோபம் தான்  வந்தது. சிலர்  இணைந்து  சிரிப்பதைக்  கண்டு  இவ்வளவு  எரிச்சல்  கொள்பவர்களுடன்தான் வாழ்கிறோம்  என்று  சலிப்பாக  இருந்தது. கருத்தொருமித்த அந்த  திருநெல்வேலி  தம்பதிகள் பற்றி  இப்போது  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85928

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3

  திரு ஜெயமோகன் “இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி” பதிவில் நீங்கள் கேட்டதற்கான என் பதில் என்னளவில், இலக்கியம் என் வென்றெடுக்கும் வேகத்தை நிச்சயம் மட்டுப்படுத்துவதாகவே உணருகிறேன், சில நேரங்களில் தேவைக்கு மிக அதிகமான உயர் விழுமியங்களை உருவாக்கிக்கொள்ள செய்கிறது, சில சமயம் மீறல்களை ஞாயப்படுத்த செய்கிறது. அது என்னில் ஏற்படுத்தும் ஆணவமும், கருணையையும், நிமிர்வும், காதலும், நெறிகளும் பிற விழுமியங்களும், உணர்வுகளும் இந்த உலக வாழ்க்கைக்கு பொருந்தாததாகவே உணர்கிறேன். ஒரு சுயசிந்தனை உடையவன் அதனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85920

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2

    அன்புள்ள செல்வா மற்றும் நண்பர்களுக்கு, 1. இலக்கியம் அற உணர்வை கூர்மைப்படுத்தும் என நான் நம்பவில்லை. ஆனால் நாம் என்னவாக இருக்கிறோமோ அதைப் பற்றிய தெளிவும் கூர்மையும் நிச்சயம் அதிகரிக்கும் என்றே எண்ணுகிறேன். நேர்மையும் கருணையும் வஞ்சமும் கோபமும் காமமும் – படைப்பாளியின் எல்லா குணங்களும், அவரவர் ஆளுமைக்கேற்ப, விழைவுகளுக்கு ஏற்ப, கூர்மைகொள்ள வாய்பிருக்கிறது. இலக்கியவாதி/ வாசகன் தன் நிலைப்பாட்டை காத்துகொள்ளும் தர்க்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். 2. மேற்சொன்ன காரணத்தினாலே – வென்றெடுக்கும் வேகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85800

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-1

இது போன தலைமுறை மனநிலை எனத்தோன்றுகிறது , இன்றைய வாசகர்கள் தங்கள் குழந்தைகளை வாசிக்கச்சொல்லி கொடுமைப்படுத்துவதைத்தான் பார்க்கிறேன் . ஆனால் அப்படி சுலபமாக இலக்கியம் படிக்கும் சுவை வராது என்பதால் 100 இல் ஒருவரை மட்டுமே படிக்கவைக்க இயல்கிறது . அடிப்படை வித்தியாசம் நிகழ்ந்திருப்பது ஒன்று கண்ணுக்கு தெரிகிறது . வாசகர்களின் குழந்தைகள் ,குடும்பத்தினர் இலக்கியவாதிகளை வாசிக்காவிட்டாலும் அவர்கள் மீது பெருமதிப்பை அடைகிறார்கள் , வெட்டி ஆட்கள் என்ற ஏளனம் மறைந்துவிட்டது. தொழில் மனநிலை குறித்து.. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85796

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி

சொல்புதிது விவாதக்குழுமத்தில் நண்பர் செல்வேந்திரன் இந்த வினாவை எழுப்பியிருந்தார். நாற்பதுக்கும் மேற்பட்ட எதிர்வினைகள் இதற்கு வந்தன. முக்கியமான கேள்வி இது என நினைக்கிறேன்.   நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தும் ஏன் ஒரு பாடலாசிரியராக வசனகர்த்தாவாக சினிமாவில் நீடிக்க இயலவில்லை என கவி பிரான்சிஸ் கிருபாவிடம் அவர் தள்ளாடாத தருணத்தில் கேட்டேன். குடி ஒரு காரணமில்லை. எத்தனையோ திரைக்கலைஞர்கள் போதை இல்லாமல் தொழிலுக்கு வருவதில்லை. உண்மையில் போதையில் மட்டுமே அவர்களால் இயல்பாக இருக்க முடியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85792