Category Archive: காந்தி

காந்தியின் முகங்கள்

  காந்தியின் அரிய புகைப்படங்களுடன் அப்புகைப்படங்களைப்பற்றி ஒரு கட்டுரை http://www.bbc.com/news/world-asia-india-35259671

Permanent link to this article: https://www.jeyamohan.in/83100

காந்தியம் நடைமுறைச் சாத்தியங்கள்…..சித்தநாத பூபதி

2014 இல் ஊருக்குச் சென்றிருந்த பொழுது படித்த பள்ளிக்கும் சென்றிருந்தேன். முன்பு வேதியியல் ஆசிரியையாக-வழிகாட்டியாக் இருந்தவர் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவிஉயர்வு பெற்றிருந்தார். பள்ளியின் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக செயலூக்கத்துடன் இருப்பவர். அங்கு சென்றிருந்த பொழுது பள்ளி மாணாக்கர்களின் தரைக்கீழ் நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து விட்டது என்றும் புதிய தொட்டிக்கு நிதி தேவைப்படுவதாகவும் – முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளையிலிருந்து 25000 கொடுத்தேன். அதற்கு ஆகும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83261

வெறுப்பும் கனிவும்

  காந்தி டுடே இதழில் சுநீல்கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தக்கட்டுரை காந்தியைப்பற்றி தொடர்ந்து காழ்ப்பாளர்கள் முன்வைத்துவரும் அவதூறுக்கான விரிவான பதில் வெறுப்பதும் கொந்தளிப்பதும் ஒன்றும் அத்தனை கடினமல்ல. ஆனால் உண்மையிலேயே அதற்கப்பால் செல்வதும், நேசிப்பதும் அத்தனை சுலபமல்ல என்ற வரியை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த உச்சம் வரை வந்துசேர சுனீல் கிருஷ்ணனின் தவம் அவருக்கு உதவியிருக்கிறது

Permanent link to this article: https://www.jeyamohan.in/81945

காந்தி, வரலாறு- கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், இது என்னுடைய இரண்டாவது மின்னஞ்சல் கடிதம், முதல் கடிதம் இன்னும் பிரசுரமாகவில்லை, இருந்தாலும், துணிந்து இதை உங்களுக்கு எழுதுகிறேன். . ஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்? என்ற தலைப்பில் Dec 19, 2012 அன்று வெளியிட்ட கேள்வி பதில் பகுதியின் மறு பிரசுரத்தை இன்று வாசித்தேன். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். இருந்தாலும், ”சரளாராணி சௌதராணியைப்பற்றி சொல்லிவிட்டேன் என்பதற்காக தமிழகத்தின் காந்திய அமைப்புகள் எவையும் ‘இன்றையகாந்தி’ நூலை வாங்கவில்லை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80986

நேமிநாதர்,கிருஷ்ணன்,காந்தி

இனிய ஆசிரியருக்கு, என் பெயர் லெட்சுமிபதி ராஜன். நான் மதுரையில் தங்களை சந்தித்தது நினைவிருக்கலாம். வெண்முரசு என் ஒவ்வொரு நாளையும் செறிவு மிக்கததாக்குகிறது. இதுவே என் முதல் மின்னஞ்சல். (அனுப்ப உத்தேசித்த சில மின்னஞ்சல்கள் அனுப்பபடாமல் உறங்குகின்றன.) இந்த மின்னஞ்சலுக்கான காரணம் வெண்முரசில் கிருஷ்ணன் அரிஷ்டநேமி சந்திப்பு ஏனோ எனக்கு தங்களின் “காந்தியின் பலிபீடம்” கட்டுரையை நினைவு படுத்தியதே. இவ்விரு சந்திப்புகளில் உள்ள ஒற்றுமைகள் திகைக்க வைக்கின்றன. “ஆற்றுவனவற்றுக்கு முடிவிலாதிருந்தன எனக்கு. அவரோ செயலின்மையை ஊழ்கமென கொண்டிருந்தார்.” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80444

காந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள்

ஜெ அவர் கட்டுரைகளுக்கு என்னென்ன எதிர்வினைகள் வரும் என்பதை நன்கு அறிவார். அதைப் போல அவரை தினமும் வாசிக்கும் வாசகர்களும் இந்தக் கட்டுரையில் சீண்டுகிறார் என்பதை ஊகிக்கத்தான் முடிகிறது. கள்ளுக்கடை காந்தி கட்டுரை ஒர் சீண்டல் என்று பார்த்தவுடனே தெரிந்தது. கள்ளுக்கடை காந்தி என்ற தலைப்பே அதைச் சொல்கிறது. இருந்தும் அந்தக் கட்டுரை என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது காந்தி கள்ளை எதிர்ப்பாரா அல்லது குடிப்பவர்களிடம் ‘சியர்ஸ்’ சொல்வாரா என்பதற்காக இல்லை. ஊட்டி முகாம்களில் நாம் போதையை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79438

மாட்டிறைச்சி, கள், காந்தி-முடிவாக…

கள்ளுக்கடை காந்தி கட்டுரை க்கான எதிர்வினைகளைத் தொகுத்து அனுப்பியமைக்கு நன்றி. எதிர்வினைகள் இருவகை. கூகிளாண்டிகள் அங்கே இங்கே பீராய்ந்து கைக்குக் கிடைத்த மேற்கோள்களை எடுத்துவைத்து எல்லாம் தெரிந்தவர்கள்போல எழுதிய ஃபேஸ்புக் குறிப்புகளை புறக்கணிக்கவே விழைகிறேன். அவர்கள் ஏற்கனவே மேதைகளாக பாவனைசெய்கிறார்கள், ஒரு சொல்லையும் உள்ளே கடத்தமுடியாது. நண்பர் ஜடாயு அப்படி அல்ல. அவருக்கு விஷயம்தெரியும். ஆனால் அவர் எடுக்கும் நிலைப்பாடு சாதகமான மேற்கோள் நோக்கிச் செல்லவைக்கிறது. அத்தகைய மேற்கோளரசியலை 21 வயதில் அவர்களின் இதழிலேயே தொடங்கியவன் நான்.அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79269

காந்தி- கள்- மாட்டிறைச்சி – கடிதங்கள்

கள்ளுக்கடை காந்தி கட்டுரைக்கான எதிர்வினைகள் இவை அன்புள்ள ஜெ, இப்பொழுது பரவலாக பேசப்படும் மது விலக்கு விவாதத்தில் காந்தியின் தரப்பு கள்ளை ஆதரிப்பதாக இருக்காது. மாறாக இன்று சாராயம் பெருக்கெடுத்தோடும் நிலைக்கு காரணமான இலவச பொருளாதாரத்தையும் அதனை ஒட்டிய வாக்கு வங்கி அரசியலை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கும். அதற்காக பெண்களை போரட்டங்களில் பெருமளவு ஈடுபடுத்தியிருக்கும். ஏனெனில் இவ்விஷயத்தில் அவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவர்கள். மாற்றமும் அவர்களாலேயே சாத்தியம். இலவசத்தை ஏற்கும் மனநிலையை எதிர்க்கும் செயல்பாடுகள் முன்னிறுத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட முயற்ச்சியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79201

காந்தியும் கள்ளும் -கடிதங்கள்

கள்ளுக்கடை காந்தி கட்டுரைக்கான எதிர்வினைகள் அன்பு ஜெமோ, இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள். காந்தி ஜெயந்தி என்றதும், காந்திக்கு அடுத்தபடியாக உங்கள் ஞாபகம் தான் வந்தது. காரணம், இன்றைய காந்தி நூல். காந்தி பற்றிய அத்தனை விமர்சனங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்ட அருமையான நூல். அதற்காக, மீண்டும் ஒரு நன்றி. இன்றைய கள்ளுக்கடை காந்தி கட்டுரையில் ஒரு புள்ளியில் நான் மாறுபடுகிறேன். //இந்தக்கள்ளுக்கடை போன்ற ஒன்று எவ்வகையிலும் தீங்கல்ல என்றே எண்ணுகிறேன்.// இந்த தலைமுறையில் குடிநோயாளிகளாக ஆகிவிட்ட பலரும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79191

கள்ளுக்கடைக் காந்தி

சென்ற செப்டெம்பர் முப்பதாம் தேதி ஒரு சினிமா வேலையாக வைக்கம் சென்றிருந்தேன். நண்பர் மதுபாலும் தயாரிப்பாளர் சுகுமாரும் உடனிருந்தனர். திரும்பும் வழியில் மதிய உணவை எங்கே சாப்பிடுவது என்று எண்ணியபோது சுகுமார் ஃபோன் செய்து அவரது நண்பர் நந்தகுமாரிடம் விசாரித்தார். சேர்ப்பு என்ற ஊரில் உள்ள ஒரு கள்ளுக்கடை சிறந்தது என்றார் நந்தகுமார். சேர்ப்பு நடிகர் மம்மூட்டி பிறந்த ஊர் கள்ளுக்கடையை விசாரித்துத் தெரிந்துகொண்டோம். வேம்பநாட்டுக்காயலின் கரையில் குடைப்பனையோலைகளால் கட்டப்பட்ட கள்ளுக்கடை. ஆனால் பல அறைகள் கொண்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79162

Older posts «

» Newer posts