Category Archive: காந்தி

பயிற்றுமொழி பற்றி காந்தி

  காந்தியின் உணவு பரிந்துரை   ஆசிரியருக்கு , காந்தியின் இந்த ஆங்கில கல்வி குறித்த கட்டுரை மாற்று இணைப்பு மொழி என்கிற அம்மச்சத்தை தவிர கிட்டத்தட்ட அனைத்து முனைகளையும் பரிசீலிக்கிறது, அசல் சிந்தனை குறித்து உறுதிபட பேசுகிறது, இரண்டாவது மொழி கற்றலின் சுமை பற்றியும் பேசுகிறது. உங்களது கல்வி சிந்தனைக்கு மிகவும் நெருக்கமானது. அதன் மொழியாக்கத்தை கிழே தருகிறேன். போதனா மொழி – காந்தி ( http://www.gandhi-manibhavan.org/gandhiphilosophy/philosophy_education_aspergandhi.htm) நமது இந்தியத்தன்மை அகற்றப்பட்ட இந்த தவறான கல்வி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128466/

காந்தியின் உணவு பரிந்துரை

  ஆசிரியருக்கு,   காந்தியின் உணவுப் பழக்க பரிந்துரை மிக சுவாரஸ்யமானது, கூறிய அவதானிப்புகளை கொண்டது. சமீபத்தில் கச்சித்தமான எளிமையான மொழியில் எழுதப்பட்ட  இவ்வளவு வசீகரமான ஒரு கட்டுரையை நான் படித்ததில்லை, ஆகவே உடனே மொழி பெயர்த்தேன். அதை கீழே கொடுத்துள்ளேன் :       உணவும் உணவுத் திட்டமும் – காந்தி (http://www.gandhi-manibhavan.org/diet_pro.htm)   மனிதன் காற்றும் நீருமின்றி வாழ இயலாது என்றாலும், உடலுக்கு ஊட்டமளிப்பது உணவேயாகும். எனவேதான் ‘உணவே வாழ்வு’ என சொல்லப்படுகிறது.   உணவை மூன்று பகுதிகளாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128178/

காந்தி வாசித்த நூல்கள்

  அன்புள்ள ஜெ   காந்தி வாசித்த நூல்களின் பட்டியல். நிறையவே வாசித்திருக்கிறார் என தெரிகிறது. மதநூல்களுக்குச் சமானமாகவே வானியல்நூல்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது http://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm   மணிபவன் என்னும் இந்தத் தளம் மிக உதவிகரமானது   கிருஷ்ணன் ஈரோடு    

Permanent link to this article: https://www.jeyamohan.in/127874/

ஓஸிபிசா, ரகுபதிராகவ…

எண்பதுகளில் ஓஸிபிஸா குழு சென்னைக்கு வந்தது. அதைப்பற்றிக் குமுதம் செய்திகளாக வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒளியமைப்புகள் மட்டும் ஐம்பது லாரிகளில் கொண்டுவரப்பட்டு அரங்கை அடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின் குமுதம் இதழில் அரசுபதில்களில் ‘பாட்டா அது ?காட்டுக்கூச்சல்’ என எழுதியிருந்தார்கள். மேலும் ஐந்தாண்டு கழித்து நான் முதன்முதலாக ஓஸிபிஸாவின் பாடலைக் கேட்டேன். எனக்குப்பிடித்திருந்தது. ஏன் அதைக் காட்டுக்கத்தல் என்கிறார்கள் என்று ரமேசன் அண்ணனிடம் கேட்டேன், டேப்ரெக்கார்டர் என்ற அற்புத வஸ்துவுக்குச் சொந்தக்காரர். அப்போதுதான் வளைகுடாவிலிருந்து திரும்பியவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33125/

காந்தியின் காதலி

காந்தியும் காமமும் – 1 காந்தியும் காமமும் – 2 காந்தியும் காமமும் – 3 காந்தியும் காமமும் – 4 டியர் ஜெ.மோ, வணக்கம். காந்தி பற்றிய உங்கள் கடிதங்கள் வாசகர் கடிதங்கள் பகுதியைபார்வையிட்டேன். மணிலால் ஒரு பெண்ணை முத்தமிட்டதற்காக உண்ணா னோம்பிருக்கும் காந்தி தன் வாழ்க்கையில் ஒரு பெண்ணை தன் “ஆன்மீக மனைவி ” என்று கொண்டாடினார்.அவர்களுக்கான கடிதங்கள் வாசிக்க கிடைக்கின்றன.காந்தியை இந்த இடத்தில் புரிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது. கஸ்தூரிபா காந்தியைப் பற்றியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119124/

உரையாடும் காந்தி – கடிதங்கள்

உரையாடும் காந்தி உரையாடும் காந்தி வாங்க அன்புள்ள ஜெ, ஏற்கெனவே நான் “உரையாடும் காந்தி” தொகுப்பு பற்றி வேலூரில் நடக்கவிருந்த வாசகசாலை நிகழ்வு பற்றி உங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிருந்தேன். இந்த கடிதம் அந்த நிகழ்வு நடந்த விதம் மற்றும் நிகழ்வின் வெற்றி பற்றியது நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. முக்கியமாக வாசகசாலை பார்வையில் பேசிய மூன்று தோழர்களில் இரண்டு தோழர்கள் உரையாடும் காந்தி தொகுப்பை முன்வைத்து தங்களது வாசிப்பு அனுபவங்கள். தாங்கள் இந்த தொகுப்பிலிருந்து கற்றுக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119118/

உரையாடும் காந்தி – ஓர் உரையாடல் – வேலூர்

அன்புள்ள ஜெ, வணக்கம் நான் க. விக்னேஷ்வரன் வாசகசாலை அடிப்படை உறுப்பினர்களில் ஒருவன். கடந்த ஒரு வருடங்களாக ஒவ்வொரு மாதமும் வாசகசாலை மற்றும் வேலூர் மாவட்ட தந்தை பெரியார் நூலகம் இணைந்து இலக்கிய கூட்டங்களை வேலூரில் நடந்துகிறோம். இந்த முறை உங்களின் “உரையாடும் காந்தி” என்ற கட்டுரைத் தொகுப்பை கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறோம். (அழைப்பிதழை கிழே இணைந்துள்ளேன்.) என்னளவில் “உரையாடும் காந்தி” தொகுப்பு இன்றைய சமூக சூழ்நிலையில் அதுவும் காந்தி போன்ற ஆளுமையை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118406/

உரையாடும் காந்தி

    ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில்  ஒன்று காந்தி. வேர்களை வெட்டிவிட்டு எழுந்து பறந்தவர்களின் யுகம் அது. ஆழ வேரூன்றி விழுதுகளையும் ஊன்றி வானுக்கு கைவிரித்தெழுந்த ஆலமரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116669/

இரு காந்திகள்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/722/

வெறுப்புடன் உரையாடுதல்

  அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2760/

Older posts «