Category Archive: கவிதை

வெறியாட்டெழுந்த சொல்

1991ல் ஊட்டியில்  ஒருநாள் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தபோது நான் தமிழ் கவிதை ஒன்றை தமிழிலேயே சொன்னேன். மலையாளக் கவிஞர் ஒருவர் பின்னாலிருந்து எழுந்துவந்து ஆர்வத்துடன் ‘என்ன சொன்னார்?” என்று என் அருகிருந்தவரிடம் கேட்டார். “கவிதைபற்றி என்னவோ சொன்னார்” என்று இவர் சொன்னார். “நான் சொன்னது கவிதை” என்று சொன்னபோது அவர்கள் இருவரும் நான் கேலிசெய்கிறேன் என்று நினைத்து ஒருவரோடொருவர் கண் தொட்டுக்கொண்டார்கள். நான் “மெய்யாகவே இது கவிதை” என்றேன் பின்னர் அதை யுவன் சந்திரசேகரிடம் சொன்னபோது அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130069/

மொழியாதது

திற்பரப்பு அருகே ஒரு கயம் முன்பு இருந்தது. ஓர் யானை அதில் விழுந்து செத்ததனால் அதற்கு யானைக்கயம் என்று பெயர்.அக்காலத்தில் அதில் பாய்ந்து மையச்சுழியைச் சென்று தொட்டு கரைமீள்வது ஒரு சவால். மணியன், கோபாலகிருஷ்ணன் எல்லாம் பலமுறை செய்ததை நான் ஒருமுறை முயன்றேன். சுழி நம்மை அதன் கண் நோக்கி சுழற்றி கொண்டுசெல்லும். மையத்தை அடைவதற்குச் சற்று முன்பாக எதிரோட்டத்தில் காலை ஊன்றி உந்தி விளிம்புநோக்கி தாவிவிடவேண்டும். கூடவே மையச்சுழியை கையால் தொடவும் வேண்டும். இதுதான் உத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130017/

எங்குமென நின்றிருப்பது

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ” ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு பழுத்த தென்னையோலை மிக இயல்பாக, ஓசையே இல்லாமல் மரத்திலிருந்து பிரிந்து மிதந்து இறங்கியது. ஆற்றூர் சொன்னார் “முளைக்க வைத்து நீட்டுவதுதான் கஷ்டம்” பலசமயம் கவிஞர்கள் எல்லாவற்றையுமே கவிதையெனக் காண்கிறார்கள். ஆற்றூர், கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் அன்றாடப் பேச்சில் அவ்வகை வரிகள் வந்தபடியே இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129902/

சொட்டும் கணங்கள்

நான்கடவுள் படப்பிடிப்பு நடந்தபோது காசியில் ஒரு சாமியாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எல்லா மொழியும் பேசுவார். ஆங்கிலம் பிரெஞ்சு உட்பட. எங்களுடன் தமிழில் பேசினார். தன் பெயர் ஏதோ பாபா என்றார். சாமியாருக்கு அறுபது எழுபது வயதிருக்கும். சடை, தாடி, கஞ்சாவில் மயங்கிய கண்கள், குழந்தைச்சிரிப்பு எங்களுடன் இருந்த தயாரிப்பு உதவியாளர், சற்று வயதானவர். அவர் “நீங்க எந்த ஊரு?” என்றார். “எல்லாம் நம்ப ஊருதேன்” என்றார் சாமியார். அவர் மேலும் கூர்ந்து “சாமிக்கு தமிழ்நாடா?” என்றார். “தமிழ்நாடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129913/

கவிஞனின் கைக்குறிப்புகள்

  தேவதேவனுக்கு ஓர் இணையதளம்   தேவதேவன் ஒரு முறை சொன்னார், கவிதை என்பது என்ன? கவிஞன் எழுதுவது. உண்மையில் ஒரு தரிசனம் அது. கவிதை எழுத என்ன செய்யவேண்டும்? கவிஞனாக வேண்டும். கவிதை என்பது மொழியில் இல்லை. வடிவில் இல்லை. எந்தவிதமான பயிற்சியிலும் இல்லை. அது கவிஞனின் ஆளுமையில் உள்ளது. அவனிடம் இயல்பாக வெளிப்படுகிறது   தாகூரின் கவிதைகளின் மிகச்சிறந்த வெளிப்பாடுகள் அவருடைய பயணக்கட்டுரைகளில் உள்ளன என்பார்கள். இயல்பாக வெளிப்படும் கவித்துவம் அது. பலசமயம் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129891/

இளங்கனிவும் முதிர்கனிவும்

  தேவதேவனுக்கு ஓர் இணையதளம்   பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கலாம். அற்புதமான இயற்கை அழகுகொண்ட நிலம் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பசுங்காடுகள், புல்வெளிகள், ஊழ்கமரங்கள், நீரோடைகள். நீலப்பச்சை, தளிர்ப்பச்சை, மலர்வண்ணங்கள், பூச்சிகளின் வண்ணங்கள், பறவைக்குரல்கள் என விரிந்த வெளி. நடுவே ஒரு வயலில் ஒருவர் ஏரோட்டிக்கொண்டிருப்பார். மண்வெட்டியால் கிளறிக்கொண்டிருப்பார். ஒரு வகை ஒவ்வாமை வந்து உடலை உலுக்கச் செய்யும்.   அதன் நியாயங்கள் வேறு. அக்கணம் ஒரு தூய விலங்காய் நாம் அச்செயலை மறுப்போம். ஒருமுறை என்னுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129899/

கவிதை, ஆளுமை, பாவனைகள்

கவிதையில் அசடுவழிதல்   அன்புள்ள ஜெ,   உங்கள் விமர்சனத்திற்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். நான் கவிதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்குப்புரிகிற வரையில் அந்த கவிதை ஏன் அசட்டுத்தனம் என நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? அது வழக்கமாக வாசிக்கும் கவிதை போலத்தானே இருக்கிறது?   எஸ்.சதீஷ்குமார்   அன்புள்ள சதீஷ்குமார்,   உங்கள் ஒருவரியிலேயே பதில் இருக்கிறது ‘வழக்கமாக வாசிக்கும்’ வரிகளைப் போல் இருந்தால் அது கவிதையா என்ன? கவிதைக்கு ஒரு ‘பிறிதொன்றிலாத தன்மை’ இருந்தாகவேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129800/

கவிதையில் அசடுவழிதல்

  பாய் பெஸ்டி’களின்  கதை- மனுஷ்ய புத்திரன்   தமிழ்க் கவிதைகள் எப்படியோ என் கவனத்திற்கு வருகின்றன, நேரடியாக அவற்றின் பெருக்கை நான் படிக்க நேர்வதில்லை. ஆனால் விரிந்த தேடல் கொண்ட நண்பர்களால் நாளும் என் கவனத்திற்கு கவிதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. சிறந்த எதையும் நான் தவறவிடுவதில்லை   படிக்கப் படிக்க பொதுவாக உருவாகும் மனநிலை என்பது தமிழ்க் கவிதையின்  எல்லைச்சுருக்கம்தான். மிகக்குறுகிய ஓர் பேசுதளமே அதற்குள்ளது. காமம், இருத்தலின் அசௌகரியம் – அவ்வளவுதான். அதைப்பேசுவதற்காகக் கவிஞன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129774/

சுரங்கப்பாதைக்கு அப்பால்…

  ஒரு கவிஞனை நினைத்துக்கொள்வது   நள்ளிரவில் தனிமையில் தொடர்பே அற்ற ஓரு பாடலினூடாக மறைந்துபோன கவிஞன் ஒருவனை நினைத்துக்கொள்கிறேன் இந்த இசையில் அவன் எப்படி வந்தான்? இது நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்த இன்னொரு இசைக்கலைஞனின் குரல்   அவன் ஒரு நீண்ட குகைக்கு அப்பால் இருந்து  அல்லது முகில்திரைக்கு அப்பால் இருந்து  பாடிக்கொண்டிருக்கிறான் அவன் குரலில்  மது கலந்திருக்கிறது அவ்வப்போது உடைந்து அவ்வப்போது பிசிறடைந்து அவ்வப்போது உயிர்வீச்சு பெற்று சுழன்றுகொண்டிருக்கிறது. அவனும்  பித்துகொண்டவன் துயரம் நிறைந்தவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129714/

சோஃபியாவின் கடைக்கண்

அன்புள்ள ஜெ புத்தகக் கண்காட்சி பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்தக்குறிப்பு என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. இதிலுள்ளது ஓர் உண்மையான உணர்ச்சி. உண்மையிலேயே அறிவியக்கத்துள் இருக்கும் ஒருவரின் உள்ளம் இது * போன வருடம் வாங்கிய படித்த புத்தகங்கள், இந்த வருடம் வாங்கிய புத்தகங்கள் என பலரும் இடும் பட்டியல் தமிழ் அறிவுப்பரப்பு எவ்வளவு பெரியது என்பதை நினைவூட்டுகிறது. அந்தப் பட்டியல்களை நான் கவனமாக சேமித்துக்கொள்கிறேன். இன்னும் நாம் படிக்க விரும்பி படிக்காத புத்தகங்கள் , வாங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129437/

Older posts «