Category Archive: கவிதை

மொழியாதது

திற்பரப்பு அருகே ஒரு கயம் முன்பு இருந்தது. ஓர் யானை அதில் விழுந்து செத்ததனால் அதற்கு யானைக்கயம் என்று பெயர்.அக்காலத்தில் அதில் பாய்ந்து மையச்சுழியைச் சென்று தொட்டு கரைமீள்வது ஒரு சவால். மணியன், கோபாலகிருஷ்ணன் எல்லாம் பலமுறை செய்ததை நான் ஒருமுறை முயன்றேன். சுழி நம்மை அதன் கண் நோக்கி சுழற்றி கொண்டுசெல்லும். மையத்தை அடைவதற்குச் சற்று முன்பாக எதிரோட்டத்தில் காலை ஊன்றி உந்தி விளிம்புநோக்கி தாவிவிடவேண்டும். கூடவே மையச்சுழியை கையால் தொடவும் வேண்டும். இதுதான் உத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130017

எங்குமென நின்றிருப்பது

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ” ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு பழுத்த தென்னையோலை மிக இயல்பாக, ஓசையே இல்லாமல் மரத்திலிருந்து பிரிந்து மிதந்து இறங்கியது. ஆற்றூர் சொன்னார் “முளைக்க வைத்து நீட்டுவதுதான் கஷ்டம்” பலசமயம் கவிஞர்கள் எல்லாவற்றையுமே கவிதையெனக் காண்கிறார்கள். ஆற்றூர், கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் அன்றாடப் பேச்சில் அவ்வகை வரிகள் வந்தபடியே இருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129902

சொட்டும் கணங்கள்

நான்கடவுள் படப்பிடிப்பு நடந்தபோது காசியில் ஒரு சாமியாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எல்லா மொழியும் பேசுவார். ஆங்கிலம் பிரெஞ்சு உட்பட. எங்களுடன் தமிழில் பேசினார். தன் பெயர் ஏதோ பாபா என்றார். சாமியாருக்கு அறுபது எழுபது வயதிருக்கும். சடை, தாடி, கஞ்சாவில் மயங்கிய கண்கள், குழந்தைச்சிரிப்பு எங்களுடன் இருந்த தயாரிப்பு உதவியாளர், சற்று வயதானவர். அவர் “நீங்க எந்த ஊரு?” என்றார். “எல்லாம் நம்ப ஊருதேன்” என்றார் சாமியார். அவர் மேலும் கூர்ந்து “சாமிக்கு தமிழ்நாடா?” என்றார். “தமிழ்நாடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129913

கவிஞனின் கைக்குறிப்புகள்

  தேவதேவனுக்கு ஓர் இணையதளம்   தேவதேவன் ஒரு முறை சொன்னார், கவிதை என்பது என்ன? கவிஞன் எழுதுவது. உண்மையில் ஒரு தரிசனம் அது. கவிதை எழுத என்ன செய்யவேண்டும்? கவிஞனாக வேண்டும். கவிதை என்பது மொழியில் இல்லை. வடிவில் இல்லை. எந்தவிதமான பயிற்சியிலும் இல்லை. அது கவிஞனின் ஆளுமையில் உள்ளது. அவனிடம் இயல்பாக வெளிப்படுகிறது   தாகூரின் கவிதைகளின் மிகச்சிறந்த வெளிப்பாடுகள் அவருடைய பயணக்கட்டுரைகளில் உள்ளன என்பார்கள். இயல்பாக வெளிப்படும் கவித்துவம் அது. பலசமயம் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129891

இளங்கனிவும் முதிர்கனிவும்

  தேவதேவனுக்கு ஓர் இணையதளம்   பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கலாம். அற்புதமான இயற்கை அழகுகொண்ட நிலம் வழியாகச் சென்றுகொண்டிருப்போம். பசுங்காடுகள், புல்வெளிகள், ஊழ்கமரங்கள், நீரோடைகள். நீலப்பச்சை, தளிர்ப்பச்சை, மலர்வண்ணங்கள், பூச்சிகளின் வண்ணங்கள், பறவைக்குரல்கள் என விரிந்த வெளி. நடுவே ஒரு வயலில் ஒருவர் ஏரோட்டிக்கொண்டிருப்பார். மண்வெட்டியால் கிளறிக்கொண்டிருப்பார். ஒரு வகை ஒவ்வாமை வந்து உடலை உலுக்கச் செய்யும்.   அதன் நியாயங்கள் வேறு. அக்கணம் ஒரு தூய விலங்காய் நாம் அச்செயலை மறுப்போம். ஒருமுறை என்னுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129899

கவிதை, ஆளுமை, பாவனைகள்

கவிதையில் அசடுவழிதல்   அன்புள்ள ஜெ,   உங்கள் விமர்சனத்திற்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். நான் கவிதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்குப்புரிகிற வரையில் அந்த கவிதை ஏன் அசட்டுத்தனம் என நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? அது வழக்கமாக வாசிக்கும் கவிதை போலத்தானே இருக்கிறது?   எஸ்.சதீஷ்குமார்   அன்புள்ள சதீஷ்குமார்,   உங்கள் ஒருவரியிலேயே பதில் இருக்கிறது ‘வழக்கமாக வாசிக்கும்’ வரிகளைப் போல் இருந்தால் அது கவிதையா என்ன? கவிதைக்கு ஒரு ‘பிறிதொன்றிலாத தன்மை’ இருந்தாகவேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129800

கவிதையில் அசடுவழிதல்

  பாய் பெஸ்டி’களின்  கதை- மனுஷ்ய புத்திரன்   தமிழ்க் கவிதைகள் எப்படியோ என் கவனத்திற்கு வருகின்றன, நேரடியாக அவற்றின் பெருக்கை நான் படிக்க நேர்வதில்லை. ஆனால் விரிந்த தேடல் கொண்ட நண்பர்களால் நாளும் என் கவனத்திற்கு கவிதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. சிறந்த எதையும் நான் தவறவிடுவதில்லை   படிக்கப் படிக்க பொதுவாக உருவாகும் மனநிலை என்பது தமிழ்க் கவிதையின்  எல்லைச்சுருக்கம்தான். மிகக்குறுகிய ஓர் பேசுதளமே அதற்குள்ளது. காமம், இருத்தலின் அசௌகரியம் – அவ்வளவுதான். அதைப்பேசுவதற்காகக் கவிஞன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129774

யாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்? -கே.ஜி.சங்கரப்பிள்ளை

கவிதை பற்றிய கட்டுரை: மொழியாக்கம் அழகிய மணவாளன்   எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அப்பா அந்த சைக்கிளில்தான் ஏழாம்மைல் என்ற ஊரிலிருக்கும்  ஆரம்ப பள்ளிக்கு ஆசிரியராக போனார். வயல், கடம்பநாட்டு சந்தை, சவறையில் உள்ள அம்மாவின் வீடு, சாஸ்தாம்கோட்டையிலிருக்கும் சார்பதிவாளர் அலுவலகம் , ஏ.ஈ.ஓ ஆபீஸ் என அனைத்திற்கும் சைக்கிள் தான். அடூரில் இருக்கும் வங்கிலிருந்து பணயம் வைத்ததை மீட்டு வந்தது அந்த சைக்கிளில்தான். உடல் நலமில்லாத என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128767

பலாக்கொட்டைத் தத்துவம்- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

கே.ஜி.சங்கரப்பிள்ளை எனக்கு 1986 முதல் அறிமுகம். சுந்தர ராமசாமி ஆசான் விருது பெற்றதை ஒட்டி ஒரு பாராட்டுக்கூட்டம் திரிச்சூரில் ஏற்பாடாகியது. அதை நடத்தியவர்களில் ஒருவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை.. அன்று அவர் முதன்மையான சமூகக் களப்பணியாளர். மாவோயிச சிந்தனைகளில் ஈடுபாடுள்ளவர். அவர்களின் இதழ்களில் முதன்மையாக எழுதியவர். ஆனால் ஆற்றூர் ரவிவர்மா போன்ற கவிஞர்களுடன் ஆக்கபூர்வமான உறவில் இருந்தவர்.   மேடையில் சுந்தர ராமசாமியின் தனுவச்சபுரம் என்ற கவிதையை கே.ஜி.சங்கரப்பிள்ளை. மிகவும் உணர்ச்சிகரமாக பாராட்டிப்பேசினார். “சரி இந்த ஊரென்ன, இப்போது எல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128654

கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் கவிதைகள் உங்கள் தளத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது – கொஞ்சம் அரசியல் பேசி தன்னை தானே கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் ” நெஞ்சோடு கிளத்தல் வகையிலான கவிதைகள் இவை அனைத்தும்.     முழுதாக வசித்தாலும் துண்டாக நாலைந்து வரி வாசித்தாலும் இக்கவிதைகள் தரும் அனுபவங்கள் மிகவும் புதியவை,மனம் ஏற்கனவே அறிந்ததை சரியாக சுட்டும் வார்த்தை அடுக்குகள் – என்ன ஒரு பகடி – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128916

Older posts «