Category Archive: கல்வி

கல்வியில் இந்திய மெய்யியல்-கடிதம்

அன்புள்ள ஜெ, அழுத்தமான, தர்க்கபூர்வமான கட்டுரை. நரேந்திர மோதி தலைமையிலான புதிய மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் குறித்து, “அவர்கள் எதை முன்வைத்து போராடினார்களோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதே முறையானது. அதற்கான உரிமை மட்டுமல்ல கடமையும் அவர்களுக்குள்ளது” என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியான, ஜனநாயக பூர்வமான கருத்து. // இன்றைய அரசியல் சூழலில் வெறும் சம்பிரதாய மதநூல்களை அப்படியே பாடத்தில் புகுத்தி சில பழம்பஞ்சாங்கங்களை அதற்கு காவலாக நியமிப்பது மட்டுமே நிகழுமென நான் எதிர்பார்க்கிறேன் // …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56457

பொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்

அன்பிற்கினிய ஆசிரியருக்கு, கல்வி குறித்த என் கட்டுரையை உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சமுதாயத்தில் நாம் எதிர்நோக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றின் விதையாகவே நான் கல்விக்கூடங்களை பார்க்கின்றேன், பல நேரங்களில் ஒரு தவறான முன்னுதாரனமாக. பெருமுதலாளிகள், பினாமியின் வாயிலாக கல்வியில் முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோரது அடிப்படை நோக்கம் என்பது எல்லா தரப்பு மாணவர்களையும் தங்களின் கல்விக்கூடங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதே ஆகும் இவர்கள் மாணவ நுகர்வோர்களை இவ்வாறாக தர ஆய்வு செய்து வைத்திருக்கின்றனர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56404

கல்வி – இரு கட்டுரைகள்

என் மகளை ஆங்கில இலக்கியப்படிப்புக்குச் சேர்த்திருக்கிறேன். மகன் சூழியல் படித்தான். ஆகவே எப்போதுமே நான் பொறியியல் கல்வியைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால் எப்போதும் அதைப்பற்றி கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். நண்பர்களின் குழந்தைகளுக்காக. நண்பர்களுக்காக. இத்துறையின் சிக்கல்கள் ஒரு சாமானியனாக எனக்கு புரிவதில்லை என்பதே உண்மை. சமீபத்தில் வாசித்த இரு கட்டுரைகள் இருவேறு கோணங்களில் ஒன்றையே சொல்கின்றன. கல்விவணிகத்தின் முகங்கள். இது கல்வி அல்ல, வேலைக்கான பயிற்சி. ஆனால் உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இங்கே தேவைப்படுவது இதுதான். கல்விக்கான தேவையை உணரும் மாணவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56160

கல்விக் களைகள்

இன்று காலை [12-5-2014] தினத்தந்தியில் ஒரு செய்தியை வாசித்தேன். பின்னணி இதுதான். தமிழகத்தில குமரிமாவட்டத்துக்கும் நெல்லைக்கும் கல்வியில் முதன்மையான இடம் இருந்த ஒரு காலகட்டம் இருந்தது. சென்ற பலவருடங்களாக அதில் சீரான சரிவு உள்ளது. அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது புகழ்பெற்ற கிறித்தவக் கல்விநிறுவனங்களின் தரவீழ்ச்சி. உள்ளரசியல், ஆசிரியர் நியமன ஊழல் ஆகியவற்றால் அவை சீரழிந்துகொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் இங்குள்ள வீரியம்மிக்க தொழிற்சங்க அரசியலின் பாதுகாப்பு காரணமாகவும் உபதொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் காரணமாகவும் நம்பமுடியாத அளவுக்கு பணவரவுள்ள டியூஷன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55147

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் பெருமைப்படக்கூடிய இலக்கியப் படைப்புகள் ஏதும் குறிப்பிடும்படியாக அமையவில்லையே ஏன்?புதிதாக இலக்கியம் படைக்கவெனக் கிளம்புபவர்களின் படைப்புகள் ஒரு தடவை வாசிப்புக்கேனும் தீனிகொடுப்பதாக இல்லை. சு.ரா, அசோகமித்திரன், ஜெமோ, எஸ்.ரா, முத்துலிங்கம் என்று ஏற்கனவே இலக்கியவாதிகளாக அறியப்பெற்றவர்கள்தான் ஆங்காங்கே செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதைத் தவிர்த்து, எதிர்கால நட்சத்திரங்கள் அனைவரும் இணையத்தில் வாதப்பிரதிவாதங்களையே தினசரி கடமைகளாக கொண்டு செயலாற்றிவருகின்றனர். ஏன் சில சமயங்களில் உங்கள் விடயத்திலும் அது நடந்துவிடுகிறது. ஆக்கபூர்வமான படைப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38776

கல்வியும் மாற்றுக்கல்வியும் -சங்கீதா ஸ்ரீராம்

“ஆனா, இப்போ இதெல்லாம் இல்லாம சில பள்ளிக்கூடங்கள் வந்திருக்காமே! அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் பரீட்சையே இல்லையாம். விளையாட்டு மூலமாவே பாடங்கள சொல்லித் தராங்களாம்! இந்த மாதிரி எதாவது ஒரு பள்ளிக்கூடத்துல உங்கக் குழந்தய சேக்கலாமே?” என்பதுதான் அது. எனது இந்த உரை அவர்களுக்கான பதிலாக அமையும். மூலை முடுக்கிலெல்லாம் முளைத்திருக்கும், குழந்தைகளைக் கைதிகளைப் போல அடைத்து வைக்கும் பள்ளிகளைப் பற்றிய விமர்சனத்தை நான் முன்வைக்கப்போவதில்லை. அது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே. மாற்றுப் பள்ளிகள் என்று சொல்லிக்கொண்டு இயங்கிவரும் பள்ளிகளைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38817

வாசலில் நின்றுகொண்டு…

அன்புள்ளஜெ, நான் சோ. இளமுகில். கற்றலையும் கற்பித்தலையும் வாழ்வாகக் கொண்ட அப்பாவுக்கும், ஆசைகளும் அன்பும் நிறைந்த அம்மாவுக்கும் பிறந்தவன். இப்போது குடிசார் பொறியியல் இளநிலை பட்டம் பெற்று முதுநிலைக் கல்வி பயிலக் காத்திருக்கிறேன். அம்மாவுக்கு உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானவை. உங்களது “இன்றைய காந்தி” என்னை சில தினங்களாக தூங்கவிடாமல் கற்பனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனக்குப் பொதுவாழ்வில் ஈடுபடவேண்டும் என்பதே நிம்மதியளிக்கும் ஒன்று. இது என் அப்பா எனக்கு ஊட்டியது. இயல்பாகவே பிறரின் மகிழ்ச்சியில் என் மகிழ்ச்சியைக் காண்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35887

ஆய்வும் மேற்கும்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு: சுப்ரியாவுக்கு நீங்கள் அளித்த பதிலில் ”மேலைநாட்டுப் பல்கலை ஆய்வுலகம் காட்டும் ஜனநாயக முகமும் , புறவயமான அறிவியக்கம் மீதான பற்றும் போலியானது” என்று குறிப்பிட்டீர்கள். மேலும், ”அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ சமூகவியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்பவர்கள்,செய்து மீண்டவர்கள் பெரும்பாலும் அனைவருமே இந்தக் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு தங்கள் மூளையை விற்ற அடிமைகள்தான்” என்றும் சொல்லியுள்ளீர்கள். அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில், குறிப்பாகக் கலையின் வரலாற்றுத்துறையில் (History of Art) இந்தியக்கலைகள் குறித்து, இந்திய நாகரிகம் குறித்தும் பெருமதிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35655

சோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் பெற்றோரும் கல்வியும் கேள்வி-பதிலைப் படித்தேன். கல்விமுறைகளை இருவகைகளாக வேறுபடுத்தி ஆளுமை வளர்ச்சி சார்ந்த கல்வி முறை பற்றிப் பேசுகையில் அதை மேம்படுத்த வழிமுறை தருவீர்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். லட்சத்தில் இருவர் என்ற விகிதத்தில்தான் கலை ஆளுமை சார்ந்த கல்வி தேவைப்படுகிறது; அதற்காகத் தற்போதைய கல்வி முறையை மாற்றவேண்டாம் என்ற விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த மட்டில் கல்வியைத் தன்னிறைவுக்கான கல்வி, மனித வளர்ச்சிக்கான கல்வி என்று பிரிக்கலாம். தன்னிறைவுக்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36619

கல்வியும் பெற்றோரும்

அன்பின் அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு, நெடுநாட்களாக எழுத நினைத்துள்ள ஒரு விஷயம் இது. கல்வி என்பது கற்றல் மற்றும் அறிவு வளர்ச்சிக்கான ஒரு விஷயம் – அதன் உபபலனாகக் கிடைப்பவை – வேலை மற்றும் மற்ற லௌகீக ஆதாயங்கள். அதே போல வேலை, பணம் இரண்டுமே இந்த உலகியல் வாழ்வை வாழ உதவும் சாதனங்கள் மட்டுமே. அவை நம் ஆளுமையை, ஆன்ம உணர்வை வளர்த்து மனதிருப்தியை தரும் விசயங்களைப் (ஒரு புத்தகத்தை வாங்க, கலையை ரசிக்க, உலகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36512

Older posts «

» Newer posts