Category Archive: கலை

திருவிழாவில் வாழ்தல்

பல ஆண்டுகளுக்கு முன் கோணங்கியின் நண்பரான ஒரு கிழவரைச் சந்தித்தேன். அவர் கோயில்பட்டி இனிப்பு செய்பவர். ஓய்வுபெற்றுவிட்டார். பிள்ளைகள் ‘செட்டில்’ ஆனபின் திருவிழா விற்பனைக்குச் செல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். காலில் வாதம் வேறு. ஆனால் வாழ்க்கையே அழிந்துவிட்டது, இனி சாவுதான் கதி என சோர்வுடன் சொன்னார். அவர் சொன்ன காரணம் வியப்புக்குரியதாக இருந்தது. தன் வாழ்க்கை முழுக்க அவர் திருவிழாக்களில்தான் கழித்திருக்கிறார். ஒரு விழா முடிந்ததும் அப்படியே அடுத்த விழா.  ‘திருவிழாவிலே வாழணும்னாக்க குடுத்துல்லா வச்சிருக்கணும்’ என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127075/

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…4

  கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி] இன்று தமிழ்ச்சூழலில் கலைப்படங்கள் உருவாவதற்கு இருக்கும் முதன்மையான அகவயமான தடைகளையே குறிப்பிட்டேன். கலைப்படங்களுக்குரிய ரசனைச்சூழலே இல்லை. அதை உருவாக்காமல் படங்களை உருவாக்கி பயனில்லை. இன்று தமிழில் இடைநிலைப் படங்கள் மட்டுமே சற்றேனும் கொண்டாடப்படுகின்றன. அல்லது தரமான வணிகப்படங்கள்.  கலைப்படங்கள் இடைநிலைப்படங்கள் வணிகப்படங்கள் என்னும் வேறுபாடு நிலைநிறுத்தப்படவேண்டும்  ஒவ்வொரு வகைமைக்கும் உரிய ரசனைமுறை உருவாக்கப்படவேண்டும். அதற்குரிய ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127096/

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…3

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2 கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி] இங்கே சினிமா குறித்த பேச்சுக்களில் சில வகையான மொண்ணைத்தனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும். அ.சினிமா என்பது ஒரு கலைவடிவம். முதன்மையாக அதன் கலைத்தன்மையே ரசனை மற்றும் மதிப்பீட்டில் கருத்தில்கொள்ளப்படவேண்டும். மாறாக சினிமாவில் ஏற்கத்தக்க அல்லது தேவையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தால் அதை நல்ல சினிமா என்று சொல்வது அக்கலைக்கே எதிரான பார்வை. ஆனால் இங்கே ஓங்கியிருப்பது அதுவே. சாதகமான அரசியல்நிலைபாடு கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127027/

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…2

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…1 [முன் தொடர்ச்சி] எந்த கலைரசனையிலும் அக்கலையை வகைபிரித்து அழகியல் ரீதியாக வரையறை செய்து அதற்கேற்ப உளநிலைகளை உருவாக்கிக்கொள்வதும் அதற்குரிய தொடர்பயிற்சியை மேற்கொள்வதும் இன்றியமையாதது. இலக்கியத்துறையில் இந்நோக்கத்துடனேயே வணிக எழுத்து – இலக்கியம் என்னும் பிரிவினை உருவாக்கப்பட்டது. இலக்கியத்திலேயே செவ்வியல், கற்பனாவாதம், யதார்த்தவாதம், இயல்புவாதம் போன்ற அழகியல் வேறுபாடுகள் உருவாக்கப்பட்டன. நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற காலகட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றுக்குள் பல்வேறு வடிவத்தனித்தன்மைகள் வரையறை செய்யப்பட்டன. இவற்றை அறிந்துகொள்ளுதல் ரசனைக்கு மிகமிக இன்றியமையாதது. உதாரணமாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127020/

கலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…

ஜெயமோகன் அவர்களுக்கு தங்களின் சினிமா கட்டுரைகளை அனேகமாக அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.தியோடர் பாஸ்கரின் தமிழ் சினிமா வரலாறு, வளர்ச்சி சம்பந்தமான நூல்களையும் வாசித்துள்ளேன். சொல்லப்போனால் தமிழ் வணிக சினிமாவின் போக்குகளான புதியன எதையும் சொல்லாமல் பொது புத்தியின் ஆழத்தில் படிந்திருக்கும், வெளிப்படுத்தும் ரசனையை மட்டுமே முன்னிறுத்துவது (சங்கர் படத்தில் வரும் லஞ்சம், ஊழல், அதிகாரிகள் மட்டுமே திருந்தவேண்டும், சில சமயம் மக்களும் திருந்தவேண்டும், சர்கார் படத்தில் வந்த இலவச காழ்ப்பு, அமெரிக்க கனவு, சமீப காலமாக வந்துக்கொண்டிருக்கும் இயற்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126987/

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 2008 இனிய ஜெயம் நேற்று நாட்யாஞ்சலி. கடந்த நான்கு வருடங்களாக,நாட்யாஞ்சலி சுதி குறைந்து கொண்டே போகிறது. உள்ளே நாட்யாஞ்சலி நிர்வாகத்தில், கொள்கை வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு முற்றி, நிர்வாகம் இரண்டாக கிழிந்து,ஒன்று கோவிலுக்குள்ளும்,மற்றொன்று ராஜ வீதியிலும் என இரு வேறு தரப்பாக இயங்கத் துவங்கி இருக்கிறது. கோவிலுக்குள் இருப்பது, எதோ தீட்சிதர்கள்  நாட்யாஞ்சலி டிரஸ்ட்.வெளியே உள்ள கோஷ்டியைக் காட்டிலும்,வெளுத்து வாங்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். விளைவு. இந்த வருடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119243/

திருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்

ஜெ அவர்களுக்கு வணக்கம்.. கடந்த இரு நாட்கள் உங்கள் ஊர்ப்பக்கம் பயணம்.. குமரி மாவட்டத்தின் பச்சையம் கண்களுக்குள் ஊடுருவி நிற்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மனதில் படபடக்கும். மழை மிரட்டினாலும், திருவட்டாறு சென்றிருந்தேன். உங்கள் வார்த்தைகளில் அது சித்திரமாய் இருந்தாலும், அத்தனை உயரமான கோவில் வேறு இருக்காது என்றே தோன்றுகிறது. நீளமான பிரகாரம் முடிவற்று விரிகிறது. சுத்தமான பராமரிப்பில் இருந்தது மேலும் அழகூட்டியது. மன்மதன் சிறுகதையில் வந்த கோவில் கிருஷ்ணாபுரம் என்று என் சிற்றறிவுக்கு புலப்பட்டாலும், அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115465/

கலைஞனின் தொடுகை

மலையாள இயக்குநர் பரதனுக்கும் அவருடைய திரைக்கதையாசிரியர் ஜான் பால் அவர்களுக்கும் இடையேயான உறவு முழு வாழ்நாளும் நீண்ட ஒன்று. பூசல்களும் பேரன்புமாக. மிக அபூர்வமாகவே அத்தகைய உறவுகள் அமைகின்றன. பரதன் ஜான் பால் மாஸ்டரைவிட நான்கு வயது மூத்தவர். ஜான் பால் அவர்களை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். நாங்கள் இணைந்து ஒரு படம் எழுதுவதாக இருந்தது. நான் சினிமாவில் மட்டுமல்ல இதுவரையிலான தனிவாழ்க்கையில்கூட நேரில் சந்திக்கநேர்ந்த மனிதர்களில் ஜான் பால் மாஸ்டர் மிக மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97626/

பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

நேற்று முன்தினம் [2-4-2017] மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய தோல்பாவைநிழற்கூத்து குறித்த அனைத்துச்செய்திகளும் அடங்கிய ஆய்வுநூல் இது அ.கா.பெருமாள் அவர்களைப்பார்த்து சிலகாலம் ஆகிறது. சென்னையிலும் நாகர்கோயிலிலுமாக மாறிமாறி இருக்கிறர். சற்று களைத்திருக்கிறார். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் குமரிமாவட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றிச் செய்திசேகரித்தவர். இன்று சொந்தமாக வண்டி ஓட்டுவதில்லை. ஆய்வுப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றார். மறைந்த தமிழறிஞர்களைப்பற்றி அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97078/

பாறை ஓவியங்களுக்காக…

இனிய ஜெயம், நேற்று ஒரு பன்னிரண்டு பேர் கூடிய நமது குழும நண்பர்களுடன் ஒரு சிறிய பயணம். முதல் காரில் நெல்லை வழக்கறிஞர் அவரது நண்பர் மற்றும் மயிலாடுதுறை பிரபு, யோகிஸ்வரன் ஆகியோருடன் வந்தார். திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே காலை உணவு. நெல்லை வக்கீல் சக்தி கிருஷ்ணன் நடத்தும் பல தொழில்களில் ஒன்று பார்மசி. பார்மசி ஊழியை சம்பளம் கேட்டு தொலைபேசினாள். [பத்தாம் தேதி தரவேண்டியது இன்று இருபத்தி ஒன்பது] வக்கீல் கவலையே படாதம்மா ஓனர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97070/

Older posts «