Category Archive: கலை

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 2008 இனிய ஜெயம் நேற்று நாட்யாஞ்சலி. கடந்த நான்கு வருடங்களாக,நாட்யாஞ்சலி சுதி குறைந்து கொண்டே போகிறது. உள்ளே நாட்யாஞ்சலி நிர்வாகத்தில், கொள்கை வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு முற்றி, நிர்வாகம் இரண்டாக கிழிந்து,ஒன்று கோவிலுக்குள்ளும்,மற்றொன்று ராஜ வீதியிலும் என இரு வேறு தரப்பாக இயங்கத் துவங்கி இருக்கிறது. கோவிலுக்குள் இருப்பது, எதோ தீட்சிதர்கள்  நாட்யாஞ்சலி டிரஸ்ட்.வெளியே உள்ள கோஷ்டியைக் காட்டிலும்,வெளுத்து வாங்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். விளைவு. இந்த வருடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119243

திருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்

ஜெ அவர்களுக்கு வணக்கம்.. கடந்த இரு நாட்கள் உங்கள் ஊர்ப்பக்கம் பயணம்.. குமரி மாவட்டத்தின் பச்சையம் கண்களுக்குள் ஊடுருவி நிற்கிறது. இன்னும் சில நாட்களுக்கு மனதில் படபடக்கும். மழை மிரட்டினாலும், திருவட்டாறு சென்றிருந்தேன். உங்கள் வார்த்தைகளில் அது சித்திரமாய் இருந்தாலும், அத்தனை உயரமான கோவில் வேறு இருக்காது என்றே தோன்றுகிறது. நீளமான பிரகாரம் முடிவற்று விரிகிறது. சுத்தமான பராமரிப்பில் இருந்தது மேலும் அழகூட்டியது. மன்மதன் சிறுகதையில் வந்த கோவில் கிருஷ்ணாபுரம் என்று என் சிற்றறிவுக்கு புலப்பட்டாலும், அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115465

கலைஞனின் தொடுகை

மலையாள இயக்குநர் பரதனுக்கும் அவருடைய திரைக்கதையாசிரியர் ஜான் பால் அவர்களுக்கும் இடையேயான உறவு முழு வாழ்நாளும் நீண்ட ஒன்று. பூசல்களும் பேரன்புமாக. மிக அபூர்வமாகவே அத்தகைய உறவுகள் அமைகின்றன. பரதன் ஜான் பால் மாஸ்டரைவிட நான்கு வயது மூத்தவர். ஜான் பால் அவர்களை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். நாங்கள் இணைந்து ஒரு படம் எழுதுவதாக இருந்தது. நான் சினிமாவில் மட்டுமல்ல இதுவரையிலான தனிவாழ்க்கையில்கூட நேரில் சந்திக்கநேர்ந்த மனிதர்களில் ஜான் பால் மாஸ்டர் மிக மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97626

பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

நேற்று முன்தினம் [2-4-2017] மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய தோல்பாவைநிழற்கூத்து குறித்த அனைத்துச்செய்திகளும் அடங்கிய ஆய்வுநூல் இது அ.கா.பெருமாள் அவர்களைப்பார்த்து சிலகாலம் ஆகிறது. சென்னையிலும் நாகர்கோயிலிலுமாக மாறிமாறி இருக்கிறர். சற்று களைத்திருக்கிறார். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் குமரிமாவட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றிச் செய்திசேகரித்தவர். இன்று சொந்தமாக வண்டி ஓட்டுவதில்லை. ஆய்வுப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றார். மறைந்த தமிழறிஞர்களைப்பற்றி அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97078

பாறை ஓவியங்களுக்காக…

இனிய ஜெயம், நேற்று ஒரு பன்னிரண்டு பேர் கூடிய நமது குழும நண்பர்களுடன் ஒரு சிறிய பயணம். முதல் காரில் நெல்லை வழக்கறிஞர் அவரது நண்பர் மற்றும் மயிலாடுதுறை பிரபு, யோகிஸ்வரன் ஆகியோருடன் வந்தார். திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே காலை உணவு. நெல்லை வக்கீல் சக்தி கிருஷ்ணன் நடத்தும் பல தொழில்களில் ஒன்று பார்மசி. பார்மசி ஊழியை சம்பளம் கேட்டு தொலைபேசினாள். [பத்தாம் தேதி தரவேண்டியது இன்று இருபத்தி ஒன்பது] வக்கீல் கவலையே படாதம்மா ஓனர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97070

கருத்துக்கெடுபிடி

  சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திரிச்சூர் லலிதகலா அக்காதமி தலைவராக இருந்தபோது அவருடைய அலுவலக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். நடக்கவிருந்த சர்வதேச நாடகவிழாவுக்காக வந்திருந்த சிலர் உள்ளே வந்தனர். என்னை எழுத்தாளர் என அறிமுகம் செய்துகொண்டதும் இயல்பாகப் பேச்சு ஆரம்பமாகியது. ஒருவர் பாகிஸ்தான் நாடகாசிரியர். இன்னொருவர் துர்க்மேனிஸ்தான்காரர். ஒருவர் ஈரான். இன்னொருவர் பங்களாதேஷ். அவர்கள் ஒன்றாகவே உள்ளே வந்தனர். அனைவருமே இஸ்லாமியர். ஆனால் வெவ்வேறு உள்மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள். நாடகத்தை சென்ஸார் செய்வதைப்பற்றிப் பேச ஆரம்பித்தபோது ஒவ்வொருவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96661

விலக்கப்பட்டார்களா?

அன்புள்ள ஜெயமோகன், இன்னமும் சில நாட்களில் சென்னை இசை விழா நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். தமிழ் இசைப் பற்றாளர்களுக்கு சாமி வந்து விடும். அதில் புக விரும்பவில்லை. ஆனால் வெகு நாட்களாக கேட்க நினைத்த ஒரு விஷயம். கர்நாடக இசை உலகில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். அதனை ஒடுக்க வேண்டும் என்றெல்லாம் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் பரப்புரை செய்து வருகின்றனர். எனக்குத் தெரிந்த வரை, இந்த கர்நாடக இசை உலகில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்பதை விட, பிராமணர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92801

வழிகாட்டிகள்

    எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது எனது தந்தை வழிப்பாட்டி லக்ஷ்மிக்குட்டி அம்மா திருவட்டாறு ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்குள்ள முகமண்டபத்தின் சிற்பங்கள் ஒவ்வொன்றையாக சுட்டிக் காட்டி அவற்றில் எதையெல்லாம் நான் ரசிக்கவேண்டுமென்று கற்பித்ததை நினைவு கூர்கிறேன். ஒற்றை விரல்காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘இறை ஒன்றே’ என்றும் மறுபக்கம் உள்ளே நான்குவிரல் காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘அது இங்குள்ளது’ என்றும் சொல்கிறார் என்று அவர் சொன்னது அப்போதிருந்த அவர்களுடைய முகபாவனையோடு இன்றும் நினைவில் இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91674

தலைகொடுத்தல்

  உத்தர ராமாயணத்தை ராவணோத்பவம் என்னும் பேரில் கதகளியில் ஆடுவார்கள். அதில் ஒரு காட்சி. ராவணன் பிரம்மனிடம் வரம்பெறுவதற்காகத் தவம் செய்கிறான். அவன் குலம் அழிந்து, தம்பியருடன் பாதாளத்தில் ஒளிந்திருக்கும் தருணம் அது. அசுரர்களின் இழந்தமேன்மையை அடையவேண்டும் என்பதே அவனுடைய இலட்சியம். அதற்காக எதையும் செய்யும் இடத்தில் இருக்கிறான். அத்தவத்தின் இறுதியில் அவன் தன் பத்து தலைகளையும் கிள்ளி வேள்விநெருப்பில் இடுகிறான். பத்தாவதுதலையையும் கிள்ளும்போதுதான் இறைவன் தோன்றுகிறார் கதகளியின் நுணுக்கமான மனோதர்ம வெளிப்பாடு வழியாக அதை அகங்காரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88512

செவ்வியல்கலையும் நவீனக்கலையும்

அன்புடன் ஆசிரியருக்கு கலைக்கணம் வாசித்தேன்  அந்த தெய்வக்கணம் எனக்கு  வாய்க்கவில்லையே என்ற ஆற்றாமையே முதலில்  எழுந்தது. உங்கள்  கண்கள்  வழியாக  நானும்  கதகளியை கர்ணனை குந்தியை கண்டு விட்டிருந்தேன். பிரித்துக்  கொட்டித் தேடினால்  என்னுள்  நம் மரபின்  கூறுகள்  எதுவும்  மிஞ்சவில்லை என்ற ஏக்கமே மேலிடுகிறது. பதின்ம  வயதிலேயே  நீங்கள்  நாட்டார்  ஆய்வுகளை  மேற்கொள்ளத் தொடங்கி விட்டீர்கள். அந்தக்  கண்ணீரின்  பெருமிதத்திற்கு பின்னிருப்பது கடும்  உழைப்பு. திரு. வேதசகாயகுமார்  அவர்கள்  காடு நாவலின்  முன்னுரையில்  உங்களுள் மரபின்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87800

Older posts «