Category Archive: கருத்துரிமை

கருத்துரிமையும் இடதுசாரிகளும்

  ஜெயமோகன் அவர்களுக்கு   திரு எஸ்.பி.சொக்கலிங்கம் வழக்கறிஞர் அவர்கள் எஸ்குருமூர்த்திக்கு எழுதியிருக்கும் கடிதம் இது. * திரு. குருமூர்த்தி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ————————————————————————— ஆண்டாள் ஒரு வேசி. பெரியாழ்வாரும் தான் என்று ஒரு புதிய பார்வையில் தோழர் டேனியல் செல்வராஜ் ‘நோன்பு’ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். விஷமத்தனமான இச்சிறுகதையின் நோக்கம் மரபுவழி வந்த பண்பாட்டு நியதிகளை இழிவுபடுத்துவதாகும். ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் – ஸ்ரீ வல்லப தேவன் ஆகிய மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88954

ஊடகங்களின் கள்ள மெளனம்

அன்புள்ள அண்ணா, சமீபத்தில் தன் முக நூல் பக்கத்தில் மார்க்கண்டேய கட்ஜி, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ஹெச் எல் தத்து பெருமளவில் வாங்கிக்குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றிய 100 பக்க ஆதாரங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு அனுப்பி அதை உறுதி செய்து கொண்டு உண்மை இருப்பின் வெளியிட கோரி இருந்தார். இதை தன் முக நூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். (https://www.facebook.com/justicekatju/posts/969434869763726?fref=nf&pnref=story)ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் வாயை திறக்க வில்லை.(http://www.thenewsminute.com/article/media-scared-investigating-chief-justice-dattus-assets-asks-katju). ஊடகங்களில் ஊழலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75414

புலியூர் முருகேசனின் புனைவுச்சுதந்திரம்

எழுத்தாளர் புலியூர் முருகேசன் (இதுவரை நான் அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை) அவர்களுக்கு ஆதரவான ஜெவின் பதிவைக் கண்டேன். பொதுவாக நானும் அவ்வாறே எண்ணுவேன். ஆனால் அவர் தன் புத்தகத்திற்கான முன்னுரையில் இப்படிக் கூறியிருக்கிறார். “கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் என் மேல் துயரம் கவியச் செய்தவர்களையும், என்னை ஒரு நூறு முறை தற்கொலைக்குத் தூண்டியவர்களையும், அவர்கள் வாழும் காலத்திலேயே எழுதிக் காட்டுவதுதான் சரியானதாக இருக்கும் என்பதனாலேயே “புனைவற்ற கதைகளாக” முன் வைத்திருக்கிறேன்.” ஜெவின் பதிவில் உள்ள மற்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72271

புலியூர் முருகேசன்

ஊர் திரும்பியபின்னர்தான் புலியூர் முருகேசன் அவர் எழுதிய கதைக்காகத் தாக்கப்பட்டதை அறிந்தேன். ஒருவகை கொந்தளிப்பும் பின்னர் ஆற்றாமையும்தான் ஏற்பட்டது. இனி சாதியவாதிகள் கிளம்பி எழுத்தாளர்களுக்குப் பாடம் எடுக்கத் தொடங்குவரகள் என எதிர்பார்க்கலாம். மீண்டும் ஒரே கதைதான். இலக்கியத்தில் சமூகம் பற்றி எழுதாதே. எழுதினால் மனம்புண்படுகிறது. ஆகவே ‘யார் மனதையும் புண்படுத்தாமல்’ எழுது. அது ரமணிசந்திரன் போல ‘எல்லார் மனதையும் குளிர்விப்பதாக’ இருந்தால் சாலவும் நன்று ஒருவகையில் இதுவும் நல்லதே. தமிழ்ச்சமூகம் ‘சாதியற்ற’ முற்போக்கு சமூகமாக ஆகிவருகிறது என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72125

திருச்செங்கோடு

கருத்துரிமை இருக்கவேண்டும், ஆனால் அது எவர் மனதையும் புண்படுத்தாமல் இருக்கவேண்டும் என்கிறார்கள். உலகில் எங்கும் அப்படி ஒரு கருத்து இருக்க முடியாது. கருத்துக்கள் என்பவை எப்போதுமே மாற்றுக்கருத்துக்களை உருவாக்கக் கூடியவை. மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து மட்டுமே அவற்றை எதிர்க்கவேண்டும் எழுத்தாளன் சமூகத்தின் மீதான விமர்சனத்தால்தான் அவன் எழுதவே ஆரம்பிக்கிறான். அதைச் சொல்லக்கூடாது, மனம் புண்படுகிறது என்பதைப்போல அறியாமை அல்லது திமிர் வேறேதும் இல்லை. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என தமிழின் அனைத்து எழுத்தாளர்களும் கடுமையான சமூக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69674

பெருமாள் முருகன் -கடிதம்

எந்த ஒரு எழுத்தாளருக்கும் இது போல நிகழ்வது வருத்தத்துக்குரிய ஒரே விஷயமே. தன்னை தானே விமர்சித்துக் கொள்ளாத சமுகம் தேங்கி அழிந்து போகும். தமிழகம் அதன் பயணத்தை தொடங்கி வெகுநாட்களாகி விட்டன. வந்தியத்தேவன் என்ற ஒருவன் வாழ்ந்தான் அவன் வீர சாகசங்கள் புரிந்து சோழ நாட்டை காப்பாற்றினான் என்று நம்பும் சமூகம் இது (so called வரலாற்றாய்வாளர்கள் உட்பட). இவர்களிடம் நீங்கள் இது கதை இதை கற்பனையாக பார்க்க வேண்டும் என்றால் எடுபடாது. கும்பல் அரசியலை யாராலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69648

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக

பெருமாள் முருகன் அவரது நூல்களை திரும்பப்பெற்றுக்கொண்டுவிட்டார் என்றும் எழுத்திலிருந்தே விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் என்றும் செய்தி வந்திருக்கிறது. இந்த நாளைப்போல எழுத்தாளனாக வருத்தமளிக்கும் ஒரு நாள் சமீபத்தில் நிகழ்ந்ததில்லை வெறும் கண்டனங்கள், வருத்தங்களுக்கு அப்பால் சென்று இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு, தேசிய ஊடகத்திற்கு இங்குள்ள எழுத்தாளர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று காட்டும் பெரிய நடவடிக்கை ஒன்று தேவை. ஏன் ஓர் அடையாளமாக ஒருநாள் புத்தகக் கண்காட்சியை மூடக்கூடாது? கருத்துரிமைக்கு எதிராக செய்யப்படும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக எழுத்தாளர்கள் அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69644

நாஞ்சில்நாடன் பட்டியல்

ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள். இதில் அடிமுதல் முடிவரை அசட்டுத்தனம் என்று சொல்லத்தக்க வினாக்கள் இரண்டு. எந்த இலக்கிய விவாதத்திலும் நாலைந்து கோயிந்துக்கள் கிளம்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56339