Category Archive: கட்டுரை

”சார் பெரிய ரைட்டர்!”

  பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ”சார்!” என்றார். நானும் ”சார்?” என்றேன். ”சார்—” என்றார். ”சார் –?” என்றேன். ‘ ‘நான் அருணாச்சலம் சார்… எல்லைஸியிலே இருக்கேன்” ”நான் பீயெஸ்ஸென்னெல்லிலே”. ”ஓகே சார்” என்று போனார். அப்பாடா என்று மூச்சுவிட்டேன். ஆனாலும் சில நண்பர்களுக்கு தாங்காது. தன் வட்டத்தில் இப்படி ஒரு விசித்திர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/243

”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”

  குமரிமாவட்டம் பொதுவாக மற்ற இடங்களை விட பசுமையானது. செடிகளின் வகைகள் ஏராளம். ஆகவே இங்கே ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் வர்ம மருத்துவமும் வெட்டு மருத்துவமும் போட்டிபோட்டு வளர்ந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஊருக்கு ஊர் பத்துப்பதினைந்து வைத்தியர்கள் இருப்பார்கள். எந்த சாயாக்கடையிலும் சாயா குடிக்கும் கும்பலில் ஒரு வைத்தியர் இருப்பார். டீக்கனார், மெம்பர்,புலவர் ஆகியோரும் கண்டிப்பாக உண்டு. சர்ச்சில் எந்தப் பொறுப்பு வகித்தாலும் டீக்கனார்தான். ஒரேயொருமுறை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டாலும் வாழ்நாள் முழுக்க மெம்பரே. வில்லுப்பாட்டு தொடர்ச்சியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/177

வாடிக்கையாளர்கள்

  எங்கள் நிறுவன வளாகத்துக்குள் என் அலுவலகத்துக்கு முன்னால்  மாடியில் பில் கட்டும் அலுவலகம். வாடிக்கையாளர் சேவை மையம். அதைத்தாண்டி ஒரு கட்டிடத்தின் மாடியில் முதல் திருப்பத்தில் என் அறை. வாடிக்கையாளர் சேவைமையம் போவதற்குக் கொட்டை எழுத்துப் பலகை உண்டு. இதுபோக பாதுகாவலர் வாய்மொழியாகவும் வழிகாட்டுவார். இருந்தும் தினம் நான்குபேர் படியேறி மூச்சிரைக்க என் அறைக்கு வெளியே வந்து பாதி முகம் காட்டுவார்கள். ஒரு தாத்தா அந்த போர்டுமேலே வெற்றிலைச் சுண்ணத்து மிச்சத்தை த் தீற்றியபின் நேரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/596

மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது காவியம். சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே வந்தார். ”நல்ல கவிதை சார் இது. ரொம்ப அருமையான கவிதை. ஆனா நீங்க முழுசா சொல்லியிருக்கலாம்” ”நான் முழுக்கவிதையையும் சொன்னேனே…” ”அப்படியா? நாலுவரிதானே இருந்தது?” ”ஆமாம்.அந்தக் கவிதையே அவ்வளவுதான்” அவர் நம்பாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/344

பெயர்கள்

  தெரிந்த பெண் கைக்குழந்தையுடன் அருகே வந்தபோது ”ஜூஜூஜூ ….”என்று அதன் கன்னத்தைத் தட்டி குட்டிக்கன்னம் உப்ப முறைக்கபப்ட்ட பின் அவளிடம் ”பிள்ளை பேரென்ன?” என்றேன். ”பாகுலேயன் பிள்ளை” என்றாள். ஒருகணம் முதுகெலும்பில் ஒரு தொடுகை. அப்பாவை நான் அந்நிலையில் எதிர்பார்க்கவில்லை. கன்னத்தைவேறு தட்டிவிட்டேன். ”…போய் சோலிமயிரைப் பாருடா…நாயுடே மோனே” என்று கனத்த குரலில் எக்கணமும் அது சொல்லக்கூடும் என்று தோன்றியது. ”என்னத்துக்கு இந்த மாதிரி பேரெல்லாம்?”என்றேன். ”என்ன செய்ய? இது அவருக்க அப்பா பேரு. கேக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/307

இந்த மாபெரும் சிதல்புற்று

நத்தையின் பாதை 2 ஊட்டியில் நாங்கள் சென்ற ஏப்ரல் 2017ல் ஆண்டுதோறும் நடத்தும் இலக்கியக்கூடுகையில் பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலை வரலாற்றைப் பற்றிப் பேசினார். அதன் இறுதியில் ‘இந்தியச் சிந்தனைமுறை என ஒன்று உண்டா’ என்ற வினாவை எழுப்பிக்கொண்டு ஆனந்தக் குமாரசாமி, அரவிந்தர் வழியாக அவ்வினாவுக்கான விடை நோக்கிச் சென்றார். அதில் அவர் முன்வைத்த ஆனந்தக்குமாரசாமியின் ஒரு கருத்து இது. ‘தனிப்பட்ட வாழ்க்கைத்தரிசனம் அல்லது சிந்தனை என ஒன்று இல்லை. ஒருபண்பாட்டின் பகுதியாக, அதில் முன்னரே இருந்தவற்றின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100158

யார் அறிவுஜீவி?

ஓர் இளம்நண்பர் என்னிடம் ஒரு வினாவைக் கடிதத்தில் எழுப்பியிருந்தார். ‘அறிவுஜீவி என்ற சொல்லை அடிக்கடி விவாதங்களில் பார்க்கிறேன். சென்ற பலவருடங்களாக நானும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமகாலச் செய்திகளை வாசிக்கிறேன். அரசியலைக் கவனிக்கிறேன். இலக்கியநூல்களை வாசிக்கிறேன்.. நான் என்னை ஓர் அறிவுஜீவியாகக் கொள்ளமுடியுமா?’ நான் அதற்குப்பதில் சொன்னேன். ‘’ஒருவர் தன்னை அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்வது அவரது விருப்பம். அந்த விருப்பம்தான் மெல்லமெல்ல அவரை அறிவுஜீவி ஆக்குகிறது’ ’சரி, கேள்வியை மாற்றிக்கொள்கிறேன்.தமிழ்ச்சூழலில் ஒருவர் அறிவுஜீவி என்று கருதப்படவேண்டுமென்றால் அவரிடம் நீங்கள் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41686

மலம்

சிலசமயம் கண்ணில்படும் சில கட்டுரைகள் உருவாக்கும் ஒவ்வாமை பலநாட்களுக்கு நீடிக்கும். அத்தகைய கட்டுரைகளில் ஒன்று இது இணையம் ஒருவகைப் பொதுவெளி. முன்பு அச்சு ஊடகம் மட்டும் இருந்தபோது எப்படியோ பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டன. உண்மையில் சாதாரணமாகப் பலர் எண்ணுபவை கூட பொதுவெளியில் வராத நிலை இருந்தது. அதற்கு இன்னொரு காரணம் சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் இலட்சியவாதம் இன்னொருதலைமுறைக்காலம் நீடித்ததுதான். கடைப்பிடிக்க முடிகிறதோ இல்லையோ மானுட சமத்துவம், அடிப்படை மனிதாபிமானம் சார்ந்த முற்போக்கான இலட்சியங்களில் பரவலான நம்பிக்கை இருந்தது. காந்தி,நேரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97425

பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து

நேற்று முன்தினம் [2-4-2017] மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய தோல்பாவைநிழற்கூத்து குறித்த அனைத்துச்செய்திகளும் அடங்கிய ஆய்வுநூல் இது அ.கா.பெருமாள் அவர்களைப்பார்த்து சிலகாலம் ஆகிறது. சென்னையிலும் நாகர்கோயிலிலுமாக மாறிமாறி இருக்கிறர். சற்று களைத்திருக்கிறார். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் குமரிமாவட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றிச் செய்திசேகரித்தவர். இன்று சொந்தமாக வண்டி ஓட்டுவதில்லை. ஆய்வுப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றார். மறைந்த தமிழறிஞர்களைப்பற்றி அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97078

அமிர்தாஞ்சன் கீரை மிக்சர்

  அப்படித்தான் அந்தக்காலத்து குமுதத்தில் வந்த விளம்பரத்தை நான் படித்தேன். ஒருமுறை அப்படிப் படித்தபின் அதே தடம் மூளைக்குப் பதிந்து வேறு சொல் உள்ளே செல்லவில்லை. வாய் வழியாக அது ஊரில் பரவியது. ”அமேரிக்கக் கீரையக் கடஞ்சு செய்த சரக்குல்லா?” என்று நாகலிங்கம் மூத்தாசாரி சொன்னார். அவருக்கு காலை எழுந்ததும் ஒரு கட்டங் காப்பிக்கு மேலே அமிர்தாஞ்சன் போட்டாகவேண்டும். எங்கள் வீட்டில் எப்படியும் தினம் இருபது பேர் அமிர்தாஞ்சன் போட்டுவிடவோ செம்பருத்தி இலையில் வழித்து மடக்கிக் கொண்டுபோகவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/228

Older posts «

» Newer posts