Category Archive: கட்டுரை

உத்திஷ்டத ஜாக்ரத!

  என் அன்பிற்கினிய ஜெ,   வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன். நேற்று அந்த கூக்கு நிகழ்வில் உங்களை சந்திக்க ஆவலில் உட்கார்ந்திருந்தேன். நீங்கள் சிறிது நேரம் நேரலையில் தெரிந்தீர்கள். ஏதோ ஒன்றை பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்தீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே எங்களுடன் உரையாட மடிக்கணினியை தூக்கிக் கொண்டு வெளியில் வந்து உட்கார்ந்திருந்தீர்கள். உங்கள் பின்னால் அழகான அந்த மஞ்சள் அரளியைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130685/

இன்றைய மலர்

  வான் அலை நேற்று காலை பத்து மணி அளவில் சுகாதாரப் பணியாளர் இருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் வீடு வெளியே பூட்டியிருந்தமையால் சென்றுவிட்டு மீண்டும் வந்தார்கள். இரண்டு பெண்கள். முகக்கவசமும் கைக்கவசமும் அணிந்தவர்கள். ஒரு கணிப்பொறிப் பட்டியலை வைத்துக்கொண்டு பெயர், வயது, உடல்நிலை ஆகியவற்றை சரிபார்த்தனர். கோவிட் வைரஸ் எப்படி வரும் என்பதை ஓரிரு வரிகளில் சொல்லி, வெளியே போகவேண்டாம், கேட் உட்பட எதைத்தொட்டாலும் கை கழுவவேண்டும் என்பது போன்ற செய்திகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130529/

வைரஸ் அரசியல்

கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  ஊடகவியலாளர் என்றால் நிருபர் அல்ல. சர்வதேச ஊடகவியலாளர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர்.   கொரோனோ வைரஸின் பொருட்டு கேரள அரசு கிட்டத்தட்ட கேரளத்தையே மூடிவைத்திருக்கிறது. சபரிமலைக்கும் குருவாயூருக்கும் எவரும் வரவேண்டாம் என்று அறிவித்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வணிகவளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.அனைத்து சுற்றுலா மையங்களும் வழியடைக்கப்பட்டுவிட்டு வெறுமைகொண்டிருக்கின்றன   கேரளம் வணிகசேவையையே முதன்மைத்தொழிலாகக் கொண்டுள்ள மாநிலம். அங்கே இதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130150/

கொரோனோ

  ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள். “சார் வருந்நுண்டோ? கொறோணயல்லே? கொறோணயாணே!” நான் “எந்து கொறோணா?” என்றேன். ‘கொறோணயாணே!” நான் வருவதாகச் சொன்னேன். அவருக்கு சந்தேகம். கொறோணா இருப்பதனால்தான் வருகிறேன் என்று சொல்கிறேனா? என்ன இருந்தாலும் மலையாளி அல்லவா?. “ஞங்ஙள்கு கொறோணா இல்ல…” என்றார். நான் “எனிக்கும் இல்ல… பின்னெந்து பிரஸ்னம்?” என்றேன். “ஆ, பின்னெந்தா பிறஸ்னம்?” என்று சொல்லிவிட்டு “ஏதாயாலும் வேண்டா. நமுக்கு ஏப்ரல் கழிஞ்ஞிட்டு காணாம்” என்றார்   மலையாளிகளைப்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130124/

கடத்தற்கரியதன் பேரழகு

  என் அப்பா மொத்தமே இரண்டு சினிமாக்கள்தான் பார்த்திருக்கிறார். மலையாளப்படமான செம்மீன், தமிழ் புராணப்படமான தசாவதாரம். இரண்டாவது படத்தை பதினைந்து நிமிடம் பார்த்தார். பிடிக்கவில்லை. கதகளி ரசிகரான அவருக்கு இரணியன் கோமாளி மாதிரி பேசுவதாகத் தோன்றியது. ஆனல் செம்மீனை முழுக்க பார்த்தார். “நல்ல படம், கடல்  நன்றாக இருக்கும்” என்றார்.  அவருக்கு சினிமா என்னும் கலைக்கு கண்ணும் மனமும் பழகவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் செம்மீனை அவரால் ரசிக்க முடிந்திருக்கிறது   செம்மீன் அக்காலத்தில் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129954/

காந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்

  காந்தியின் வழிமுறை என்பது நடைமுறை லட்சியவாதம் சார்ந்தது. ‘சத்திய சோதனையில்’ அவர் பொதுப்பணத்தில் செயலபடும் அமைப்புகள் குறித்து எழுதும்போது அவற்றுக்கான தேவையை மக்கள் உணர்ந்தால் அது செயல்படும், அப்படியில்லை என்றால் அது மறைந்துவிடும், அதை செலவழித்து நிறுவக்கூடாது என சொல்கிறார். காந்திக்கு இருக்கும் இந்த நம்பிக்கை இயற்கை வைத்திய நம்பிக்கையுடன் சேர்ந்ததே. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பேரறத்தின் மீது நம்பிக்கை கொண்டார். காந்தியும் ஆயுர்வேதமும் சுனீல் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/129930/

வன்மேற்கு – கடிதங்கள்

வன்மேற்குநிலம் அன்புள்ள ஜெ உங்கள் தளத்தில் வரும் கட்டுரைகளில் பிறர் எழுதும் கட்டுரைகள் அவ்வப்போது மிகச்சிறப்பாக அமைவதுண்டு. நீங்கள் எழுதும் கட்டுரைகளைவிட ஒரு படிமேலாகவே. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஒன்று சமீபத்தில் வெளியான வன்மேற்கு பற்றிய கட்டுரை. கௌபாய்களின் உலகம் எப்படி உருவாகிவந்தது எவரெவர் அவற்றில் நல்ல எழுத்தாளர்கள் அவர்களின் தனித்தன்மை என்ன அந்த உலகின் நுட்பங்கள் என்ன என்று மிகவிரிவாகச் சொன்ன அத்தகைய கட்டுரை தமிழிலேயே முதலாவதாக எழுதப்படுகிறது என நினைக்கிறேன் கௌபாய்களின் உலகிலுள்ள வன்முறை என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128318/

வரையறுத்து மீறிச்செல்லுதல்

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,   சலிப்பும், இயலாமையும் கொந்தளிப்பும் உந்தும் மனநிலையில் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.   நேற்று திடீரென மனதில் தோன்றியது, “ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது நம்மை காத்து பரிபாலிக்கிறது நமக்கு நடந்தவையெல்லாம் நன்மைக்காகவே, ஒருவேளை இன்று அது புரியாமல் இருக்கலாம் ஆனால் காலம் அதை புரியவைக்கும் – என எண்ணும் போக்கு உண்மையல்லாமல் இருக்குமானால் என்ன செய்வது? என்னை வழிநடத்தும் கடவுள் – என்பது எத்தனை ஆணவம்..” என்று.   என் வரையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129883/

அறிவுரைத்தல் பற்றி மீண்டும்

எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா? எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2   அன்புள்ள ஆசிரியருக்கு   வணக்கம், நான் உங்கள் தொடர் வாசகன். தங்கள் வலைத்தளத்தில் நீங்கள் எழுதிய  எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? கட்டுரையை படித்த பின் அதிர்ச்சி அடைந்து உறைந்துள்ளேன்   இன்று ஒருவன் “நான் முற்றிலும் தனிமனிதன்”,  என்று சொல்வான் என்றால் அவன் ஒருவகை மனக்குறுகல் கொண்டவன், ஒரு நோயாளி என்றே பொருள்.   இவ்வரிகள் பயமுறுத்துகின்றன. வாசகர்கள் யாரவது ஆலோசனை கேட்பார்கள் என்றிருந்தேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129663/

பூனைசாட்சி

  போகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?   நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப் பற்றி எழுதும்போது அது அவர்களை அறியாமலேயே குறியீடாக ஆகிவிடுகிறது. அவர்கள் அந்த உயிரின் ஏதேனும் சில கூறுகளை ஒரு கருத்துநிகழ்வாக உணரத்தொடங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் விலங்குகளும் என்ற தலைப்பில் விரிவாகவே ஆராய்ச்சி செய்யலாம்.   அவர் சொன்னார்,  “இல்லைசார் பூனைகளைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128671/

Older posts «