Category Archive: கடிதம்

யானை – கடிதங்கள்

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழினியில் வெளிவந்த அனோஜனின் “யானை’  ஈழத்தமிழ் படைப்புலக சூழலில் முற்றிலும் வித்தியாசமாக வெளிவந்திருக்கும் கதை என்பது எனது கணிப்பு. கதை குறித்த எனது முகநூல் பதிவை இங்கு தருகிறேன்.  யானை – அனோஜன் தமிழினியின் இம்மாதப்பதிப்பில் வெளிவந்திருக்கும் “யானை” என்ற அனோஜனின் சிறுகதை சமகால இலக்கிய பிரதிகளில் மிக முக்கியமானதொன்று. இந்த கதை இரண்டு கோணங்களில் பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டியதாக கருதுகிறேன். ஒன்று, கதை மையம் சார்ந்தது. மற்றையது அனோஜனின் இலக்கியப்பார்வை சார்ந்தது. “யானை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119372

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் வாங்க இனிய ஜெயம் பொதுவாக வாசித்த நூல் குறித்துதான் உங்களுக்கு உவகையுடன் எழுதுவேன். முதன் முறையாக இனிமேல் வாசிக்கப்போகிறேன் எனும் நூல் குறித்து குதூகலத்துடன் எழுதுகிறேன். அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்கள் வசம் நீங்கள் மதிப்புரை எழுதச்சொன்ன, பேசுகையில் நீங்கள் என் வசம் குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் லகுகீச பாசுபதம் நூல் குறித்து இணையத்தில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என அலசினேன். ஆச்சர்யம் ஒரு வாசகர்,முனைவர் அந்த நூலை அறிமுகம் செய்து எழுதி இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119350

பங்கர் ராய்- கடிதங்கள்

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா பங்கர் ராய் பங்கர் ராய் – கடிதங்கள் அன்பின் ஜெ. The Lost River Paperback – Michel Danino, Saraswati: The River that Disappeared by K.S. Valdiyaவின் நூல்களோடு கோவை ஈஷா கடந்த ஆண்டு முன்னெடுத்த “நதிகளைக் காப்போம்” பிரச்சார இயக்கம் அளித்த கவன ஈர்ப்புடன் பங்கர் ராய் குறித்து தாங்கள் அண்மையில் எழுதியதை படித்தேன். இந்த நிலையில் “தண்ணீர் மனிதன்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119348

படைப்பு முகமும் பாலியல் முகமும்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, ‘முதலில் வாசித்த தங்களின் படைப்பு. அதன் பின்பு, சமூக ஊடகங்களில் தங்களைப் பற்றி தொடர்ந்து நிகழ்ந்துவரும் பரப்புரைகளைக் கவனித்தேன். தாம் ஒரு ‘இந்துத்துவ பயங்கரவாதி’, ‘ஆர் எஸ் எஸ் கைக்கூலி’ என்ற பிம்பத்தையே அப்பதிவுகள் என்னுள் உருவாக்கின. ‘ஒருத்தனுக்கு நெறைய எதிர்ப்பு இருக்குன்னா, ஒன்னு அவன் ரொம்ப நல்லவனா இருக்கணும், இல்லாட்டி ரொம்ப அயோக்கியனா இருக்கணும்’னு என் பள்ளிக்கூட வாத்தியார் சொல்லியிருக்கிறார். தங்களின் வலைதளப் பதிவுகளைப் படிக்கத் துவங்கிய பின், அவை சமூக ஊடகத்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119240

சிதம்பரம் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 2008 இனிய ஜெயம் நேற்று நாட்யாஞ்சலி. கடந்த நான்கு வருடங்களாக,நாட்யாஞ்சலி சுதி குறைந்து கொண்டே போகிறது. உள்ளே நாட்யாஞ்சலி நிர்வாகத்தில், கொள்கை வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு முற்றி, நிர்வாகம் இரண்டாக கிழிந்து,ஒன்று கோவிலுக்குள்ளும்,மற்றொன்று ராஜ வீதியிலும் என இரு வேறு தரப்பாக இயங்கத் துவங்கி இருக்கிறது. கோவிலுக்குள் இருப்பது, எதோ தீட்சிதர்கள்  நாட்யாஞ்சலி டிரஸ்ட்.வெளியே உள்ள கோஷ்டியைக் காட்டிலும்,வெளுத்து வாங்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். விளைவு. இந்த வருடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119243

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

அன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119191

கட்டண உரை இன்றும் நேற்றும்

கட்டண உரை – கடிதங்கள் மேடை உரை பற்றி… கட்டண உரை – எதிர்வினைகள் கட்டண உரை, ஐயங்கள் அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு வணக்கம். கட்டண உரை பற்றிய பதிவுகளைப் படித்து வருகிறேன். தி.மு.க மாநாடுகளில்தான் முதன்முதல் அக்காலத்தில்நுழைவுக்கட்டனம் வைத்திருந்தார்கள். தொண்டர்கள் தொகை செலுத்தி தம் தலைவர்களின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்துடன்வந்தார்கள். நாளடைவில் காலமாற்றத்தால் எல்லாமே மாறிப் போயின. நான் கடலூர் கூத்தப்பாக்கத்தில் “இலக்கியச்சோலை” என்னும் அமைப்பை நண்பர்கள் உதவியுடன் 1994-ல் தொடங்கிநடத்தி வருகிறேன்.168 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. சிவ. மாதவன், குறிஞ்சிவேலன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119130

எழுதுக!

ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். சென்ற ஆண்டு உங்கள் ஐரோப்பியப் பயணத்தின் பொழுது, நான், என் கணவர் மாதவன் இளங்கோ மற்றும் மகன் அமிர்த சாய் மூவரும் உங்களைச் சந்திக்க ஜெர்மனி வந்திருந்தோம். இன்று வரை நீங்கள் எழுதிய எல்லா நூல்களின் தொகுப்பும் வீட்டிலுள்ளது. மாதவன் உங்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர். எழுத்தாளர்களைத் தன்னுடைய துரோணர்களாகக் காண்பவர். அன்று அங்கிருந்தவர்கள் அனைவருமே தங்களின் அதிதீவிர வாசகர்கள். ஆனால்  நானோ தங்களை நிறைய வாசித்ததில்லை. தங்களின் “அறம்” சிறுகதைத் தொகுப்பையும், என் மகனுக்கு வாசித்துக் காட்டும் பொருட்டு “பனிமனிதன்” புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். தீவிர இலக்கியத்தில் எனக்குப் பரிட்சயமில்லை.  அதனால் அன்று என்னுடைய இருப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119106

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

இயற்கைக் கடலைமிட்டாய் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இன்றைய நாள் எங்கள் அனைவரின் வாழ்விலும் மீண்டும் ஒரு முக்கியமான நாள். எட்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் கேட்ட ஒரு செய்தி எங்களை நிலைகுலைய செய்தது,அது என்னவெனில் கங்கை நதியினை பாதுகாக்க கோரி 114 நாட்கள் தொடர் உண்ணாநோன்பு இருந்து இறந்து போன நிகமானந்தா எனும் 36வயது துறவி பற்றியது அது. அன்றைய நாள் முதல் ஏதேனும் ஒரு தருணத்தில் அவரினை பற்றி நினைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஹரித்துவாரின்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119246

ஈழ இலக்கியம் – கடிதங்கள்

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் குட்டுதற்கோ… போலிச்சீற்றங்கள் ஜெ ஜெயமோகனின்வாயை கொள்ளிக்கட்டையால் சூடு வைக்க சொல்லிவைக்கணும் இல்லை நாம் செய்யணும்– இது இலங்கையின் இலக்கியம் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்காக வந்த பலநூறு எதிர்வினைகளில் ஒன்று. அப்படி நீங்கள் என்ன சொன்னீர்கள்? இலங்கையில் அரசியல் – கருத்தியல் சார்ந்தே இலக்கியங்களை மதிப்பிடுகிறார்கள், அழகியல் விமர்சனம் இல்லை. ஆகவே தனக்கு ஏற்புள்ள கருத்துகொண்ட எல்லா எழுத்தாளர்களையும் ஒரே பட்டியலாகப் போட்டுவிடுகிறார்கள். இவ்வளவுதான். சரி, இதற்காகத் திட்டித்தீர்த்த கும்பலில் எவராவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119172

Older posts «

» Newer posts