Category Archive: கடிதம்

தனிமைக்கரை – கடிதங்கள்

தனிமையின் முடிவில்லாத கரையில்… அன்புள்ள ஜெ, தனிமையின் முடிவில்லாத கரையில் மீண்டுமொரு ‘மல்டிமீடியா’ கட்டுரை. புகைப்படங்கள், இலக்கியக்குறிப்புகள், பாடல், சினிமா எல்லாம் கலந்து ஒரு முழுமையான அனுபவம். எனக்கு பஷீர் எப்போதுமே முக்கியமான எழுத்தாளர். பஷீரிடம் எது முக்கியமாக இருக்கிறது? எளிமை என்று முதலில் சொல்லலாம். ஆழமான எளிமை என்றுதான் சொல்லவேண்டும். அதாவது மிக எளிமையாகச் சொல்லப்படும் விஷயங்கள். ஆனால் எல்லாமே மேலும் மேலும் ஆழமானவை. உதாரணமாக இந்த சினிமாவிலேயே மதிலுகள் சினிமாவில் வரும் காட்சி வருகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129879/

தேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்

  அன்புள்ள ஜெ   தேவதேவனின் நான்கு கவிதைத் தொகுதிகளைப் பற்றிய விமர்சனங்களை அல்லது அறிமுகங்களை அவருடைய கவிதைகள் மீதான ரசனையாகவே முன்வைத்திருந்தது அழகாக இருந்தது. அக்கவிதைகள் ஏன் கவிதையாக ஆகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக ஏராளமான புனைகதைகளைப் படிப்பவர்களுக்குக் கூட கவிதைகள் பிடிகிடைப்பதில்லை. கவிதைகளிலும் எளிமையான அரசியலைத்தான் பெரும்பாலானவர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள். அதற்கு அப்பால் சென்று அவருடைய கவிதைகளை சரியான படி வாசிக்கவும் ரசிக்கவும் இந்தக்குறிப்புக்கள் உதவின பொதுவாக நீங்கள் சொல்வதைப்போல கவிதைகளுக்கு காண்டெக்ஸ்ட் அமைப்பதுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130127/

கதைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ உங்கள் அறுபத்தொன்பது கதைகளையும் வாசித்தபிறகே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்றைக்குத்தான் முடித்தேன். நான் கொஞ்சம் மெதுவாக படிப்பவள். தமிழ் சொந்தமாக படித்ததுதான். அமெரிக்கா வந்தபிறகு. சென்னையில் தமிழே இல்லாமல்தான் படித்தேன். இங்கே வந்து ஐரோப்பிய இலக்கியம் வழியாக உள்ளூர் இலக்கியத்துக்கு வந்தவள்நான் தமிழிலக்கியத்தை வாசிக்கும்போது இரண்டு அனுபவங்கள். ஒன்று நான் அறியாத என்னுடைய சமூகச் சந்தர்ப்பச்சூழலை காட்டும் கதைகள். அவை எனக்கு தேவையாக இருக்கின்றன. அவற்றை நான் வேறெங்கும் படிக்கமுடியாது. சோ.தர்மன், இமையம் போன்றவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132287/

வேதநாயகம் சாஸ்திரியார்- இப்போது

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள் வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம் அன்புள்ள ஜெ உங்கள் கட்டுரையிலும் பின்னர் வந்த கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தபடி பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் புரசைவாக்கத்தில் முன்பு வாழ்ந்து வந்தார். அவர் மகன் கிளமெண்ட் எனது நல்ல நண்பர் இப்போது அந்த பட்டம் கிளமெண்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்தான் இன்றைய வேதநாயகம் சாஸ்திரியார். அவர் சென்னையில் கொளத்தூரில் வசிக்கிறார். அவருடைய தொடர்பு எண் என்னிடம் உள்ளது பி.இளங்கோவன் [email protected] ***

Permanent link to this article: https://www.jeyamohan.in/132560/

வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள் அன்புள்ள ஜெ, நீங்கள் கிறிஸ்தவ இசை மூன்று அடுக்குகள் என்ற பெயரில் வெளியிட்ட கட்டுரை பற்றி சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் கட்டுரையுடன் அளிக்கப்பட்டிருக்கும் ‘வேதநாயகம் சாஸ்திரியார் பாடல்கள் 1980’ என்னும் யூடியூப் வீடியோவில் அளிக்கப்பட்டிருக்கும் படம் முதல்வேதநாயகம் சாஸ்திரியார் அல்ல. அவருடைய வாரிசுகளும் தங்களை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைத்துக்கொள்வார்கள். அந்த யூடியூப் வீடியோவில் இருப்பவர் இன்றைய வேதநாயகம் சாஸ்திரியார். இப்போது அவருக்கு 90 வயது இருக்கலாம். கிறிஸ்தவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132522/

கிருமி- கடிதங்கள்

கிருமி – உமையாழ் அன்புள்ள ஜெ உமையாழின் கிருமி கதை நேரடியான பிரச்சாரக்கதை போல் இருக்கிறது. அதிலுள்ள ஒருகுரல்தான் அதை கதையாக்குகிறது. முன்பு பூச்சிகளையும் சிற்றுயிர்களையும்கூட கொல்லக்கூடாது என்று சொன்னவர் அவர் என்பது. கிருமி என இங்கே வந்து சூழ்ந்துகொள்வது ஆதிக்கம் வன்முறைதான் என்பது. நேரடியான கதையாக இருந்தாலும் அதிகாரத்தின் முன் மனிதர்கள் வெறும் உடல் மட்டுமாக மாறிவிடுவதன் இருட்டைச் சொல்லும் கதை என்ற அளவில் முக்கியமான கதை என்று சொல்வேன்.. அப்படிப்பார்த்தால் நோயும் கூட ஓர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132515/

வில்வண்டி,நெடுநிலத்துள் -கடிதங்கள்

நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன்  அன்புள்ள ஜெ நெடுநிலத்துள் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கதையை ஏன் உருவகமாக எழுதவேண்டும்? அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று உண்டு. கடந்தகாலம் அப்படியே உருவகமாக ஆகிக்கொண்டே இருக்கிறது. தொன்மம் அல்லது புராணமாக ஆகிவிடுகிறது. ஏற்கனவே நாகர்களின் வரலாறு முதல் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. அதை அங்கே கொண்டுசென்று சேர்ப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. ஒரு குலப்பூசாரி போல எழுத்தாளன் மாறும் இடம் இது என்று நினைக்கிறேன். கோயில்களில் பின்னம் வந்த மூலவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132518/

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள் வேதநாயக சாஸ்திரியின் வேதசாஸ்திரக்கும்மி அன்புள்ள ஜெ கிறித்தவ இசைப்பாடலாசிரியர்கள் என்ற உங்களுடைய கட்டுரையில்தான் வேத்நாயக சாஸ்திரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். குறிப்பான ஒரு நோக்கம் இல்லாமலேயே எனக்கு அவர் மேல் ஓர் ஈடுபாடு வந்தது. ஏன் என்று யோசித்துப்பார்த்தும் தெரியவில்லை. அவரைப்பற்றி செய்திகளை தேடிக்கொண்டிருந்தேன். நான் வெளிநாட்டில்  இருப்பதனால் இணையத்திலேயே செய்திகளை தேடி அறிய வேண்டியிருந்தது. நான் ஆரம்பத்தில் இவரை முன்சீப் வேதநாயகம் பிள்ளை என்று குழம்பிக்கொண்டிருந்தேன். பிறகுதான் தெளிவு அடைந்தேன். வேதநாயகம் சாஸ்திரியாரைப் பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130183/

நெடுநிலத்துள் – கடிதங்கள்

நெடுநிலத்துள் [சிறுகதை] அகரமுதல்வன் அன்புள்ள ஜெ வரிசையாக வந்துகொண்டிருக்கும் கதைகளில் அகரமுதல்வனின் கதை கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. உருவகக்கதை என்று சொல்லலாம். அல்லது நவீனத்தொன்மக்கதை என்று சொல்லலாம். ஈழத்தின் வரலாற்றை தொல்பழங்காலம் முதல் சமகாலம் வரை இணைக்க தொன்மம் வழியாக ஒரு முயற்சியைச் செய்திருக்கிறார். அந்த தொன்மத்தில் ஆர்வமூட்டும் அம்சமாக இருப்பவை இரண்டு விஷயங்கள் என்று தோன்றுகிறது.ஒன்று அதிலுள்ள மூதன்னை அம்சம். பூசாரியிலிருந்து வராமல் அம்மம்மாவிடமிருந்து அந்தக்கதை வருகிறது. அந்தத் தொன்மையான கதையின் சமகாலத்திலுள்ள ஊற்றாக அவர்களே இருக்கிறார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132464/

புதியகதைகள்- கடிதங்கள்

உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன் வணக்கம் ஜே, அனோஜனின் “உதிரம்” சிறுகதை வாசித்தேன். தொடர்ந்த கடிதங்களும் வாசித்தேன். அனோஜன் எனக்குப் பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அதில் எனக்குப் பெருமையும் கூட. தற்போதெல்லாம் கதைகளை வாசித்துவிட்டு மனதுக்குள் அவைபற்றி ஆராய்ந்து விட்டுக் கடந்து செல்லப்பழகிக் கொண்டுவிட்டேன். சமூக அக்கறையற்ற எழுத்துக்கள், குறிப்பாக விளிம்பு நிலைமக்களைத் தாழ்த்திப் பல எழுத்துக்கள் வந்தாலும், அது அந்த எழுத்தாளர்களின் மனநிலை என்று கடந்து போகின்றேன்.  உங்கள் எழுத்துக்கள் கூட பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132461/

Older posts «