Category Archive: கடிதம்

யா தேவி- கடிதங்கள்-10

யா தேவி! [சிறுகதை]   அன்புள்ள ஜெ   நலம்தானே?   யாதேவி, மற்றும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களை வாசித்தேன். எல்லா கோணங்களிலும் வாசித்துவிட்டார்கள். ஆனாலும் வாசிப்பதற்கு கொஞ்சம் மிச்சமிருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் உங்கள் கதைகளின் சிறப்பு என்பது   எனக்கு ஒன்று தோன்றியது. வழக்கமாக நான் வாசிக்கும் தமிழ் கதைகள் இரண்டு வகையானவை. பெரும்பாலான கதைகள் மரபை மீறுகிறோம் என்று ஒரு சவால்தன்மையுடன் எதிராக எழுதப்பட்டிருக்கும். ஒழுக்கம், செண்டிமெண்ட்ஸ் எல்லாவற்றையும் ரிவர்ஸ் செய்திருப்பார்கள். இன்னொரு வகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129854

வெயில், நகைப்பு – கடிதம்

வெயில் கவிதைகள்   அன்பு ஜெயமோகன்,     வெய்யிலின் கவிதைகள் குறித்த உங்களில் பேச்சில் ஒருபகுதி, சமகால உலகின் கடுஞ்சித்திரம் ஒன்றை ஈவிரக்கமின்றி முன்வைத்தது. ”நமக்கு நம்முடைய பிரச்சினைகள், நம்மைச் சார்ந்தவர்களுடைய பிரச்சினைகள் மட்டுமே பெரிதாகத் தோன்றுகின்றன” எனும் வாக்கியத்தில் புலப்பட்டிருந்த அக்கடுஞ்சித்திரத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை; அதேநேரம், மறுக்கவும் இயலவில்லை.     நேற்று ஒரு முதியவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக்கொண்டிருந்தார். அருகில் நான் இருந்தேன். நினைத்திருந்தால் அவரை அரசு மருத்துவமனைக்கே கொண்டு விட்டிருக்க முடியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128333

யா தேவி- கடிதங்கள்-9

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யாதேவி கதை பிப்ரவரியி 1 லேயே வந்திருக்கிறது. நான் அந்திமழை வாசிப்பவன். ஆனால் கதையைக் கவனிக்கவில்லை. இவ்வளவுக்கும் அந்திமழையை வாசிப்பவன். அச்சில் கதைகள் கவனம் பெறாமலேயே போய்விடுகின்றன. இப்போது வாசித்தேன். அதன் இலகுவான உரையாடல்போக்கு என்ன இது ஜெயமோகன் கதைபோல இல்லையே என்று தோன்றியது.   நீங்கள் அளிக்கும் நுணுக்கமான விரிவான விவரணைகள் இல்லை. எல்லாவின் தோற்றத்தைக்கூட விரிவாகச் சொல்லவில்லை. ஸ்ரீதரனின் முகமே இல்லை. அவனுடைய பெயரைக்கொண்டு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129826

யாதேவி -கடிதங்கள்-8

  அன்புள்ள ஜெ, ‘யா தேவி!’ சிறுகதை வாசித்தேன். எல்லா ஆன்ஸெல் “நீ ஒரு பெண்” என்று சொல்லும்போது உடனடியாக நினைவுக்கு வந்தது காந்தியின் சோதனைகள் குறித்து மனு சொல்வதுதான்: “நான் என் தாயின் அருகில் இருப்பதுபோல் உணர்ந்தேன்”. உண்மையில் காந்தி பற்றிப் பெருமதிப்பு கொண்டவர்களால் கூட எளிதில் கடந்துசெல்லமுடியாத இடம் அவருடைய பாலியல் சோதனைகள். ஒழுக்கக் கேள்விகள் ஒருபுறம் இருக்க, காந்தி இவற்றின் வழியாக உண்மையில் எதைத்தான் அடைந்தார்? ஏதேனும் அடைந்தாரா, அல்லது இவை தோல்வியடைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129827

யானைடாக்டர் -கடிதம்

அன்புள்ள ஜெ. சார்,   மானுட மனம் தன்னை இழந்து இயற்கையின் பிரமாண்ட பெருவெளியின் முன் ஆழ்ந்து நிற்கும் இடங்களில் ஒன்று கடல். மற்றொன்று மலைக்காடு. காட்டின் அரசன் சிங்கமெனில் பேரரசன் யானை. பார்த்து முடிக்க இயலா உணர்வையும் நெஞ்சை விம்மச் செய்யும் சிலிர்ப்பையும் தருவது காடெனில் அதன் குறியீடாக யானையே முன் நிற்கும்.   சிறு வயதில் தெரு வழியே சென்ற யானை சாணமிட்டுச் செல்ல அதை மிதித்தால் யானை பலம் கிடைக்கும் என்று யாரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128628

குறளின் மதம் – கடிதங்கள்

  சமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர் அன்புள்ள ஜெ..   குறள் அதன் ‘பக்தர்களால்’ இன்று ஒரு நவீன மதநூலாக ஆக்கப்படுகிறது.   என்ற உங்கள்,வரி யோசிக்க வைத்தது   குறளை மத நூலாக்க முயல்பவர்கள் அதன் பக்தர்கள் அல்லர்கள்.  உண்மையில் குறள் அவர்களுக்கு பிடிக்கவில்லை.   குறள் ஒரு பிற்போக்கான நூல்தான்.  ஆனால் கீதை போன்ற அப்பட்டமான பிற்போக்கான நூலை விட ஓரளவு மட்டுமே பிற்போக்குத்தன்மை கொண்ட குறள் தேவலாம் என போனால் போகிறது என்ற அளவில்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128335

இமையச்சாரல் -கடிதம்

  இமையச்சாரல் அன்புள்ள ஜெயமோஹன்,     2017இல் தங்கள் முகங்களின் தேசம் தொடரால் ஈர்க்கப்பட்டு பல கதை கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்து, தங்களுக்கு கடிதங்களும் எழுதினேன். சில கடிதங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.     இதில் குறிப்பிட வேண்டியது தங்கள் எழுத்து எங்கள் அமெரிக்க வாஸ தனிமைக்கு மருந்தாக அமைகிறது என்பது. அறுபதுகள் வரை ஆர்வமாக வாசித்து வந்த நான், அடுத்த ஐம்பது ஆண்டுகள் தமிழ் வாசிப்பை முக்காலும் விட்டு விட்டேன். எழுத்தின் தரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128353

மெய்மையின் பதியில் -கடிதங்கள்

  மெய்மையின் பதியில்… அன்புள்ள ஜெ   மெய்மையின் பதியில் வாசித்தேன். ஐயா வைகுண்டர் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பு. இன்றைக்கு ஐயா அவர்களைப்பற்றி வாசிக்கக் கிடைப்பவை எல்லாமே அந்த நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்டவை. அவை புராணம் கலந்த பக்திமிகுந்த பதிவுகள். அதற்கு வெளியே கிடைப்பவை இடதுசாரிகள் அவரை ஒரு சாதியத்தலைவர், சமூகப்போராளி என்ற அளவில் மட்டுமே சுருக்கி எழுதிய குறிப்புகள்.   இன்றைய வாசகனுக்கு ஐயா அவர்களின் வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள், அன்றைய வரலாற்றுச்சூழல் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128356

கண்ணீரைப் பின்தொடர்தல் -கடிதம்

கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க   அன்புள்ள ஜெ.   நூலகத்தில் புத்தக  ரேக்குகளை துழாவும்போது உங்களது ஆழ்நதியைத் தேடி…மற்றும் கண்ணிரை பின் தொடர்தல் ஆகிய இரு நூல்களும் கிடைத்தன.  இவை இரண்டும்  தற்போது அச்சில் இல்லாத. நூல்கள் என நினைக்கிறேன்.    கண்ணீரை பின் தொடர்தல் இன்று புதிய வாசகர்கள் நிறையபேர் வாசித்திருக்கமாட்டார்கள். சமீபத்தில் வாசித்த அக்னி நதி, மீசான் கற்கள், முன்பு வாசித்த நீலகண்ட பறவையைத் தேடி, ஆரோக்ய நிகேதனம், பாத்துமாவின் ஆடு என நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129751

எதிர்விமர்சனம் -கடிதம்

எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,   எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… மீதான என் பார்வை..   நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.   கல்லூரி இறுதிவருடத்தில், வளாகத்தில் நிகழ்ந்த நேர்முகத் தேர்வில் எனது முதல்  பணிக்கான ஆணையை பெற்றேன். ஹைதராபாத்-சிகந்தராபாத் இரட்டை நகரின் மையத்தில் அமைந்திருந்த ஒரு ஐந்து மாடி கண்ணாடி கட்டிடத்தில் பணியிடம். சில நாட்கள் மச்சவதாரத்தில் இருந்து, இன்று  ஹுசைன் சாகர் ஏரியின் நடுவில், எழுந்து நின்று ஆசியளிக்கும் புத்தரின் பார்வையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128775

Older posts «