Category Archive: எழுத்து

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வளர்ந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இப்பத்தாண்டு நிறைவை ஒட்டி நம் நண்பர்கள் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டுவிழா ஒன்றை நடத்தலாம் என எண்ணினோம். இதில் இந்த ஆண்டு தங்கள் முதல்நூலை வெளியிடும் நண்பர்கள் பத்துபேரின் நூல்களை அறிமுகம் செய்வது எங்கள் நோக்கம். முதல் சிறுகதைத் தொகுதிகள், மொழியாக்க நூல்கள் இதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128835/

சராசரி நடையும் புனைவுநடையும்

அன்புள்ள ஜெ, நலம்தானே? நான் தமிழில் எழுதத்தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படைப்புக்களை இங்கே சில மூத்த வாசகரகளிடம் அளித்தேன். அவர்கள் வாசித்துவிட்டு நான் என் தமிழறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். சொற்றொடர்களை வாசித்து அவற்றிலுள்ள இலக்கணப்பிழைகளையும் பொருள்மயக்கங்களையும் சுட்டிக்காட்டினார்கள். அவர்கள் சொல்வதுபோல ஒருவரியை தனியாக எடுத்துப்பார்த்தால் அவற்றில் அர்த்தம் மாறுபடுவது எனக்கும் தெரிந்தது. ஆனால் நான் எழுத நினைக்கும் எழுத்து மனத்தின் ஓட்டத்தைச் சொல்வது. இவர்கள் சொல்வதுபோல எண்ணி கூட்டி எழுதினால் அது செயற்கையாக அமைகிறது. நீங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128596/

அமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்

  அமேசான் அமேசான் குப்பைகள் அமேஸான் – கடிதம்   அன்புள்ள ஜெமோ, சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் ‘திராவிட இயக்கத்தவர் அல்லாதவர்கள்’ ஒரு நாவலை எழுதவோ வாசிக்கவோ பயில்வதற்கு இருநூறாண்டுகள் ஆகும் என்று சொல்லியிருந்தார். அதை அவர் திமுகவினர் அணி அமைத்து செயல்பட்டு ,அவர்களில் ஒருவரின் நூலை அமேசான் கிண்டிலில் வெற்றிபெறச் செய்யும் முயற்சிக்கு எதிரான விமர்சனத்திற்குப் பதிலாகச் சொன்னார். உங்கள் கருத்து என்ன? நீங்களும் அமேசான் போட்டி பற்றி கடுமையான கருத்தைச் சொல்லியிருந்தீர்கள் என்பதனால் இதைக் கேட்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127393/

எழுத்துரு ஓர் எதிர்வினை -2

எழுத்துரு ஓர் எதிர்வினை -1 [தொடர்ச்சி]   அன்புள்ள ஆசிரியருக்கு, அதிவீரராம பாண்டியன் எழுதிய வெற்றி வேற்கையின் இந்தப்பாடல் பெரியார் முன் வைத்த தமிழ் எழுத்துரு நிலை பற்றிய அருமையான உவமையாகும். பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே! மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால் பொய் போலும்மே பொய் போலும்மே! //பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் தனது பேச்சாற்றலால் பொய்யையும் உண்மையாக எண்ணும் படி சொல்லக் கூடும். உண்மையே பேசக் கூடியவனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127167/

அமேசான்

அமேசான் குப்பைகள்   அமேசான் ஒரு போட்டி – பென் டு பப்ளிஷ்- நடத்துகிறது. அச்செய்தியை என் இணையதளத்தில் பிரசுரித்து அதை ‘ஊக்குவிக்க’ வேண்டும் என்று ஒர் இளம் எழுத்தாளர் எழுதியிருந்தார். நான் அவருக்கு எழுதிய பதில் இது.   இந்த அமேசான் போட்டிகளை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளக்கூடாது என நினைக்கிறேன். அதை அவர்கள் நடத்துவதும் சிலர் வாசிப்பதும் பிரச்சினை இல்லை.ஆனால் இலக்கியச்சூழலில் அதை முன்வைப்பதும் கொண்டாடுவதும் பிழை. இலக்கியத்திற்கும் அழிவு கொண்டுவரும்   ஏனென்றால் அவர்கள் மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125980/

எழுதுக!

ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். சென்ற ஆண்டு உங்கள் ஐரோப்பியப் பயணத்தின் பொழுது, நான், என் கணவர் மாதவன் இளங்கோ மற்றும் மகன் அமிர்த சாய் மூவரும் உங்களைச் சந்திக்க ஜெர்மனி வந்திருந்தோம். இன்று வரை நீங்கள் எழுதிய எல்லா நூல்களின் தொகுப்பும் வீட்டிலுள்ளது. மாதவன் உங்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர். எழுத்தாளர்களைத் தன்னுடைய துரோணர்களாகக் காண்பவர். அன்று அங்கிருந்தவர்கள் அனைவருமே தங்களின் அதிதீவிர வாசகர்கள். ஆனால்  நானோ தங்களை நிறைய வாசித்ததில்லை. தங்களின் “அறம்” சிறுகதைத் தொகுப்பையும், என் மகனுக்கு வாசித்துக் காட்டும் பொருட்டு “பனிமனிதன்” புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். தீவிர இலக்கியத்தில் எனக்குப் பரிட்சயமில்லை.  அதனால் அன்று என்னுடைய இருப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119106/

இலக்கியத்தில் அன்றாடம்

அன்புடன் ஆசிரியருக்கு பிரதமனுக்கு நீங்கள் எழுதிய சிறிய முன்னுரை ஒருவகையான நிறைவை அளித்தது. எப்போதுமே உங்களுடைய நூல் முன்னுரைகள் ஒரு தொகுப்புத் தன்மையை கொண்டிருக்கும். விஷ்ணுபுரத்தின் முன்னுரைகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன். நேற்று பிரதமன் தொகுப்பின் அட்டைப்படத்தை நண்பர் ஒருவர் பகிர்ந்து இருந்தார். இந்த நூலுக்கான உங்களது முன்னுரை எவ்வாறு இருக்கும் என மீள மீள யோசித்தேன். ஆனால் அந்த சிந்தனைக்குத் தொடர்பில்லாததாக அதேநேரம் மிகக் கச்சிதமாக இச்சிறுகதைகளை எழுத வேண்டிய தேவையை இம்முன்னுரை சொல்லி விடுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117880/

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118283/

அறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்

அறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி அன்புள்ள ஜெ, அரூ இணைய இதழில் வெளியாகிய அறிவியல் புனைகதைகளைப் பற்றிய உங்களுடைய விரிவான நேர்காணலை வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய மிகப்பெரிய தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. ஏற்கனவே விசும்பு தொகுப்பின் முன்னுரையில் மிகக்கூர்மையாக அதன் எல்லைகளை விவாதித்து எழுதி இருந்ததே பெரிய திறப்பைக் கொடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இங்கு எத்தனை விவாதங்கள் உரையாடல்கள் நிகழ்ந்தன என்று தெரியவில்லை. ஆனால், தமிழில் நிகழ்ந்த அறிவியல் புனைகதைகள் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117725/

நீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு

சென்ற ஆண்டு பொங்கல் தினத்தன்று இலக்கிய வாசகரான ஒரு நண்பருடன் தஞ்சைப் பிராந்தியத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேச்சு பின் தொடரும் நிழலின் குரல் நாவலை நோக்கித் திரும்பியது. கட்சித் தேர்தலுக்கு முன் நிகழும் கொடியேற்ற நிகழ்வில் கே.கே.எம்-மை கொடியேற்றச் சொல்வார்கள். ஏற்றுவார். பேசக் கூறுவார்கள். அவர் புரியாமல் ‘’என்ன பேச’’ என்பார். ‘’கொடியேத்தியிருக்கீங்க தோழர். பேசுங்க’’ என்பார்கள். ‘’பன்னிமலை எஸ்டேட்-னு ஒரு இடம்’’ என்று தொடங்குவார் கே.கே.எம். அந்தப் பகுதியை கிட்டத்தட்ட வரிவரியாக மனப்பாடமாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117766/

Older posts «