Category Archive: எதிர்வினை

அந்த டீ – ஒரு கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அன்பின் ஜெ.. உங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையைப் படித்து வருகிறேன். சில விலகல்கள்: பால்: முதல் கட்டுரையில், நீங்கள் குடித்த டீ ஒரு வாய் அருந்தியதுமே தெரிந்துவிட்டது அது பால் அல்ல, செயற்கைப்பால். இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும் பால் பற்பல லட்சம் லிட்டர். அத்தனை பால் கறக்கும் மாடுகள் எங்கிருக்கின்றன என்று தேடினால் இப்போதெல்லாம் பசுக்கள் எங்குமே தென்படுவதில்லை. வட இந்தியாவிலேயேகூட எருமைகளும் பசுக்களும் அருகிவிட்டன. சென்னை நகரம் அருந்தும் பால் எவ்வளவு இருக்கும்! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118217

குட்டுதற்கோ…

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் அன்புள்ள ஜெ ஈழ எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு வந்த கூச்சல்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த இருநூறுபேர் எங்கேயும் இருப்பார்கள். அவர்கள் அனைவருமே ஒன்றேபோலத்தான் கூச்சலிடுவார்கள். இதில் ஈழம் என்ன தமிழ்நாடு என்ன? ரசனை சார்ந்த அளவுகோல் போல இவர்களைப் பயமுறுத்துவது எதுவும் இல்லை. கு.அழகிரிசாமி மலேசியா பற்றிச் சொன்னபோதும் சரி, வண்ணநிலவனும் பகீரதனும் இலங்கை பற்றிச் சொன்னபோதும் சரி இந்த கூச்சல்கள்தான் எழுந்தன. ஆனால் இலக்கியத்தில் அழகியல்தரம் என ஒன்று உண்டு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117904

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

வணக்கம் ஜெயமோகன் அவர்களே! எனது பெயர் இளையதம்பி தயானந்தா புலம்பெயர்ந்த ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளன். தற்போது லைக்காவின் ஆதவன் தொலைக் காட்சி/வானொலியில் பணியாற்றுகிறேன். கடந்த ஆண்டு மீண்டு நிலைத்த நிழல்கள் நூல் வெளியீட்டில், நீங்கள் ஆற்றிய  உரையில், ஈழத்து படைப்பாளிகள் பற்றிய உங்கள் குறிப்பு, ஏனோ திடீரென சமூக வலைத் தளத்தில் ஈழத் தமிழர்களால், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். ஆதவன் வானொலியில் என்னால் செய்யப்படும் வாராந்த நேரலை நிகழ்ச்சியில் இந்த விடயத்தை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117861

எஸ்.ரா. – கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்   அன்புள்ள ஜெ, எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றிய உங்கள் தடம் இதழ் கட்டுரை அருமையானது. என் ஆதர்ச எழுத்தாளர் அவர். அவரைப்பற்றி முன்பும் நீங்கள் நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தீர்கள். தமிழில் சமகால எழுத்தாளர் ஒருவரைப்பற்றி இப்படி விரிவான ஆய்வாக இன்னொரு எழுத்தாளர் எழுதியதில்லை. இந்தக் கட்டுரைகளை மட்டுமே திரட்டினால் ஒரு சிறிய நூல் வடிவில் வெளியிட்டுவிடமுடியும் தடம் இதழில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை எஸ்.ராமகிருஷ்ணனை விரிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முன்வரைவாக உள்ளது. இந்தக்கட்டுரையை முன்னுரையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117171

வரைகலை நாவல்கள் – கடிதம்

மங்காப் புகழ் புத்தர் இனிய ஜெயம் மங்காப் புகழ் புத்தர் பதிவில் //வரைகலை நாவல்கள் [graphic novel] மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம். காட்சிக் கோணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நான் வாசிக்கையில் ஒவ்வொரு வாசிப்புக்கும் புனைவுகள் அளிக்கும் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.   வரைகலை நாவல்கள் அவற்றை நம் சார்பில் அவையே முற்றாக வகுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117167

பிரதமன் கடிதங்கள் 7

  பிரதமன்[சிறுகதை] அன்புள்ள ஜெ     உங்கள் சமீபத்திய சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது பிரதமன். எனக்கு மிகவும் பிடித்த சுவைகளில் ஓன்று பிரதமன். என் அம்மா வைக்கும் பிரதமனை விட என் அக்காவின் மாமியார்  வைப்பது எனக்குப் பிடிக்கும். அதற்க்குக் காரணம் அவர் சரியாக சேர்க்கும் அந்த தேங்காய்ப்பால் தான் போல.  இதை படித்தவுடன் பிரதமனின் வாசம் மெல்ல எழுந்து வந்தது.   இயல்பாகவே மனம் இந்த கதையை அயினிப்புளிக்கறி கதையுடன் ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் இந்த கதை அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115532

மலம்

சிலசமயம் கண்ணில்படும் சில கட்டுரைகள் உருவாக்கும் ஒவ்வாமை பலநாட்களுக்கு நீடிக்கும். அத்தகைய கட்டுரைகளில் ஒன்று இது இணையம் ஒருவகைப் பொதுவெளி. முன்பு அச்சு ஊடகம் மட்டும் இருந்தபோது எப்படியோ பேச்சுக்கள் தணிக்கை செய்யப்பட்டன. உண்மையில் சாதாரணமாகப் பலர் எண்ணுபவை கூட பொதுவெளியில் வராத நிலை இருந்தது. அதற்கு இன்னொரு காரணம் சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் இலட்சியவாதம் இன்னொருதலைமுறைக்காலம் நீடித்ததுதான். கடைப்பிடிக்க முடிகிறதோ இல்லையோ மானுட சமத்துவம், அடிப்படை மனிதாபிமானம் சார்ந்த முற்போக்கான இலட்சியங்களில் பரவலான நம்பிக்கை இருந்தது. காந்தி,நேரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97425

செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!

எங்கள் மக்கள் கவிஞன் இன்குலாப்பை இழிவுபடுத்தி வசைபாடும் செயமோகனே! நீயார்?அவரது மேன்மையை உரசிப் பார்க்க.***எங்கள் மண்ணின் பாவலன் இன்குலாப் ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் இன்குலாப் சேரியில் ஒதுக்கப்பட்ட மக்களின் தோழன் இன்குலாப். *** ஆமாம் செயமோகா…. உனக்கும் அவருக்கும் என்ன பகை? உனது “விசுணுபுர”த்து மக்களுக்காக எங்கள் பாவலன் பாடவேண்டுமா? அல்லது நீ “வெண்கொற்றம்” புடிக்கும் காவிக் கூட்டத்திற்கும் சாதிவெறிபிடித்த சனாதனிகளுக்கும் மேட்டிமை நிறைந்த உனது தொண்டரடிப் பொடியாகளுக்கும் வெண்சாமரம் வீசவேண்டுமா? எங்கள் கவிஞரிடம் என்ன எதிர்பார்ப்பு உனக்கு? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94409

» Newer posts