Category Archive: எதிர்வினை

கட்டண உரையும் வருவாயும்

சென்னையில் ஒரு கட்டண உரை கட்டண உரையின் தேவை அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் விழாவுக்கு கோவைக்கு ஐந்து ஆண்டுகளாக வந்துகொண்டிருப்பவன் நான். மாணவனாக வரத் தொடங்கினேன். இப்போது வேலையில் இருக்கிறேன். இன்றுவரை ஒரு பைசாகூட அளித்ததில்லை. சென்றுவருவதற்கான பேருந்துக் கட்டணத்தை மட்டுமே நான் செலவிட்டிருக்கிறேன். கோவையில் இரண்டுநாள் தங்கி ஆறுவேளை சாப்பிட்டு நாற்பது மணிநேரம் இலக்கியம்பேசி திரும்பியிருக்க்கிறேன். வரும் ஆண்டில்தான் நிதியளிக்கவேண்டும் என நினைத்திருக்கிறேன். என் நண்பன் ஒருவன் உங்கள் கட்டண உரையைப் பற்றிய அறிவிப்பைச் சுட்டிக்காட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118472

முச்சந்திக் கூச்சல்

அன்புள்ள ஜெ, சென்ற சிலநாட்களாகவே முகநூலில் இருந்து தனிப்பட்ட நண்பர்கள் வரை ஒரே சச்சரவு. இவரை எப்படி அவர் அழைக்கலாம், இவரை வைத்து எப்படிக் கூட்டம் நடத்தலாம், இவரை எப்படி பக்கத்தில் உக்கார வைக்கலாம் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்ன இது ஒரே சலம்பலாக இருக்கிறதே என்று பார்த்தால் மொத்தமாகவே ஒரு மூன்றுநான்குபேர் முகநூலில் கிடந்து இந்தச் சத்தத்தை உருவாக்குகிறார்கள். இத்தனைக்கும் எதையும் படிப்பவர்களோ, இதுவரை சொல்லும்படி எதையும் எழுதியவர்களோ இல்லை. ஒருவகையான மூர்க்கமான வேகம் கொண்டவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118606

குர்ஆன் – ஒரு கடிதம்

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புள்ள ஜெயமோகன், உங்கள் எழுத்துகளை விரும்பி படிக்கும் நான் ஒரு சூஃபி சிந்தனை பள்ளியைச் சார்ந்தவன். கீதையை எப்படி படிப்பது? ஏன்? என்ற தலைப்பில் நீங்கள் பகிர்ந்திருக்கும் கருத்துகளை  நேற்று படித்தேன். அதில் உள்ள கீழ்கண்ட வரிகளின் தொடர்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். / நான் பலவருடங்கள் தேடலுடனும், கண்ணீருடனும் நான்கு மதங்களின் மூலநூல்களை கற்றுள்ளேன். இன்றும் அவை என் மேஜைமீது உள்ளன. என் கருத்தில் அவை அனைத்துமே பெருங்கருணை, உலகைத்தழுவ முனையும் நீதியுணர்வு ஆகியவற்றின் மகத்தான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118510

பால் – பாலா கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் பால் – மேலும் கடிதங்கள் அன்பின் ஜெ, எதிர்வினைகளைப் படித்ததும் சிரித்துவிட்டேன். நன்றி! நீங்கள் உத்திரப் பிரதேசம் செல்லும் வழியில் ஒரு கடையில் டீக் குடிக்கிறீர்கள். குமட்டுகிறது. கலப்படம் செய்யப்பட்ட பால் எனத் தோன்றுகிறது. உடனே உங்கள்கட்டுரையில் இருந்து கருத்துக்கள் புறப்படுகின்றன. இத்தனை பேர் குடிக்கும் பாலுக்கான மாடுகள், சாணி வைக்கோல் இவை எல்லாம் எங்கே என வியக்கிறீர்கள். நாம் அருந்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118557

பால் – ஒரு கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் பால் – மேலும் கடிதங்கள் அன்புள்ள ஜெமோ, பல விவாதங்களில் ஒரு குறிப்பிடட “இரு தரப்புகள்” எல்லா விவாதங்களிலும் இருக்கிறது. விவாத அடிப்படையில் இரண்டுமே ஒருவகையில் ஏற்புடையதாகவும் இருக்கிறது. “உள்ளிருந்து விபரங்கள் அடிப்படையில் பேசுபவர்கள்” “வெளியில் இருந்து அனுபவ அடிப்படையில் பேசுபவர்கள்” எந்த ஒரு விவாதத்திலும் வித்தியாசம் “உள்ளிருந்து பேசுபவர்கள்” மற்றும் “வெளியில் இருப்பவர்கள்” என்பது மட்டும்தானா என்றே பல சமயங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118555

பால் – மேலும் கடிதங்கள்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் பால் – கடிதங்கள் திரு ஜெயமோகன் அவர்களுக்கு பால் பற்றிய கடிதங்களை பார்த்தவுடன் எனக்கு யாரவது தயிர் பற்றியும் எழுத மாட்டார்களா என்று தோன்றியது. உண்மையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் எதுவுமே இயற்கையாக கிடைக்கும் அல்லது தயாரிக்கப்படும் பால், தயிர் போல தோற்றத்தில் இருக்குமே தவிர தரம், மணம், சுவையில் இயற்கையாக கிடைக்கும் பொருளுக்கு நிகராக இருக்க முடியாது. இது பால், மஞ்சள் தூள் முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118189

சைவம் – கடிதம்

அலகிலா ஆடல் – சைவத்தின் கதை சைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மிகுந்த நலம். நலம் விழைகிறேன். உங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். சைவத்தின் இன்றைய நிலை தொடர்பான தங்கள் கூற்றில் முழு உடன்பாடு உண்டு. ‘லகுலீச பாசுபதம்’ நூல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த இரு நூல்களையும்  விரைவில் வாசிக்கவேண்டும்.இன்றைய சூழலில் சைவம்  பற்றிப் பேசுபவர்களில் கருத்தில் கொள்ளப்படவேண்டியவர் என்று இலங்கை ஜெயராஜ் அவர்களை விதந்து கூறியிருக்கிறீர்கள்.  கம்பவாரிதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118336

பால் – கடிதங்கள்

நீர்க்கூடல்நகர் – 1 அந்த டீ – ஒரு கடிதம் அன்புக்குரிய ஜெ அவர்களுக்கு, தங்கள் நலமறிய விழைகிறேன். நீர்க்கூடல்நகர் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு பாலா அவர்கள் எழுதிய எதிர்வினையோடு நான் சில விஷயங்களில் மாறுபடுகிறேன். பெரிய தனியார் நிறுவனங்களோ அல்லது அரசு நிறுவனங்களோ பாலில் கலப்படம் செய்வது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் வேறு வகையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நெருங்கிய நண்பரும் உறவினருமான ஒருவர் தன்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118318

கும்பமேளா கடிதங்கள் – 2

நீர்க்கூடல்நகர் – 6 நீர்க்கூடல்நகர் – 5 நீர்க்கூடல்நகர் – 4 நீர்க்கூடல்நகர் – 3 நீர்க்கூடல்நகர் – 2 நீர்க்கூடல்நகர் – 1 அன்புள்ள ஜெ உங்கள் கும்பமேளா பதிவுகள் மிக வியப்பூட்டுபவை. பலமுறை வாசித்தேன். அவற்றிலுள்ள வர்ணனைகளுக்காகவே வாசிக்கவேண்டியிருந்தது. இருளில் ஓடும் கங்கையின் வர்ணனை எங்கே ஆழமானதாக ஆகிறதென்றால் கரையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த கும்பமேளாவை அது அறியாது என்று சொல்லுமிடத்தில்தான். போகிறபோக்கில் அப்படி ஏராளமான சித்திரங்கள் வந்தபடியே இருந்தன. அதிலும் பாபா தன் கூடாரத்துக்குக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118258

அந்த டீ – ஒரு கடிதம்

நீர்க்கூடல்நகர் – 1 அன்பின் ஜெ.. உங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையைப் படித்து வருகிறேன். சில விலகல்கள்: பால்: முதல் கட்டுரையில், நீங்கள் குடித்த டீ ஒரு வாய் அருந்தியதுமே தெரிந்துவிட்டது அது பால் அல்ல, செயற்கைப்பால். இந்தியா முழுக்க இன்று அருந்தப்படும் பால் பற்பல லட்சம் லிட்டர். அத்தனை பால் கறக்கும் மாடுகள் எங்கிருக்கின்றன என்று தேடினால் இப்போதெல்லாம் பசுக்கள் எங்குமே தென்படுவதில்லை. வட இந்தியாவிலேயேகூட எருமைகளும் பசுக்களும் அருகிவிட்டன. சென்னை நகரம் அருந்தும் பால் எவ்வளவு இருக்கும்! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118217

Older posts «

» Newer posts